தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's riddle!
************************
குழந்தை திட்டில் மட்டும் தான் - மகிழ்ச்சி வரும்...
நண்பன் திட்டில் மட்டும் தான் - ரோஷம் வரும்...
காதலி திட்டில் மட்டும் தான் - பொறுப்பு வரும்...
நேற்றைய நண்பன் திட்டில் மட்டும் தான் - கோபம் வரும்...
வேலை செய்யுற இடத்துல வர திட்டுல தான் - எதுவுமே வராது...
எழுதியவர் : ர. மோகன்குமார்
************************
_நதி நடுவில் ஓரிடத்தில் மரம் நடு ஒன்று சேர் (4)_
_நதி நடுவில் ஓரிடத்தில்_
= *திட்டு*
_மரம் நடு_
= *ர*
_ஓரிடத்தில்_
= *ர* _inside_ *திட்டு*
= *திரட்டு*
= _ஒன்று சேர்_
*************************
_விநாயகர் வெண்பாத் *திரட்டு*_
விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
பாடும் விநாயகனைப் பார்த்து வினைதீர்க்க
நாடும் அடியவர்க்கு நாள்தோறும் - பீடுடைய
நல்விநாய கன்நலமே நல்குவான்; காலமெலாம்
வல்விநாய கன்தாள் வணங்கு!
தம்புராவைக் கையிலே வைத்தபடி தான்பாடும்
நம்விநாய கன்புகழை நாம்பாட - நம்வினைகள்
தீர்ந்திடுமே; ஒவ்வொரு நாளும் தவறாமல்
ஓர்ந்தே அவன்புகழைப் பாடு!
💐🙏🏼💐
********************