Skip to main content

விடை 3607


இன்று காலை வெளியான வெடி:



உயர்தரமான தங்கத்துக்கு வேறு பொற்கொல்லரை நியமிக்க வேண்டும் (4,3)

இதற்கான விடை:  பத்தரை மாற்று

இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.



முந்தாநாள் என்னைப் பார்க்க வந்த நண்பன் மீண்டும் என் வீடு வந்தான்.  என்னடா விஷயம் என்று கேட்டேன்.
"பாண்டியன் தொலைக் காட்சியினர்க்கு ஓர் ஐயம். பெண்களின் கூந்தல்  படபடப்பதால் காற்று வீசுகிறதா, இல்லை காற்று வீசுவதால் கூந்தல் அலைபாய்கிறதா? இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஒரு பாடல் சொன்னால் 916 தங்கக் காசு அடங்கிய கிழியைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்".
"அதை ஏன் என்னிடம் சொல்கிராய், ஏதாவது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுப்பார்களா என்று போய்ப் பார் என்றேன்.

 "நானே எழுதிட்டேனாக்கும். இந்தப் பாடலைச் சரி பார்த்து சொல்லு, பரிசு கிடைக்குமா?"

"ஏன் இதற்கு புதிதாய் ஒரு பாடல் அன்றே கண்ணதாசன் "கொடியசைந்ததும் காற்று வந்ததா?.." என்று எழுதிவிட்டாரே"

"அது கொடிக்கு பாடியதடா, கூந்தல் வேறு, கொடி வேறு"
"சரி என்ன எழுதியிருக்கிறாய் பாடிக் காட்டு"

உடனே ஆரம்பித்தான், வைரமுத்துபோல் கம்பீரமாக‌

எத்திசை  எங்கும் இனிதாய் நின்முகம்
சித்திரைக் காற்றில் புரளும் சிகையொதுக்கும்
நித்திரை  நீக்கி  யெனைவாட்டும்  நீயென்றன்
பத்தரை மாற்றுப் பவுன்.


"காதல் பாட்டை ஏனடா கம்பீரமாகச் சொல்கிறாய்?
என்ன பங்குனி வருவதற்கு முன்பே சித்திரை?" என்று கேட்டேன்.

"அதெல்லாம் அப்படித்தான், நித்திரைக்கு எதுகையா போடணும்ல?"

 "அப்பறம் என்னடா பவுனு கோல்டுன்னு இங்கிலீஷ் எல்லாம்"

அதுக்கு  "நாலு பொற்காசு குறைச்சுட்டுக் கொடுக்கச் சொல்லிட்டா போச்சு" என்றான்.

அதை அனுப்பியிருக்கிறான். பாண்டியன் டீவியினர் வேண்டியவர்களுக்குக் கொடுத்தார்களா, என் நண்பனுக்குக் கொடுத்தார்களா என்று தெரிய தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.



Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
*************************
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்.
உண்மையே சொல்வேன் நல்லதே செய்வேன்
வெற்றிமேல் வெற்றி வரும்
*************************
நமது ஊர்களில் ஒரு பழஞ்ச்சொல் உண்டு. *_பத்தரை மாத்துத் தங்கம்._* குழந்தைகளைக் கொஞ்சும் பொழுதும், ஒருவர் நல்ல குணமுடையவர் எனில், அவரை பத்தரை மாற்றுத் தங்கம் என்பார்கள்.👍🏼
*************************
_உயர்தரமான தங்கத்துக்கு வேறு பொற்கொல்லரை நியமிக்க வேண்டும் (4, 3)_
_பொற்கொல்லரை_
= *பத்தரை*
_வேறு நியமிக்க வேண்டும்_
= *மாற்று*
_உயர்தரமான தங்கத்துக்கு_
= *பத்தரை மாற்று*
*************************
தமிழ் _பத்தர்_ யின் அர்த்தம்
பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு _பொற்கொல்லர்._
*************************
ஒரு ஒப்பாரிப் பாடலில் இப்படி ஒரு வரி வருகின்றது:

*_பத்தரை மாத்து_* _பழிப்படா சென்றிருந்தேன்_
_எட்டரை மாத்து எடையும் கொறஞ்சேனுங்க_
_முட்டக் குடியனுக்குத் தாலிகட்டி வச்சாளே - இப்ப_
_முத்தத்து வேம்பானேன் முழுதும் கசப்பானேன்_
_சாராயங் குடிச்சுகிட்டு சாயங்கால வேளையிலே_
_சாஞ்சுவருவானே படிச்ச பாவிமட்ட_
_அரசாங்க உத்யோகம் அம்மாவும் சொன்னாளே_
_ஆசப்பட்டுத் தலநீட்டி அடிகோலப்படுகேனே_ 😭😭
**********************
💐🙏💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்