Skip to main content

விடை 3599

இன்றைய வெடி:
நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5)

இதற்கான விடை:  நாத்திகர் =  நார் + கத்தி

இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*_பகுத்தறிவு என்பது என்ன?_*

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.
*********************
_நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5)_

_ஓராயுதம்_ = *கத்தி*

_ஓராயுதத்தைச் சுழற்றும்_
= *கத்தி --> த்திக*

_நாரிடை வைத்த_
= *த்திக* inside *நார்*
= *நாத்திகர்*
= _பகுத்தறிவாளர்_
*********************
*_பகுத்தறிவாளர் என்பவர் யார்?_*
இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.
💐🙏💐
நாத்திகரும் பகுத்தறிவாளரும் ஒன்றா?
பகுத்தறிவாளர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!
அப்படியானால், ஆத்திகர்கள் எல்லோருமே பகுத்தறியும் பண்பு அற்றவர்கள் என்று ஆகிறதே!!
நாத்திகர் என்பவர் இறை நம்பிக்கை அற்றவர். அவ்வளவே!
Vanchinathan said…
இதைத் தெரிந்தேதான் பயன்படுத்தினேன். பகுத்தறிவாளர்கள் என்ற சொல்லை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மட்டுமே தங்களைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்கள். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அச்சொல்லைத் தவிர்க்கிறார்கள். பயன்பாட்டின் அடிப்படையில் இதைச் சொல்லலாம் என்றே செய்தேன்.
Raghavan MK said…


எனக்கும் இந்த ஐயம் எழுந்தது!

Well said 👇🏽
_அப்படியானால், ஆத்திகர்கள் எல்லோருமே பகுத்தறியும் பண்பு அற்றவர்கள் என்று ஆகிறதே!!_

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்