Skip to main content

Posts

Showing posts from January, 2020

விடை 3963

இன்று காலை வெளியான வெடி: மசி போன சுமைக்கு ஐந்து இட்ட குறை (4) அதற்கான விடை: சுருக்கு   =  சுக்கு + ரு சுக்கு = சுமைக்கு - மை ( மை = மசி) ஐந்து = ரு (தமிழில் எண்ணுரு) சுருக்குதல்  = குறைத்தல்  ( பத்திரிகையின்  ஆசிரியர் எட்டுபக்கக் கதையை ஆறு பக்கமாகச் சுருக்கினார்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3962

இன்று காலை வெளியான வெடி: சுவர் மறைக்கா வீட்டின் பகுதி உயரம் குறைவா? பாரம் குறைவு (5) அதற்கான விடை:  தாழ்வாரம் = தாழ்வா + ரம் தாழ்வா = உய்ரம குறைவா? ரம் = (பா) ரம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். தாழ்வார மெங்கிலும்  தங்கம் மினுமினுக்கும் கீழ்வான் கதிரொளியின் கீற்று.

உதிரிவெடி 3962

 உதிரிவெடி 3962  (ஜனவரி 30, 2020) வாஞ்சிநாதன் ********************* சுவர் மறைக்கா வீட்டின் பகுதி உயரம் குறைவா? பாரம் குறைவு (5) Loading…

விடை 3961

இன்று காலை வெளியான வெடி: வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4) அதற்கான விடை:  செழிப்பு = செப்பு + ழி செப்பு = சொல்  (லு) ழி = கொழிக்கும் - குருகும் குருகு = கொக்கு கபிலரின் குறுந்தொகைப் பாடல்: யாரும் இல்லை; தானே கள்வன்; தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!” ஏ கே ராமனுஜன் மொழிபெயர்ப்பு: (The Interior Landscape) Only the thief was there,no one else and if he should lie, what can I do? There was only a thin legged heron standing on legs as millet stems and looking for lampreys in the running water when he took me. திருவெம்பாவையில் குறிப்பிடப்படும் குருகு இந்த திரைப்படப்பாடலில் தொடக்கத்தில் இடம் பெறுகிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3961

உதிரிவெடி 3961  (ஜனவரி 29, 2020) வாஞ்சிநாதன் ********************* வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4) Loading…

விடை 3960

இன்று காலை வெளியான வெடி: ஒப்பற்ற மதியால் யானையை அடக்கலாம் (4)  அதற்கான விடை:   நிகரிலா = நிலா + கரி மதி = நிலா யானை =  கரி ஒப்பற்ற = நிகரிலா இன்றைய வெடிக்கு வழக்கத்திற்கு அதிகமாக கருத்துரைகள் காலையிலே வந்திருப்பதைப் பார்த்தேன். இது விசேஷமான சிக்கல்களேதும் இல்லாமல் அமைக்கப்பட்டதுதான்.  வழக்கமான வழிமுறைகள் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேலெழுந்தவாரியாகப் படிக்கையில் தோன்றும் பொருளால் இதற்கு அதிக வரவேற்பு. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய பின்னர் சிலர் இன்றைய புதிரைப் படித்து யானையை அடக்க நினைத்தால் விபரீதம் நிகழலாம்.  அதற்கு நான் பொறுப்பல்ல. மதியால் அடங்கும் மதயானை என்று புதிரின் பொருளை மனதில் பதிந்தோர் அதிராது அமர்ந்தனர் தோற்றபின் சொல்வர் விதியால் நிகழ்ந்த வினை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 3959

இன்று காலை வெளியான வெடி: கெட்டுப்போன கனி பின்னே முட்டுக்கட்டை  தோலுரித்து வந்தது (6) அதற்கான விடை: பழுதடைந்த = பழு + தடை + ந்த ( பழுதடைந்த  அந்தப் பழங்காலத்  தொலைக்காட்சிப் பெட்டியை அவன் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்) பழு = கனி (கனிந்த மாதுளை  = பழுத்த மாதுளை என்ற சமன்பாட்டில் இருபுறமும் மாதுளையை நீக்கி இறந்த காலப் பெயரெச்சத்திலிருந்து  வேர்ச்சொல்லைப் பெறவும்!) தடை = முட்டுக்கட்டை ந்த = வந்தது என்ற சொல்லின் "தோலை"யுரித்த வடிவம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3959

உதிரிவெடி 3959 (ஜனவரி 27, 2020) வாஞ்சிநாதன் ********************** கெட்டுப்போன கனி பின்னே முட்டுக்கட்டை  தோலுரித்து வந்தது (6) Loading…

