Skip to main content

விடை 3614

பெருத்த பாம்பு தாக்க உள்ளே எண்ணிக்கையின்றி வழிபாடு   (4) 


பழுதில் மதியோன் பகர்ந்தனன் பாங்காய்:
தொழுகையிற்  காணுந்  தொகைநீக்க எஞ்சும்
எழுத்தினை  யுள்வைத்துக் கொத்த  எழும்பும்
கொழுத்த விடையின்று  கொள்.
 
சில நாட்கள் புதிர் எளிதாயும் சில நாட்கள் கடினமாயும் அமைகின்றன.  (என்னால் சில சமயம்தான் முன் கூட்டியே கடினம்/எளிது என்று அனுமானிக்க முடிகிறது).   அதனால் இதைப் பற்றியும், விடை வெளியிடும்போது  வெண்பாவாய் எழுதுவது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கலாம்.  விடைப்பட்டியலைப் பார்த்ததும் மீண்டும் இப்பக்கத்திற்குத் திரும்பி வந்து,  கீழே காணப்படும்  "உங்கள் கருத்தை உள்ளிடுக" என்ற சொல்லில் சொடுக்கி,  உங்களுடைய பத்தே முக்கால் மாற்றுப் பொன்னான  நேரத்தை ஒதுக்கி,  உங்கள் கருத்துகளைச் செதுக்கி   அனுப்புங்கள்.
இரவு பத்து மணிக்கு முன்பே  அனுப்பப்படும் கருத்துகள் உடனடியாகப் பரிசீலித்து வெளியிடப்படும்.

வேறு யாரோ எழுதியதை வலையில்  தேடியெடுத்து எதையும் நான் இங்கே வெளியிடுவதில்லை. ப்படி இட்டால் அவருடையை பெயருடன்  இடுவேன். அதனால் சந்தேகம் வேண்டாம், நீங்கள்  கண்டுபிடித்துச் சொல்லும் குற்றம் அதற்குரியவருக்குதான் சேரும், தப்பான   நபருக்குப்  போகாது.

 
 சரி, இன்றைய தினம் குவிந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.
 







 

Comments


இன்றைய வெடி எனக்கு வழக்கத்தை விட கடினமாக தென்பட்டது . விடையுடன் வந்த வெண்பா ரசிக்கும்படியாக இருந்தது. ஆசிரியரின் திறனுக்கு பாராட்டுகள்.
Chittanandam said…
என்னைக் கேட்டால் மிக நன்றாகப் புனையப்பட்ட புதிர். பெருத்த பாம்பு எனப் படித்துவிட்டு மலைப்பாம்பு ஆதிசேடன் என்று அலைந்து திரிந்தேன். கொத்து என்கிற வார்த்தையும் கிடைத்தது. ஆனால் மற்ற பகுதிகளுடன் பொருத்த இயலவில்லை.மதியம் நான்கு மணிக்கு பல்ப் எரிந்தது. சரசரவென்று ஒன்றுக்குப் பின் ஒன்றாக சங்கிலி போல் தொடர்பு உண்டாகி விடை கிடைத்தது.

பாராட்டுகள்.
பத்தே முக்கால் மாற்று, பத்தரை மாற்றுக்கு குறைவு மதிப்பில். பத்து பங்கு தங்கத்துக்கு அரை பங்கு தாமிரம் சேர்த்தால் பத்தரை மாற்று தங்கம். முக்கால் பங்கு தாமிரம் சேர்த்தால், பத்தே முக்கால் மாற்று,
Vanchinathan said…
அப்படியா? பத்தே முக்காலைப் பத்தேகால் என்று மற்றி எழுதியதாகக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை இட்ட நேரமும் பத்தேகால்தான், பொருத்தமாயிருக்கும்.
Vanchinathan said…
ஆனால் ஆதி சேடன் மலைப்பாம்பில்லையே, கடற்பாம்புதானே?!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்