உழவர் சந்தை என்று தமிழ் நாட்டில் பல ஊர்களில் அரசு வைத்திருக்கும் இடத்தில் உழவர்களே தங்கள் வயலில் விளைந்ததை விற்பார்கள். இதை நேரடி விற்பனை என்கிறார்கள். நடுவில் கமிஷனுக்கு வாங்கி விற்கும் வியாபாரிகள் இல்லாததால் விலை குறைவாக இருக்கும். அதே போல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சில இடங்களில் முகவர்களுக்கு அளிக்காமல் தாங்களே நேரடி விற்பனையும் செய்கிறார்கள். அதைப் பார்த்ததுதான் இன்றைய புதிரை அமைப்பதற்கு உதவியாயிருந்தது.
இன்றைய வெடி:
இடைத் தரகரில்லாத வளையாத பாதம்? (3)
அதற்கான விடை: நேரடி
ஒரு தமிழார்வமுள்ளவருக்கு என்னுடைய புதிர்களைப் பற்றிக் கூறினேன். என்ன வேலையத்த வேலை இது. விஷயத்தை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி சுற்றிவளைத்து என்று அலுத்துக் கொண்டு என்னைச் சபித்து ஒரு பாட்டு எழுதிவிட்டுப் போய்விட்டார்.
நேரடியாய்ச் செல்லாது நீள்வழியிற் சுற்றவைத்து
வேரடிக்குச் சென்று விடையை விவரிக்கும்
போரடித்தற் போன்ற புதிர்.
நான் ஏன் இப்படித் திட்டிவிட்டீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒன்றும் திட்டவில்லை என்றார். காளைமாட்டை (விடையை) சுற்றி சுற்றி வரவைத்து ப் போரடிப்பார்கள் அப்போது நெல்மணிகள் ஒட்டிக் கொண்டிருப்பதெல்லாம் சிந்திவிடும் அதை விளக்கத்தான் இந்த சிந்தியல் வெண்பா என்றார்.
பாராட்ட வேண்டுமென்றால் நேரடியாய்ச் சொல்லலாமே, ஏன் இப்படி சுற்றிவளைத்து .....
இன்று விடையனுப்பியவர்கள் பட்டியல் இங்கே.
Comments
*********************
_இடைத் தரகரில்லாத வளையாத பாதம்? (3)_
_வளையாத_ = *நேர்*
_பாதம்_ = *அடி*
_இடைத் தரகரில்லாத_
= *நேர்+அடி*
= *நேரடி*
*************************
*இடைத்தரகு*
_வாங்க,விற்க_
_தரகு_
_வசதிக்கு ஏற்ப_
_மாறும்_
_கன்னியின் கற்பு_
_இங்கு_
_விற்க,வாங்க_
_இடைத்தரகர்_
_இதற்கு உண்டு_
_உயிரணு முதல்_
_கருப்பை வரை_
_விற்க,வாங்க_
_முடியும்_
_இதற்கும் தரகர்_
_இங்கு உண்டு_
*_கடவுளைக் கூட_*
*_இடைத்தரகர்_*
*_இன்றி அனுகவது_*
*_கடினம்_*
_இப்படி நீளும்_
_பட்டியலில்_
_கடலும்,காற்றும்_
_வானமும்_
_மட்டும் தப்பித்தது_
*_இடைத்தரகர்_*
*_இதன் இடையில்_*
*_இல்லாததால்_*
(by நா.சேகர் .....from the web)
**********************
💐🙏🏼💐