விடை 3958

இன்று காலை வெளியான வெடி: கிணறு உள்ளிருப்பதை வைத்து  வெளியே வரவை செலவை எவ்வளவு என்று பார் (5)     அதற்கான விடை:  கணக்கிடு = ண + கக்கிடு ண = கிணறு 'உள்ளே' இருப்பது கக்கிடு = வெளியே வரவை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3958

உதிரிவெடி 3958 (ஜனவரி 26, 2020) வாஞ்சிநாதன் ********************* கிணறு உள்ளிருப்பதை வைத்து  வெளியே வரவை செலவை எவ்வளவு என்று பார் (5)   Loading…

விடை 3957

இன்று காலை வெளியான வெடி: கரும்புடன் நீ தோற்றமளிக்கிறாய் மன்மதா!  சிட்டு வாலொடியப் படபடப்பாள் (4) அதற்கான விடை:   காமாட்சி   = காமா (மன்மதா) +   சிட் காஞ்சியில் காமாட்சி கரும்புடன் தோற்றமளிப்பதை ஏதோ  சாமி படக் காலண்டரில்  பார்த்து  தெரிந்து கொண்டது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 203

Today's clue: Prevent introduction causing initial  entry (8)  (For nearly 10 minute this clue appeared with wrong indication of the  number of  letters as 7). Its solution: PRECLUDE = PRELUDE (introduction)  + C (initial letter of causing) Visit this page to see the list of solutions received for this.

உதிரிவெடி 3957

உதிரிவெடி 3957  (ஜனவரி 25, 2020) வாஞ்சிநாதன் *********************  தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில்  உலா என்று ஒரு வகை.  திருவிழாவில்  வீதியில் உலாவரும் உற்சவரின் அலங்காரத் தோற்றத்தை விவரித்துப் பாடுவது.   உ வே சா தன்னுடைய சுயசரிதையில் ஒரு விஷயம் குறிப்பிடுகிறார்.  திருவிடை மருதூரில்  நடந்த உலாவில்  பெண்கள்  உற்சவர் அழகில் மயங்கினார்களாம். அப்புலவருக்கு வேண்டாத  ஒருவர் அவ்வூர் பெரிய மனிதரிடம்  சென்று  உங்கள் ஊர் பெண்களையெல்லாம்  "அவன் அழகில் மயங்கினேன்" என்று இழிவாக எழுதிவிட்டார் என்று கோள் மூட்டிவிட்டார். ஒரு நாள் இப்படி உலாவரும் இளமை ஊஞ்சாலாடுவதைப் பார்த்து எழுதப்பட்ட புதிர் இன்று: கரும்புடன் நீ தோற்றமளிக்கிறாய் மன்மதா!  சிட்டு வாலொடியப் படபடப்பாள் (4)  Loading…

விடை 3956

இன்று காலை வெளியான வெடி: பயந்தவனுக்கு முன் பாதி பாதுகாப்பு (3) அதற்கான விடை:   அரண் = அரண்(டவன்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் நேற்று இலுப்பைப் பூவின் இனிப்போடு புளிப்பும் சுவை என்று சொல்லியிருந்தேன். அதானல் புளிப்பான ரசத்தின் பெருமையைக் கூற பெரும்பாலும்  (15இல் 12) "புளிமா"  சீர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட வெண்பா இதோ: அளிய வடித்த அமுதில்  ரசத்தைத் தெளியக் கலந்து புசித்தால் தெரியும் துளித்தேனில்   தோய்ந்த  பலாவும்  தொடாது புளியில் பொதிந்த சுவை

விடை 3955

இன்று காலை வெளியான வெடி: தீனி  போகுமிடம் இனிய பூமரத்தில் அலமேலுவும் துரையும் இறுதிப் பரிமாற்றம் (4) அதற்கான விடை: இரைப்பை = இலுப்பை -லு + ரை ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்பது ஒரு பழமொழி. இலுப்பையின் பூவில் கொஞ்சம் இனிப்பு இருப்பதால் இப்படிச் சொல்லப்படுகிறது.   இம்மரத்தைப் பற்றி அறியவும்  பூ, காய் இவற்றின் அழகான படங்களைப் பார்க்கவும் இவ்வலைப்பக்கத்திற்குச்  செல்லவும். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். அலுப்பின்றி இப்பக்கம் அன்றாடம் வந்தீர் இலுப்பம்பூச் சர்க்கரையை  இந்நாளில் கண்டீர் புளிப்போ டினிப்பும் புதிர்வெடியில் பாங்காய் அளிப்பேன் அறுசுவையு மிங்கு

உதிரிவெடி 3955

உதிரிவெடி 3955 (ஜனவரி 23, 2020) வாஞ்சிநாதன் ********************* எச்சரிக்கை: விடாது தீனி, இன்றும் தொடர்கிறது ! தீனி  போகுமிடம் இனிய பூமரத்தில் அலமேலுவும் துரையும் இறுதிப் பரிமாற்றம் (4) Loading...

