Skip to main content

விடை 3604

இன்று காலை வெளியான வெடி:
ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2)
அதற்கான விடை:   சனி (பூசனி - பூ),
இந்தக் காயைப் பூசணியா, பூசனியா எப்படி எழுதுவது சரி என்ற குழப்பம் கொஞ்சம் இருக்கிறது.
எது சரியோ, பூசனி என்றுதான் பெரும்பாலும் எழுத/உச்சரிக்கப் படுகிறது என்பதால் அதைப் பயன்படுத்தினேன்.
க்ரியா தமிழகராதி இரண்டையும் குறிப்பிடுகிறது.
(ஆனால் பெரும்பாலானோர் சொல்வதால் ஒன்று சரியாகி விடுமா? அப்படியானால் பவளம் பிழையானது, பவழம்தான் சரியென்று வாதிட இது இடங் கொடுக்கிறது).
இரண்டு நாட்களாக என் வாக்கில் சனி வந்து கொண்டிருக்கிறது. அதனால் சனிக்கிழமையான நாளை சனி வராது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
மகளிர் தின வாழ்த்துக்கள்!💐
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கிராமத்து மார்கழிக் காலை_

கருக்கலின் போதே கண் விழித்து விருட்டென சிலவாளி நீர் இறைத்து சுருக்கெனச் சிலிர்க்க மேனி நனைத்து சுருட்டித் துண்டை தலையில் கோர்த்து உருக்கும் பனியில் வாசல் தெளித்து இருவிரல் திரித்து வண்ணக் கோலமிட்டு வருடும் காற்றில் கேசம் பின்தள்ளி ஒருபிடி சாணம் கோலத்தின் நடுவில் செருகும் *பூசணிப் பூவதன்* அழகில் பெருமைமிகு எம்குலப் பெண்களைக் காண மார்கழிக் காலை மயக்கிடும் ஆளை ! [சதங்கா (Sathanga) ]
******************** 
_ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2)_ 
_ஒரு காய்_
= *பூசனி*
_பூ இல்லாமல்_
= *பூசனி--பூ*
= *சனி*
_வளையத்துடன் வளைய வரும்_
= *சனி* ( _சனிக்கோள் ..Saturn with rings_ )
********************* 
*கலிலியோவும், சனிக் காதும்..!*

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் *_வளையங்களைப்_* பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.💐🙏🏼💐
********************* 
புதிரில்
நேற்று 3ம் இடத்தில் சனி(சயனி)
இன்று 2ம் இடத்தில் சனி(பூசனி)
சனிப்பெயர்ச்சி நாளையும் தொடருமா?😌
************************

இன்றையப் புதிரைப் பாராட்டும் பொருட்டு அதன் தன்மையை
உத்தேசித்து நெடுநல்வாடை எனக் கூறலாம் என்று தட்டச்சினால், தான்திருத்தி அதனை
நெடு நாள் வடை எனக் குறிப்பிடுகிறது..என்னத்த ஜெய்ய?
குரங்காய் முடிந்த கதை தான்! Mr. Saturn விடற மாதிரி இல்லே. ஆரம்பிச்சு வச்சவரும் முடிச்சு வச்சதும் அவர் தான்!
Chittanandam said…
பூசனி என்கிற. சொல்லை நான் கண்டதேயில்லை
Muthu said…
University of Madras Lexicon
பூசனி
pūcaṉi n. perh. பூ³ + சுணை. 1.Pumpkin, Cucurbita pepo; பூசனிவகை. 2.Squash gourd. See சர்க்கரைப்பூசனி. 3. Truemusk melon, Cucurbita moschata; பூசனிவகை.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...