Skip to main content

விடை 36 11


இன்று காலை வெளியான வெடி:
குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4)

இதற்கான விடை ; வழுக்கை.

இன்று அனுப்பப்பட்ட  அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

வழுக்கையென்றால் இளந்தேங்காயில் காணப்படும் மெல்லிய உண்ணக்கூடிய பகுதியாகும். தலையில் முடியுதிர்ந்த நிலையையும் வழுக்கைத் தலையென்று கூறுவர்.
 இதைப் பற்றி முழுக்கைச் சட்டைப் புலவர் எழுதிய இணையத்தில் கிடைத்தது இதோ:

அழுக்கை யறியாத வெண்பட்டுச் சட்டை
முழுக்கையுடன் நல்வைர‌ மோதிரங்கொண் டோனே
இழுக்கை யடைந்தாற்போல்   ஏன்வாட்டம் கொஞ்சம்
வழுக்கையால்  வந்த வினை.




Comments

Raghavan MK said…



A peek into today's riddle!
************************
இளநீரின் மருத்துவ பயன்கள்

**இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
** பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
** சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான்.
** டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
** அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும்.
*********************
_குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4)_

_குற்றம்_ = *வழு*
_கரம்_ = *கை*
_இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது_
= *வழு+கை*
= *வழுக்கை*

(எ.கா :-
நல்ல வழுக்கையாக ஒன்று எடுத்துக் கொடுங்கள். இதில் இளநீர் மிகுதியாகக் காணப்படும்)
************************
வழுக்கையில் முடிவதல்ல வாழ்க்கை!
(வா. ரவிக்குமார் in Hindu தமிழ்திசை)

வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி…’ என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறோம். ‘எத்தனை பெரிய கிரவுண்ட வெச்சிருக்கே, நீ பெரிய பணக்காரம்பா’ என்று நண்பர்களால் சாதாரணமாகக் கேலிக்கு ஆளாகிறார்கள், தலையில் வழுக்கை இருப்பவர்கள். இந்தக் கிண்டல் கேலியையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் “போடா… ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்…” என்று சிரித்தபடி, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து முன்பக்கம் இருக்கும் ஓரிரு முடிகளைக் கர்மசிரத்தையுடன் சீவிக்கொள்ளும் நம்பிக்கை மனிதர்களும் இருக்கிறார்கள்.
**************
ஊர்வசி ஊர்வசி - டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பு இருந்தா - தேவைஇல்லை பார்மஸி
ஒளியும் ஒலியும் கரண்ட் போனா டேக் இட் ஈஸி பாலிஸி
வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி😄😄
*****************************
💐🙏💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்