விடை 3954

இன்று காலை வெளியான வெடி: மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4) அதற்கான விடை:  தீர்மானி   = தீனி + ர்மா ர்மா = மார்  "தட்டி" தீனி = மாடு சாப்பிடுவது. தீவனம்தான் மாடு சாப்பிடும் உணவுக்குப் பொருத்தமான சொல், தீனி மனிதர்கள் சாப்பிடுவது என்று டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன்  கேட்டுள்ளார். தீனி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூறப்படுவது. (மன்னரே நீங்கள் பாட்டுக்கு எனக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து விட்டீர்கள்,  அதற்கு நான் எப்படித் தீனி வாங்கிப் போடுவேன்?) நான் மாடு சாப்பிடுவது என்று போட்டதற்கு வேறொரு  காரணமும் இருக்கிறது. "வெளியே மாடு சாப்பிடுவது பற்றி" என்பதை "ஓட்டலுக்குச் சென்று மாட்டுக் கறி சாப்பிடுவது" என்றும்  சிலரைத் தடுமாறி யோசிக்க வைக்கலாமே! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். அது சரி இன்றைய புதிர்ச் சொற்களைக் கொண்டு ஒரு கற்பனை.  உடல் பருத்திடக் கூடாதென்று  கனியிருப்பத் தோல் கவர்ந்தாரைப் பற்றி ஒரு வெண்பா: மார்தட்டிச் சொல்வரோ மாடுபோல் தம்பசியென்(று) ஊர்வாய்ப் பழியஞ்சி உண்பார் ஒரேகவளம் நார்ச்சத்தே  நன

உதிரிவெடி 3954

உதிரிவெடி 3954 (ஜனவரி 22, 2020) வாஞ்சிநாதன் ****************** மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4) Loading...

விடை 3953

இன்று காலை வெளியான வெடி: ஒளியில்லாக் கோள வடிவம் உடை களைந்து நுழைந்த இடம் முழுதுமில்லை (4)  அதற்கான விடை:  இருண்ட =  ருண் + இட ருண் = உடை களைந்த  உருண்டை (கோள வடிவம்) இட = இடம் முழுதுமில்லை சும்மாவாது புதிரில் உள்ள சொற்களைக் கொத்து ஒரு வெட்டி வெண்பா: உருண்டையாய் வானில் உலவுகதிர்க்(கு) எட்டா இருண்ட  இடத்தில் ஒளித்தாலும்  நீவிர் திரண்டு  விடைகண்டு   தேர்ச்சி அடைந்தீர் புரண்டுநான் செய்த புதிர். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்  

உதிரிவெடி 3953

உதிரிவெடி 3953  (ஜனவரி 21, 2020) வாஞ்சிநாதன் ******************** ஒளியில்லாக் கோள வடிவம் உடை களைந்து நுழைந்த இடம் முழுதுமில்லை (4) Loading…

விடை 3952

இன்று காலை வெளியான வெடி: குளிர்ந்த நீரோடை  ஓரத்தில் வந்த வெள்ளி அணி (3) அதற்கான விடை:  தண்டை = தண் + டை தண் = குளிச்சியான (தண்ணிலவு,  தண்ணீர்) டை = நீரோடை ஓரம் கொலுசு போன்று காலில் அணியப்படுவது தண்டை (தண்டட்டி  என்பது வேறு, அது  காதில் அணியப்படுவது, பாம்படமா அல்லது பாம்படம் போன்றதா தெரியவில்லை). இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3952

உதிரிவெடி 3952 (ஜனவரி 20, 2020) வாஞ்சிநாதன் ******************** குளிர்ந்த நீரோடை  ஓரத்தில் வந்த வெள்ளி அணி (3) Loading…

Solution to Krypton 202

Today's clue: Having just one vowel is not its weakness (8)  Its solution: STRENGTH I learnt during my college days that  this is the longest word in English with just one vowel. It was found in a book with lot of puzzles, word play, logic and mathematical. Don't remember the title or author  now. Of course my own attempt to find more such words were futile.  SYMMETRY has also 8 letters but the two Y's in that  word are pronounced like vowels. My aim today was just to point out that feature of that word. I am not  sure this meets the requirement of a fair cryptic clue.  Today I want to congratulate a high school girl who has solved it. Keep coming to these pages Shweta  from Hyderabad. Here is the list of  answers   received for this clue.

