Skip to main content

விடை 3597

இன்று காலை வெளியான வெடி

நதி நடுவில் ஓரிடத்தில் மரம் நடு ஒன்று சேர் (4)

இதற்கான விடை:  திரட்டு =  (நதியின் நடுவில் அமைந்திருப்பது) திட்டு + (மரம் என்பதன் நடு எழுத்தான) ர

இப்புதிருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விடைகளையும் இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
'

A peek into today's riddle!
************************
குழந்தை திட்டில் மட்டும் தான் - மகிழ்ச்சி வரும்...

நண்பன் திட்டில் மட்டும் தான் - ரோஷம் வரும்...

காதலி திட்டில் மட்டும் தான் - பொறுப்பு வரும்...

நேற்றைய நண்பன் திட்டில் மட்டும் தான் - கோபம் வரும்...

வேலை செய்யுற இடத்துல வர திட்டுல தான் - எதுவுமே வராது...

எழுதியவர் : ர. மோகன்குமார்
************************
_நதி நடுவில் ஓரிடத்தில் மரம் நடு ஒன்று சேர் (4)_

_நதி நடுவில் ஓரிடத்தில்_
= *திட்டு*
_மரம் நடு_
= *ர*
_ஓரிடத்தில்_
= *ர* _inside_ *திட்டு*
= *திரட்டு*
= _ஒன்று சேர்_
*************************
_விநாயகர் வெண்பாத் *திரட்டு*_
விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பாடும் விநாயகனைப் பார்த்து வினைதீர்க்க
நாடும் அடியவர்க்கு நாள்தோறும் - பீடுடைய
நல்விநாய கன்நலமே நல்குவான்; காலமெலாம்
வல்விநாய கன்தாள் வணங்கு!

தம்புராவைக் கையிலே வைத்தபடி தான்பாடும்
நம்விநாய கன்புகழை நாம்பாட - நம்வினைகள்
தீர்ந்திடுமே; ஒவ்வொரு நாளும் தவறாமல்
ஓர்ந்தே அவன்புகழைப் பாடு!
💐🙏🏼💐
********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.