Skip to main content

விடை 3626

இன்று காலை வெளியான வெடி:

நச்சு ஏரியின் நீரை நகுலன் பருகிய பின் திரௌபதிக்கு எத்தனை உலகங்கள் ? (5)

காட்டில் வேட்டையாடிக்  களைத்திருந்த பாண்டவர்கள் தாகத்திற்கு நீரெடுத்துவர முதலில் நகுலன் சென்றான்.  தண்ணீரைக் குடிக்கும் முன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்ட யக்ஷனை மீறியதால் விஷமான நீர் நகுலன் சாகக் காரணமானது. அதனால் ஐந்து பதிகளைப் பெற்ற திரௌபதிக்கு அச்சமயம் பதிநான்கு


என்றாகி விட்டது. (அதன் பின் மற்ற சகோதரர்களும் ஒவ்வொருவராய் இதே போல் மாண்டுபோக தருமர், பொறுமையாய்க் கேள்விகளுக்கு பதிலளித்து சகோதரர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தார். மஹாபாரதத்தின் ஆழமான தத்துவங்களடங்கியது இந்த பகுதி.)
 இன்றைய புதிர் முதலில் நகுலன் இறந்த தருணத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆனால் பதினநான்கை நான்கு பதிகள் என்று மாற்றிச் சிந்திக்கும் அழகான  கற்பனை கொண்டவர்கள்  ஈரேழு உலகங்களிலும் வெகு சிலர்தான் இருக்கிறார்கள். அது நானில்லை. பூங்கோதைதான் இதற்குச் சொந்தக்காரர். அவருடைய புதிரை லேசாக மாற்றிவிட்டிருக்கிறேன்.
"ராமர் காட்டுக்கு எத்தனை வருஷம் போனா என்ன, தருமர் செத்தா திரௌபதிக்கு என்ன? (5)" என்று  பூங்கோதை "பதிநான்கு" என்பதற்கு ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் முடிச்சு போட்டு  புதிரை ஆக்கியிருந்தார். தருமரை நகுலனாக மாற்றியதுதான் என்வேலை.

ஐந்தாறு  வருடங்கள் முன் வரை பல விதமான புதிர்களை அவர் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டு வந்திருந்தார். சில வருடங்களாகக் குழந்தை வளர்ப்பு என்று மூழ்கி விட்டதால்  வரமுடிவதில்லை என்று கூறுகிறார்.
அவருடைய ஆக்கத்தில் உருவான திருக்குறள் ஒன்றின் கலைந்த வடிவம் (குறள் வளை என்ற குறும்பான பெயரில் !):

வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக
உற்றப் பயனாய் இறுக.


இன்று அனுப்பப்பட்ட விடைகள்  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள  இப்பக்கத்தைப் பார்க்கவும்


Comments

Muthu said…
இல்லை. முதலில் நச்சுப் பொய்கை சென்று மடிந்தவன் சகாதேவன்.
https://goo.gl/Z5aXzd (நா.பா. வின் மகாபாரதம் - ஆரண்ய காண்டம்)
Muthu said…
Please see also: http://www.hindupedia.com/en/Yaksha_Prasnam I am not finding fault with the "vedi". There are confusing and varying versions of this story by all and sundry. If we go by authoritative sources, we find that it was Sahadevan who lost his life first to be followed by Nakulan, Arjunan and Bheeman in that order. I just want our folks to know the real authoritative version of this famous story in Mahabaratham.
Muthu said…
இங்கு உள்ள படி நகுலன் முதலில் மடிந்தான்! http://sacred-texts.com/hin/m03/m03310.htm யாரைத்தான் நம்புவது?
Chittanandam said…
According ti Rajaji's version of Mahabharat the first person to go to the poisoned pond was Nakula.Sahadeva follows him.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்