விடை 3951

இன்று காலை வெளியான வெடி: தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4) அதற்கான விடை: போதியது   = போது + திய போது = மொட்டு திய = வேதியர் -- வேர் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

பொங்கல் புதிருக்கான விடைகள்

வலைக்கட்டத்தில் புதிரமைத்தால் அதற்குத் தனி  அழகுதான்.  உதிரிவெடியமைப்பதை விட  இப்புதிரை அமைப்பதிலும் ஒரு சுவாரசியமும் சவாலும் இருந்தது. சில வெடிகளுக்கு விடைகள் மற்ற வெடிக்கான விடைகள் வலைக்கட்டத்தில் ஊடாக வருவதால் எளிதாக யோசிக்காமலே வந்து சப்பென்று ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது.  அதனால் இப்புதிரை நான்கு மணிநேரத்திற்கு கட்டங்கள் இல்லாமல்  வெளியிட்டது உங்களுக்குப் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.  டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன் விளக்கங்களுடன் விடை முழுதும் எழுதியுள்ளதை இங்கே காணலாம் .  இப்புதிரில் இடம் பெற்ற இரண்டு அரிய சொற்களைக் குறித்து  இணையத்தில்  எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ஒரு கட்டுரையையும் அவர்  சுட்டியுள்ளார்.   பல அறுவைச் சிகிச்சை என்று மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரை தினசரி உதிரிவெடியையும் வந்து எட்டிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதோ விடைகள்: குறுக்காக 3. ஒளியிழந்த  வட்ட நிலவை  முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3) தடவை 5. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3)  தாய் மாமன் 6. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2)  கைதி 7. உயிருள

உதிரிவெடி 3951

உதிரிவெடி 3951  (ஜனவரி 19, 2020) வாஞ்சிநாதன் ******************* இன்று இரவு எட்டு மணிக்கே பொங்கலுக்கான வலைக் கட்டப்புதிரை வெளியிடுவேன்.  ஹரி பாலகிருஷ்ணன் செயலியின் உதவியோடு அமைக்கப்பட்ட அப்புதிருக்குப் பலரும் விடையனுப்பியிருக்கிறீர்கள். உதிரிவெடிப் பக்காம் வராத ஒருவர் தீபாவளிச் சரவெடிக்கும் இதற்கு மட்டும் வந்து நிறைய குறிப்புகளுடன் விடையனுப்பியுள்ளார்.  தினம் ஆவலுடன் இப்பக்கம் வரும் நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துரைகளை இவ்வலைப்பதிவில் வெளியிட்டு புதிராசியருக்கு நீங்கள் என்ன நினக்கிறீர்கள் என்று தெரிவியுங்கள். புதிரமைப்புக்கு அது எனக்கு உதவும், மேலும் புதியவர்கள்  பலர் இப்பக்கம் வந்து செல்ல ஆர்வத்தைத் தூண்டவும் வழி கோலும். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வலைக்கட்டப் புதிரைத் தெரியப்படுத்தி இன்னமும் 14 மணி  நேரத்தில் விடையனுப்பச் சொல்லுங்கள்). இதோ இன்றைய புதிர் (இதற்கு இரவு 9 மணிக்கு விடை வரும்). தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4) Loading…

விடை 3950

இன்று காலை வெளியான வெடி: ஒரு துறையின்  அதிகார  மையம் மையின்றி புத்தகங்கள் உருவாக்குமிடம் (5) அதற்கான விடை: அச்சகம் = அமைச்சகம் - மை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3950

உதிரிவெடி 3950 (ஜனவரி 18, 2020) வாஞ்சிநாதன் ******************* ஒரு துறையின்  அதிகார  மையம் மையின்றி புத்தகங்கள் உருவாக்குமிடம் (5) Loading…

விடை 3949

இன்று காலை வெளியான வெடி: தினமும்  பிடிவாதம் பிடித்த சான்றாக இறக்க வேண்டாம் (5) அதற்கான விடை: அன்றாடம் = தினமும் = அடம் + ன்றா அடம் = பிடிவாதம் ன்றா =  சான்றாக - சாக (இறக்க) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

பொங்கல் வெடி 2020

பொங்கலுக்கு விடுமுறை என்பதால் இன்று படிக்க செய்தித்தாள்கள் வராது. எனவே மிச்சமாகும் நேரத்தை இப்போது இந்த வலைக்கட்டப் புதிரில் மூழ்கிச் செலவழியுங்கள். இதற்கான விடை  19/01/2020 ஞாயிறன்று இரவு 8 (எட்டு)   மணிக்கு வெளிவரும். வழக்கம்போல் நண்பர் ஹரி பாலகிருஷ்ணன் உருவாக்கிய செயலி விடைகளை நிரப்பி அனுப்ப உதவும். குறுக்காக 3. ஒளியிழந்த  வட்ட நிலவை  முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3) 5. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3) 6. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2) 7. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3) 8. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5) 11. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5) 12. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3) 14. பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2) 16. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5) 17. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3) நெடுக்காக 1.  6இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6) 2. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர்

