Skip to main content

விடை 3609

அசோகவனத்திலிருந்த சீதையை  "வெயிலிடை வைத்த விளக்கு போல" என்று கம்பர் குறிப்பிட்டதைப் பற்றி  எங்கள் பள்ளியின்  தமிழாசிரியர் நிறைய பேசுவார்.  ராமனருகில் இருந்தால்தான் சீதைக்குப் பிரகாசம், இல்லையென்றால் அது தெரியாது என்பதை எங்கள் ஆசிரியர் இப்படி மாற்றிக் கூறினார். ராமர்தான் பார்க்க எப்படி இருப்பார் என்பது தெரிந்த விஷயமாச்சே!  அதுதான் ராமர் கலர்ல இருப்பாரே. அப்படிப்பட்ட ராமன் பக்கத்தில் சீதை பளிச்சென்று தெரிபவள்,  நல்ல கலரான ராவணன் பக்கத்தில் இருக்கும்போது எடுபடவில்லையாம். அது ஞாபகத்தில்  நேற்றைய வெடியான‌  "வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)"  உருவானது. சீதையும் காணும், விளக்கையும் காணும்,  வெறும் அயிரைமீன்தான் மிஞ்சியது.

சரி இன்றைய புதிருக்கு வருவோம்.
முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)
வெடியை விரும்புதல் விட்டொழிக்க மாட்டோர்
அடிமுதலில் தேடீடுவீர் ஆழ்ந்து.

ஏவாளும் பார்வதியும் இப்புதிருக்  கேற்றதிலை
பாவால் உரைத்தேன் பணிந்து.

பெண்ணென்றால்  யாரென்று கேட்பீரேல் நீர்பெற்ற‌
கண்ணான பேதையாம் காண்.

சிக்கலான இவ்வெடிக்குச் சீராய் விடையளித்தோர்
பக்கமிதில் பட்டியலாய்க் காண்



Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
***********************
நல்ல கவிதை படைக்க நல்ல வாசிப்பு வேண்டும் . 9ம் நூற்றாண்டின் கடுமையான ஆணாதிக்க சட்டகத்துக்குள் இருந்து கொண்டு, பன்னிறு ஆழ்வார்களுள் ஒருவராக உயர்ந்ததற்க்கு, ஆண்டாளின் பக்தி மட்டுமே காரணம் அல்ல. பெரியாழ்வாரின் *புதல்வி* , அவரைப்போன்றே இலக்கணம் கற்றுச்சிறந்திருந்தது தான் காரணம்.
************************
_முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4)_

_முதன் முதல்_
= *( மு )தல்*
_தோன்றாமல்_
= *( ~மு~ )தல்*
= *தல்*
_உலகுக்கு_
= *புவி* க்கு
_வந்த_
= *தல் --> புவி*
= *புதல்வி*
= _பெண்_
************************
ஒரு தந்தை தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போல் பாரதிதாசனின் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

_தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட_
_சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை_
_சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ_
_சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்_
*_விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி_*
_வேளைதோறும் கற்று வருவதால் படியும்!_
_மலைவாழை அல்லவோ கல்வி? - நீ_
_வாயார உண்ணுவாய் போ என் *புதல்வி* !_

இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘விலை போட்டு வாங்கவா முடியும் - கல்வி?’ என்று கேட்டுள்ளார் பாருங்கள். காசு கொடுத்தால் கடையில் சென்று பொருள்களை வாங்க முடியும். கல்வியைக் கற்றால் தான் பெற முடியும் என்று விளக்கியுள்ளது அருமை அல்லவா?
💐🙏🏼💐
************************

வெடியும் அருமை, அதனை விளக்கும் குறள் வெண்பாக்களும் இனிமை

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்