Skip to main content

விடை 3623

இன்று காலை வெளியான வெடி
பருத்திப் புடவை பார்த்தால் ஓரங்கிழிந்து பாதி கசங்கி இருக்கும் (5)

இதற்கான விடை: கண்டாங்கி   = கண்டா (ல்)  + (கச) ங்கி

கண்டாங்கி என்றால் பட்டுப்புடவை இல்லையா என்று கேட்டு எனக்கு சிலர் எழுதியிருந்தார்கள். நான் பட்டு என்று கேள்விப்பட்டதில்லை. வலையில் தேடிய போது விக்கிபீடியாவில் பட்டு என்று எழுதியிருந்தது. பின்னர் நம்பத் தகுந்த வட்டாரங்களைத் தேடக் கிடைத்தது, அகமதாபத்தின்  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்,
காணொளி கிடைத்தது.
https://www.youtube.com/watch?v=uxA_P9dcGu0
அதைப் பார்த்தால் ப‌ருத்திச் சேலைதான் என்று புரிந்துவிடும்.
ஆனாலும் விஷயம் தெரிந்த செட்டிநாட்டுக் காரர்கள் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கலாம்.

இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…


பொதுவாக கண்டாங்கி
பட்டில் நெய்யப்படுகிறது

ஆனால் தற்போது
ஜரிகை பார்டருடன் பருத்தி நூலிலும் நெய்யப்படுகிறது!

கண்டாங்கி புடவை பட்டிலும் நெய்யப்படுகிறது. பருத்தியிலும் நெய்கிறார்கள்!
இதுவே குழப்பத்திற்கு காரணம்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.