உதிர்த்த சரவெடி

உதிரிவெடிகள் 3931‍--3948 வாஞ்சிநாதன் ********************* இதோ வந்துவிட்டது 2020 ஆண்டுக்கான‌ பொங்கல் தயாரிப்பு. இப்போது உதிரிகளாக அளிக்கிறேன். பின்னர் பகல் 10 மணிக்கு வலைக்கட்டத்துடன் வெளியிடுவேன். குறுக்காக 3931. ஒளியிழந்த  வட்ட நிலவை  முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3) 3932. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3) 3933. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2) 3934. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3) 3935. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5) 3936. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5) 3937. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3) 3938. பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2) 3939. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5) 3940. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3) நெடுக்காக 3941.   3933இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6) 3942. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர் மகள் (3) 3943. பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை  அப்பாவுடன் பிறந்தவள

விடை 3930

இன்று காலை வெளியான வெடி விளைச்சல் நடுவில் கொட்டிய அன்று பாயசத்தோடு வருவது (4) அதற்கான விடை:  அறுவடை = அறு + வடை அறு = அன்று - ன் (நடுவில் கொட்டிய) வடை = பாயசத்துடன் வருவது ------ நாளை காலை உதிரியாக வெடி வராது. வலைக்கட்டமாக வரும். இரண்டு வருடங்களில் புதிர்ப்பக்கத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை கொஞ்சம்தான்  அதிகரித்திருக்கிறது.   உங்கள் நண்பர்களுக்கு இதைத் தெரிவித்து வரச்சொல்லுங்கள். அவர்களுக்கு இப்புதிர்கள் பிடிபடவில்லையென்றாலும்  வேறு ஆர்வமுள்ள நண்பர்களுக்குச் சொல்லி வரவழைப்பார்கள்.  அதோடு அவ்வப்போது  புதிரைப் பற்றிக் கருத்துரைகளையும் இங்கே கணிசமாக வெளியிடுங்கள். புதிதாக வருபவர்கள் கருத்துரை ஏதுமில்லையென்றால் தவறாக இங்கே ஏதுமில்லையென்று எண்ணி நகர்ந்து போய்விடலாம். இன்றைய வெடிக்கு  அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.  

உதிரிவெடி 3930

உதிரிவெடி 3930 (ஜனவரி 15, 2020) வாஞ்சிநாதன் ********************** நேற்று சுகத்தில் திளைத்து போகி கொண்டாடியதால் இன்று புதிரில் பொங்கல் படைக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு  ஏமாற்றம் அளிக்கப்போகிறேன். பொங்கல் கிடையாது, பாயசம்தான். அதோடு இன்னொரு தகவல். இன்று நான் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் தின்றுவிட்டு மத்தியானம் சும்மா இருக்கும் நேரத்தில் ஒரு வலைக்கட்டப் புதிர் அமைக்கவிருக்கிறேன். அது நாளை மாட்டுப் பொங்கலன்று வெளிவரும். அதனால் நாளை காலை ஐந்து மணிக்கே எழுந்து உங்கள் மாட்டைக் குளிப்பாட்டி நெட்டிமாலை அணிவித்து மற்ற‌ அலங்காரம் செய்வித்து பொங்கல் படைத்து ஆறு மணிக்குப் புதிர்ப்பக்கம் வரத் தயாராகி விடுங்கள்.  நாளைக்கு செய்தித்தாளும் வராது என்பதால் இது பொருத்தமாக இருக்கும்.   நேற்று போல் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  இன்றைய எளிய புதிரை விரைவில் அவிழ்த்துப்  பொங்கலைக் கொண்டாட எனது வாழ்த்துகள். புதிரவிழ்த் திந்நாளில் பொங்கலிட்  டுண்பார் மதியுடை மாந்தர் மகிழ்ந்து. விளைச்சல் நடுவில் கொட்டிய அன்று பாயசத்தோடு வருவது (4) Loading…

விடை 3929

இன்று காலை வெளியான வெடி: சிவசம்போ  கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2) அதற்கான விடை: போகி   (சிவசம் போ கி ருஷ்ணா) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3929

உதிரிவெடி 3929 (ஜனவரி 14, 2020) வாஞ்சிநாதன் ****************** சிவசம்போ  கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2) Loading…

விடை 3928

இன்று காலை வெளியான வெடி: உடலில் இருப்பது  நாளைய மலர் சூடிய கிழங்குத் துண்டு   (4) அதற்கான விடை: முழங்கை = முகை + (கி) ழங் (கு) முகை = அரும்பு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3928

உதிரிவெடி 3928 (ஜனவரி 13, 2020) வாஞ்சிநாதன் ********************* உடலில் இருப்பது  நாளைய மலர் சூடிய கிழங்குத் துண்டு   (4) Loading...

