இன்றைய வெடி:
குறைவான போஷாக்கு முழுமையற்ற வயதின் கோளாறு இருந்தாலும் அரியணையேறிய மச்சக்காரி (5)
இதற்கான விடை: சத்யவதி = சத் (து) + வயதி (ன்)
இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
***********************
*போஷாக்கான உணவு*
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கிட்டத்தட்ட எல்லா தேசத்திலும், பால் மனிதனுடைய முக்கிய உணவு. தாயிடம் இருந்து சிசுக்களுக்கு கிடைக்கும் *_போஷாக்கான_* உணவு பாலே. இருந்தாலும், மனிதன், வித்தியாசமான பல பாலூட்டிகளிடம் இருந்து இந்த மிகப் போஷக்கான உணவை பெறுகிறான்.. பாலோடு எந்தப் பொருளையும் கலக்காமல் அப்படியே குடிப்பதை மக்கள் விரும்புகின்றனர்.
***********************
_குறைவான போஷாக்கு முழுமையற்ற வயதின் கோளாறு இருந்தாலும் அரியணையேறிய மச்சக்காரி (5)_
_போஷாக்கு_ = *சத்து*
_குறைவான போஷாக்கு_
= *சத்( ~து~ )= சத்*
_முழுமையற்ற வயதின்_
= *வயதி( ~ன்~ )*
= *வயதி*
_கோளாறு இருந்தாலும்_
= *வயதி--> யவதி*
= *சத்+யவதி*
= *சத்யவதி*
= _அரியணையேறிய மச்சக்காரி_
***********************
*இராஜமாதா சத்யவதி*
சத்யவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய். மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா
***********************
💐🙏🏼💐