தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
*_சமண சமய தத்துவம்_*
_‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம்,_ _ஊற்றும்_
_செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும்,_
_வீடும், உற்ற_
_துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக்_ _காய்யுரைப்பன்;_
_மயல்தீர்ந்த காட்சி_ _யுடையோய்! இது கேண்மதித்தே’_
என்பது மேருமந்தரபுராணம்.
சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை *_நவபதார்த்தம்_* என்பர்.
இவை; உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம்.
இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோட்சம் என்றும் கூறுவர்.
********************
கல்யாணத்துக்கு முன் சந்தோஷமாகத் தொடங்கி அஹிம்சையைத் தீவிரமாக போதிக்கும் (4)
கல்யாணம் = மணம்
சந்தோஷமாகத் தொடங்கி = ச
மணம் முன் ச
= ச + மணம்
= சமணம்
அஹிம்சையைத் தீவிரமாக போதிக்கும்
= சமணம்