Solution to Krypton 200

Today's clue: What identifies one in a phone Apple discarded initially is not difficult (6) Its solution:   SIMPLE = SIM  + (AP) PLE SIM = Subscriber Identification Module  shortened as SIM present in a mobile phone. Kesavan has suggested a variation below  which I feel is more precise than the clue I had given: What identifies one in a phone with Apple dismissing leaders ,  is not difficult (6) Thanks, Kesavan for your efforts to keep the standards high.   The list of  answers received may be seen in this page.

விடை 3927

இன்று காலை வெளியான புதிர்: நாட்டார் காய், கனியில் வேண்டாததை  நீக்கி   வைத்த அருள்  பிரதேசம்  (5) அதற்கான விடை:   வட்டாரம் = ட்டா + வரம் வட்டாரம் = பிரதேசம் ட்டா = நாட்டார் - நார் (காய் கனியில் வேண்டாதது) வரம் = அருள் இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Krypton 200

Krypton 200 (January 12, 2020) Vanchinathan ******************** I started posting in February 2018 one clue on every  Saturday and Sunday Missed it twice in this period. Now it has  reached 200 clues. I was not sure if I would make  more than a  couple of dozen.   Thanks to the readers with special powers even if they do not post any comments  telepathically telling me their appreciation which has helped me reach this milestone!  Request you all to not lose your special ability! What identifies one in a phone Apple discarded initially is not difficult (6) Loading…

உதிரிவெடி 3927

உதிரிவெடி 3927 (ஜனவரி 12, 2020) வாஞ்சிநாதன் ********************   நாட்டார் காய், கனியில் வேண்டாததை  நீக்கி   வைத்த அருள்  பிரதேசம்  (5) Loading...

Solution 199

Today's clue: Self-righteous built ship  finally chanting a Veda (8) Its solution: PRIGGISH = SHIP G RIG anagram G= chanting finally RIG  = a Veda To see the answers received for this clue visit this page.

விடை 3926

புது வருஷம் பிறந்தவுடன் தினசரி கிழிக்கும் ராணி முத்து காலண்டர் வாங்குவது பல வருஷங்களாகப் பழக்கம்.  வருஷம் தவறாமல் ராணி முத்து காலண்டரில்  அதே முருகன் புன்முறுகிக் கொண்டிருப்பார். அழகென்றால் முருகனே என்ற பக்திப்பாடல் வேறு இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன். இரண்டையும் பயன்படுத்தி தயார் செய்துதான் இன்றைய புதிர். முருகன் கதற காலை மறைத்தது வாமனனாக இருக்கலாம் (7) இதற்கான விடை :  அழகுள்ளவன். இதைத் தவிர இன்னொரு விடையும் ஓரளவு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிடவேண்டும்.  கேசவன்தான்  நான் நினைத்ததிலிருந்து மாறுபட்டு  அழகுடையவன்   என்று விடையனுப்பியுள்ளார். ஆவணி மாதத்தில் பருவமழை போது   ஓணம் கொண்டாடப்படும்  நாட்டில்  வாமனன்   மரக்குடையுடனே    காட்சி தருகிறார். (மரக்குடை கேரளாவில் மிகவும் பிரபலம் போலும். மரக்குடையென்று தொடங்கும் ஓர் இனிமையான பாட்டு இதோ. ) இந்தியாவின் மற்ற பகுதிகளிலும்   வாமனன் குடையுடன் சித்தரிக்கப்படுகிறாரா? ஆனால் நான் மனதில் அமைத்த விடைக்கு முழு விளக்கத்தையறிய ராம்கி கிருஷ்ணனின் விடையிலுள்ள விவரங்களைப் பார்க்கவும். ஹிந்து ஆங்கில நாளேட்டிற்குப் புதிரமைக்கும் ஆசிரியர்கள

உதிரிவெடி 3926

உதிரிவெடி 3926 (ஜனவரி 11, 2020) வாஞ்சிநாதன் ********************* முருகன் கதற காலை மறைத்தது வாமனனாக இருக்கலாம் (7) Loading…

