Skip to main content

விடை 3600

இன்று காலை வெளியான வெடி:
அழியா முடிவை உள்ளத்தில் வைத்து முடிவில் செல்லுமிடம் (4)
இதற்கான விடை:  மயானம் = மனம் + யா


பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று மீண்டும் பிறப்பதெர்கென்று அழியாமல் முடிவு அழியாத் தன்மையுடன் வர வேண்ட்ம் என்பதை உள்ளத்தில் கொண்டு மயானத்திற்குச் சென்றால் முக்தியடையலாம் என்பதைப் பகுத்தறிந்து சிலர் கூறியதைப் புதிர் வடிவமாக்கி சிவராத்திரியில்
உங்களுக்கு அளிப்பதில்  எனக்கு மகிழ்ச்சியே. இனி மயானம் இப்புதிரில் இடம் பெறாது. ஒரு காலத்தில்
யார் தலையிட்டாலும் நெஞ்சம் அமைதியின் குடியிருப்பு
என்று வந்தது மயானக் கொள்ளைக் காரர்கள் உண்டாக்கிய ஆரவாரத்தில் இன்று மீண்டும் வந்துவிட்டது.
  
மயானத்தை உள்ளத்தில் மாந்தர் நிறுத்தித்
தயாராய் இருந்திட்டால்  தங்கிடுமோ  துன்பங்கள்
வாழ்க்கை நிலையாது வாட்டும் பிறப்பிறப்பில்
மூழ்காதோர் வாயுதிர்த்த முத்து


விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.






 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_முடிவில் செல்லுமிடம்_

*_காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே_ '*

- இந்த ஒரு வரிதான் பட்டினத்தாரின் மனமாற்றத்திற்குக் காரணம். எந்த அளவிற்கு மனம் மாறுகிறார் என்றால் தான் முன் வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கவே இல்லை. இந்த வரியின் பொருள் என்ன? தைக்கின்ற ஊசியின் பயன்பாடு அதன் காதில் தான் இருக்கின்றது. காது இல்லாத ஊசி பயனற்றது. அந்தப் பயனற்ற ஊசியை சந்தையில் யாரும் விற்பதுமில்லை. வாங்குவதுமில்லை. ஒன்றுக்கும் பயன்படாத ஊசி கூட இறுதியில் உன் வழி வரப்போவதில்லை. அதாவது இறக்கும் போது மயானம் வரை உடன்வரப்போவதில்லை. பயனற்றது என்று மற்றவர் உதறித்தள்ளியது கூட நமக்குப் பயன்தரப்போவதில்லை
**********************
_அழியா முடிவை உள்ளத்தில் வைத்து முடிவில் செல்லுமிடம் (4)_
_உள்ளத்தில்_
= *மனதில்*
_அழியா முடிவை_
= *யா*
_அழியா முடிவை உள்ளத்தில் வைத்து_
= *யா* _inside_ *மனம்*
= *மயானம்*
= _முடிவில் செல்லுமிடம்_
***********************
மனித வாழ்வின் எல்லாக் கவலைகளை சோறு, பொன், பெண் என மூன்றுக்குள் அடக்கிவிடுகிறார் பட்டினத்தார். நம் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும், ஏக்கமும் இந்த மூன்றில் ஒன்றுக்காகத் தான் இருக்கின்றது.

மொத்தத்தில் பட்டினத்தார் என்றால்
அ. உலக மறுப்பு
ஆ. உறவு மறுப்பு
இ. உடல் மறுப்பு
**********************
💐🙏🏼💐

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்