சரவெடி மார்ச் 2020
வாஞ்சிநாதன்
***********************
வீட்டுக்கு
வீடு தெருப்பக்கம் போக முடியாமல் கணினி/கைப்பேசிக்கருகில் அமர்ந்து
கொண்டிருக்கும் ஆர்வலர்களே! இதோ வந்துவிட்டது பொங்கலிலிருந்து இரண்டு
மாதத்தில் இன்னொரு சரவெடி.
உங்களால் இதுவரை விடுவிக்க இயலாத புதிர்களை வலைக்கட்டத்தில் உரசிச் செல்லும் மற்ற விடையின் உதவியால் கண்டுபிடிக்கலாம்.
குறுக்காக
5. வாலில்லாக் காளை சாணி? (2)
6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)
7. அழகான காட்டுப்புற மார்வாடி பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)
8. ஒரு நாய் விளையாட்டில் வெல்வது சிம்ம இடை பரிமாற்றம் (3)
9. கரோனா தொற்றியதும் முகத்தை மறைத்துச் செய் (3)
11. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் முனை வைத்தாள் (3)
13. முன்னாள் மீன் முட்டையில் இருப்பதா மாட்டு வால்? (4)
16. மாதவி ஆசிரியரின் ஆயுதம்? (7)
17. சொல் வாத்தியம் (2)
நெடுக்காக
1. மரியாதையாகக் கால் கால் வைத்தாள் கள்ளி (4)
2. துவை, மனம் காயாதே, காமம் இல்லாத மாற்றம் அவசியம் (5)
3. நடத்தை இல்லாமல் செய் (3)
4. அச்சத்துடன் நாணம் இடை தழுவ ஊரடங்கு உத்தரவின் போது
செய்யக் கூடாதது (4)
10. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம் இஸ்லாமியப்
பெண்ணுக்கு அடையாளம் (5)
12. நிறைய பேரும் ஓரளவில் ஒரு பாதி விழுங்கினர் (4)
14. ராகவனால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர் நண்பர்
பாதி முதுமையடையாதவர் (4)
15. மத்யம நிலையுடன் இருக்கும் ராகம் (3)
Comments
-Nagarajan Appichigounder.
Advise how to replace a cell letter with an alternative letter
-Raja
Can you kindly clarify my query since you have found the grid working perfectly
Letter. Even back space can be used
And for people who are confused about removing a wrong letter. Just press the backspace button (the button after ழ) in the keypad. It will clear the letter in the selected cell.