விடை 3925

இன்று காலை வெளியான வெடி: விரும்பி  ஒடுக்கப்பட்ட இனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பொறி (5) அதற்கான விடை:  காதலித்து (விரும்பி)  = காது + தலித் காது = ஐம்பொறிகளில் ஒன்று தலித் = ஒடுக்கப்பட்ட இனம் இவ்வெடிக்கு வந்த விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

உதிரிவெடி 3925

உதிரிவெடி 3925 (ஜனவரி 10, 2020) வாஞ்சிநாதன் ****************** விரும்பி  ஒடுக்கப்பட்ட இனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பொறி (5)   Loading…

விடை 3924

இன்று காலை வெளியான வெடி: எப்படியோ கப்பம் கட்டியவன் பின் எழுத்தாளர் நாடும்  நிறுவனம் (6) அதற்கான விடை: பதிப்பகம் =பதி + கப்பம் பதி = கணவன் = கட்டியவன்; ப்பகம் = கப்பம் பலரும் விடையுடன் சரியான விளக்கத்தை அளித்திருக்கின்றனர். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3924

உதிரிவெடி 3924 (ஜனவரி 9, 2019) வாஞ்சிநாதன் ********************   எப்படியோ கப்பம் கட்டியவன் பின் எழுத்தாளர் நாடும்  நிறுவனம் (6) Loading…

விடை 3923

இன்று காலை வெளியான வெடி: தினமும் வாசமுள்ள  தோள்  துடிப்பதை அடக்குதல்  (5) அதற்கான விடை:  நாள்தோறும் = தோள் + நாறும் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3922

இன்று காலை வெளியான வெடி கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த ராவணன்  தேசம்  வந்து ஒப்பனை (6) அதற்கான விடை: அலங்காரம் = அரம் ‍+ லங்கா ‍ அரம் ‍ = அதரம் ‍-த லங்கா ‍=  ஸ்ரீலங்கா ‍- ஸ்ரீ புதிரை வெளியிட்ட அரை மணி நேரம் கழித்து சிறிய மாற்றம் செய்தால் இன்னமும் சுவாரசியமாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் முப்பது பேராவது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போயிருந்தார்கள். அதனால் செய்யவில்லை. ஆனாலும் தாமதமாக அந்த வடிவத்தை இப்போது அளிக்கிறேன்: கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த சூர்ப்பனகை தேசம்  வந்து ஒப்பனை (6) இவ்வெடிக்கு அனுபப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3922

உதிரிவெடி 3922 (ஜனவரி 7, 2020) வாஞ்சிநாதன் ******************* கொஞ்சம் கிள்ளப்பட்ட உதட்டோடு  செல்வத்தை இழந்த ராவணன்  தேசம்  வந்து ஒப்பனை (6) Loading…

விடை 3921

இன்று காலை வெளியான வெடி: காப்பாரில்லாமல் இளம்பயிர் நடு,  பதியன் போடு (5) அதற்கான விடை: நாதியற்று = நாற்று + திய நாற்று = இளம்பயிர் திய  = பதியன் என்பதன் நடுப் பகுதி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3921

உதிரிவெடி 3921 (ஜனவரி 6, 2020) வாஞ்சிநாதன் ********************* காப்பாரில்லாமல் இளம்பயிர் நடு,  பதியன் போடு (5) Loading…

விடை 3920

இன்று காலை வெளியான வெடி: காற்றோட்டமில்லாமல் ஏற்படும் குறைவான  தூக்கம் முன்பே நெளிவது (5) அதற்கான விடை:  புழுக்கம் = புழு + தூக்கம் ‍- தூ இவ்வெடிக்கான விடைகளை அனுப்பியவர்கள் பட்டியலை இங்கே சென்று பார்க்க்கவும்.

உதிரிவெடி 3920

உதிரிவெடி 3920 (ஜனவரி 5, 2020)   வாஞ்சிநாதன்   ******************   காற்றோட்டமில்லாமல் ஏற்படும் குறைவான  தூக்கம் முன்பே நெளிவது (5) Loading...

விடை 3919

இன்று காலை வெளியான வெடி: அடை தின்ன ஆரம்பித்தால் நிச்சயம் நடக்கும் (3) அதற்கான விடை :  உறுதி   = உறு + தி உறுதல் =  அடைதல்.  ( நலிவுற்ற   குடிசைத் தொழில்களை மேம்படுத்த அரசு திட்டமொன்றை வகுத்துள்ளது.  அக்காரியத்தை நிறைவேற்றுவதற்கு  அவள் உற்ற துன்பங்கள் ஏராளம்). இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to New Year Special Puzzle

