இன்று காலை வெளியான வெடி
தென்னை ஓலையாலான தேங்காயின் பகுதி ?! (3)
இதற்கான விடை: கீற்று. உடைத்த தேங்காயைக் கீறிப் பெறப்படும் துண்டு, கூரை வேய்வதற்காக ஓலையில் பின்னப்பட்ட பொருள், இவ்விரண்டின் பெயரும் கீற்று!
இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காணச் செல்ல வேண்டிய பக்கம்.
விதம் விதமான புதிர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய ஒரு தளம், ராமராவ் உருவாக்கிய பல புதிர்களடங்கிய திரைக்கதம்பம் வலைப் பதிவு. அவர் அபாரமாக ஒரு துறையிலுள்ள சொற்களை மட்டுமே கொண்டு 69 வாரங்களாக உருவாக்கி வருகிறார்.
தென்னை ஓலையாலான தேங்காயின் பகுதி ?! (3)
இதற்கான விடை: கீற்று. உடைத்த தேங்காயைக் கீறிப் பெறப்படும் துண்டு, கூரை வேய்வதற்காக ஓலையில் பின்னப்பட்ட பொருள், இவ்விரண்டின் பெயரும் கீற்று!
இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காணச் செல்ல வேண்டிய பக்கம்.
விதம் விதமான புதிர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய ஒரு தளம், ராமராவ் உருவாக்கிய பல புதிர்களடங்கிய திரைக்கதம்பம் வலைப் பதிவு. அவர் அபாரமாக ஒரு துறையிலுள்ள சொற்களை மட்டுமே கொண்டு 69 வாரங்களாக உருவாக்கி வருகிறார்.
Comments
கீற்றுக்கு பத்தை சரி; ஓலையுடன் எப்படி பின்னி பிணைப்பது? :-)
இந்த திரை குறுக்கெழுத்துப் புதிர் கடந்த 6 வருடங்களாக, (மாதம் ஒரு புதிர்) ஒவ்வொரு மாதமும் 20 ந்தேதி வெளியிட்டு வருகிறேன். இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
இதுவரை வெளியிட்ட 69 திரை குறுக்கெழுத்துப் புதிர்களின் தனிக்கூறுகள். (SPECIALITIES)
1. விடைகள் அனைத்தும் தமிழில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. .
2. திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட்டவையே. மொழி மாற்றுப் படங்கள் (dubbed films) கிடையாது.
3. புதிர்க் கட்டங்கள் அனைத்தும் 9 x 9 அளவுகளில் சரிசீரமைப்பில் (symmetrically) அமைக்கப் பட்டவை.
4. விடைகளில் எவையும் கட்டங்களில் நிரப்புகையில் மேலிருந்து கீழாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ அமையும்படி அமைக்கவேயில்லை.
5. விடைக்கான தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் முழுமையாக விடைகளில் இருக்கும். எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ, மாற்றியமைக்கவோ இல்லை.
6. விடைகளில் ஆங்கில / வேற்று மொழி சொற்கள் இருப்பினும், அவையெல்லாமே தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டன என்பதை அறியலாம்.
7. விடைகளில் ஒருமுறை பயன்படுத்திய தமிழ் திரைப்படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தவே இல்லை. ( நான் ஒரு database வைத்துள்ளேன்)
8. முடிந்தவரை குறிப்புகள் அனைத்தும் பொருள் உள்ள வாக்கியங்களாகவே அமைக்கப் பட்டுள்ளன.
9. குறிப்புகளில் அதிகமாக பொது அறிவை பயன்படுத்த தேவையில்லாதவாறு அமைக்கப் பட்டுள்ளன. அப்படியிருப்பினும், விடைகள் கொடுத்துள்ள குறிப்புகளிலேயே மறைந்திருக்குமாறு அமைக்கப் பட்டுள்ளன.
10. விடைகள் (தமிழ் திரைப்படங்களின் தலைப்புக்கள்) சரியானவை தானா என்பதை உறுதி செய்து கொள்ள http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
மேலே கண்ட தனிக் கூறுகளை (Specialities) ஆராய்ந்து பார்த்தால்,
ஒரே கருவை (தமிழ் திரைப்படங்களின் பெயர்கள்) கொண்டு குறுக்கெழுத்துப் புதிர்களை அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும் மேலும், திரைப்படத் தலைப்புகளுக்கு குறிப்புகள் அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும், புதிர் அமைப்பாளர்களுக்கும், புதிர் ஆர்வலர்களுக்கும் தெரிந்திருக்கும்.
அதிக புதிர் ஆர்வலர்கள் பங்கேற்றால் நான் மிகவும் மகிழ்வேன். எனது மின்முகவரி: sathyaapathi@gmail.com