Skip to main content

விடை 3612

இன்றைய வெடி
நல்லாள் சேர்ந்து பிரியக் கூத்தடி நெல்லாடை போர்த்தடி (4)
***********

  சேர்வதும், பிரிவதும் மனித வாழ்வில் மட்டுமல்ல.  சொற்களுக்கும் இது நேர்வதுண்டு. "கூத்தடி" என்பதில் "கூடி" ("சேர்ந்து")  பிரிந்த பின் எஞ்சும் "த்த" என்பதை நெல்லின் ஆடையான "உமி"யைப் போர்த்தடி என்று  சொன்னதைக் கேட்ட நல்லாள் "உத்தமி"தான்.

இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்கள் இங்கே.

எத்தகைய ஏழ்மையில் இன்னலுக் காட்படினும்
கத்திரிக்காய் வாங்கிடக் காசற்ற நாளிலும்
உத்தமர் உண்பார் உமியடுப்பு நெற்கஞ்சி
புத்தியில் கொள்வோம் புரிந்து


.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.