I am glad many of you found it worth the effort trying to solve this grid. I learnt that there were some difficulties for some of you in the online tool. I too had some difficulty on checking the web for the submitted solution. Fortunately every submission was also sent to me  as an email which displayed correctly on my laptop. Here comes the  solutions first as a filled grid, then with brief explanations,  finally follwed by the  names of solver.  1. Not decided  to mix in fine diet  (10) INDEFINITE   anagram of  "IN FINE DIET"  7. Recollect old events with a different ending and pull back (7) RETRACT = RETRACE-E + T  8. Wind the ends of grenade around the arabic   (4) GALE = GE (ends of grenade in AL 10. Without any addition rhythm of poetry lacks essence  (4) MERE = METRE - T (Instead of a proposal he sent me a mere sketch) 11. Guards despatched to driest centre  (8) SENTRIES = SENT + RI ('driest' centre) 13. Go places and talk excitedly in

விடை 3918

இன்றைய வெடி: முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4) அதற்கான விடை:  சுரும்பு = வண்டு, முரலும் (அதாவது, ரீங்காரமிடும்) குணம் கொண்ட உயிரி. சுரும்பு = ரும்பு  + சு ரும்பு = அரும்பு(மொட்டு) ‍- அ சு = சுகந்தம் தொடக்கம் சுரும்பு என்றால் வண்டு என்று எப்போதோ சங்கப்பாடல் குறித்த புத்தகத்தில் படித்திருக்கிறேன்.   இன்று புதிரை வெளியிட்டபின் தேடியதில் இணையத்தின் மூலம் கிடைத்த இரண்டு  இலக்கிய உதாரணங்கள் " சுரும்பு உணக் கிடந்த நறும் பூ " ‍‍‍  சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணம் முடிந்த பின் வருகிறது.  வண்டு (தேனை) உண்ணுவதற்கு வந்து கிடந்த நறும்பூ என்று இதன் பொருள். அகநானூற்றுப் பாடலொன்றில் " சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்" கிராமங்களிலோ, இலங்கையிலோ சுரும்பு என்ற சொல் புழக்கத்திலுள்ளதா? தெரியவில்லை. இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3918

உதிரிவெடி 3918 (ஜனவரி  3, 2020) வாஞ்சிநாதன் *********************** முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4) Loading…

விடை 3917

இன்று காலை வெளியான வெடி சுதா கலந்தளித்த தாங்க முடியாத சுவை  ஆரோக்கியத்திற்குத் தேவையானது (5) அதற்கான  விடை: சுகாதாரம் = சுதா + காரம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

உதிரிவெடி 3917

 உதிரிவெடி 3917 (ஜனவரி 2, 2020) வாஞ்சிநாதன் ********************   சுதா கலந்தளித்த தாங்க முடியாத சுவை  ஆரோக்கியத்திற்குத் தேவையானது (5) Loading…

விடை 3916

இன்றைய வெடி: பெருந்தன்மை காட்டும் தலை முதல் மலை போக ஒரு மொழி (4) அதற்கான விடை:  தயாளம் = த + மலையாளம் ‍- மலை இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Online Version of New Year Special Puzzle

New Year Special Puzzle (Web-based)  01/01/2020  Vanchinathan ******************* As was done earlier Hari Balakrishnan's  online tool enabled me to build the puzzle and make it available to you for solving online. When you put your finger on a square  in the mobile phone (or the mouse when using a computer with keyboard) the clue for the corresponding slot will be displayed and you can start typing. I thank Hari for patiently taking time out during new year eve to answer my queries and help me weed out the typos. Go to the puzzle   now and have some fun. Solution to this will be published on Saturday night 9 pm. https://beta.puthirmayam.com/crossword/6A85E77ECB

SPECIAL PUZZLE FOR NEW YEAR 2020

SPECIAL PUZZLE FOR NEW YEAR 2020  VANCHINATHAN  ****************************** For this New Year 2020  I have created a 13 x 13 grid  with two dozen clues. As is the custom in this blog you get a chance to solve them all independently without any support. However  this page will be updated with the grid at 10 am  which you can fill online and submit, as was done for Deepavali Special two months ago. Until 10 am the solutions you find  cannot be submitted. Click here to go to online solver. The solutions will be published on Saturday night along with the solution of usual Krypton for 4th January 2020. So everyone gets 4 days to solve.  Across  1. Not decided  to mix in fine diet  (10)  7. Recollect old events with a different ending and pull back (7)  8. Wind the ends of grenade around the arabic   (4) 10. Without any addition rhythm of poetry lacks essence  (4) 11. Guards despatched to driest centre  (8) 13. Go places and talk excitedly in the  heart of Por

உதிரிவெடி 3916

உதிரிவெடி 3916 (ஜனவரி 1, 2020) வாஞ்சிநாதன் ********************* பெருந்தன்மை காட்டும் தலை முதல் மலை போக ஒரு மொழி (4) Loading…