Skip to main content

விடை 3604

இன்று காலை வெளியான வெடி:
ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2)
அதற்கான விடை:   சனி (பூசனி - பூ),
இந்தக் காயைப் பூசணியா, பூசனியா எப்படி எழுதுவது சரி என்ற குழப்பம் கொஞ்சம் இருக்கிறது.
எது சரியோ, பூசனி என்றுதான் பெரும்பாலும் எழுத/உச்சரிக்கப் படுகிறது என்பதால் அதைப் பயன்படுத்தினேன்.
க்ரியா தமிழகராதி இரண்டையும் குறிப்பிடுகிறது.
(ஆனால் பெரும்பாலானோர் சொல்வதால் ஒன்று சரியாகி விடுமா? அப்படியானால் பவளம் பிழையானது, பவழம்தான் சரியென்று வாதிட இது இடங் கொடுக்கிறது).
இரண்டு நாட்களாக என் வாக்கில் சனி வந்து கொண்டிருக்கிறது. அதனால் சனிக்கிழமையான நாளை சனி வராது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
மகளிர் தின வாழ்த்துக்கள்!💐
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கிராமத்து மார்கழிக் காலை_

கருக்கலின் போதே கண் விழித்து விருட்டென சிலவாளி நீர் இறைத்து சுருக்கெனச் சிலிர்க்க மேனி நனைத்து சுருட்டித் துண்டை தலையில் கோர்த்து உருக்கும் பனியில் வாசல் தெளித்து இருவிரல் திரித்து வண்ணக் கோலமிட்டு வருடும் காற்றில் கேசம் பின்தள்ளி ஒருபிடி சாணம் கோலத்தின் நடுவில் செருகும் *பூசணிப் பூவதன்* அழகில் பெருமைமிகு எம்குலப் பெண்களைக் காண மார்கழிக் காலை மயக்கிடும் ஆளை ! [சதங்கா (Sathanga) ]
******************** 
_ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2)_ 
_ஒரு காய்_
= *பூசனி*
_பூ இல்லாமல்_
= *பூசனி--பூ*
= *சனி*
_வளையத்துடன் வளைய வரும்_
= *சனி* ( _சனிக்கோள் ..Saturn with rings_ )
********************* 
*கலிலியோவும், சனிக் காதும்..!*

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் *_வளையங்களைப்_* பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.💐🙏🏼💐
********************* 
புதிரில்
நேற்று 3ம் இடத்தில் சனி(சயனி)
இன்று 2ம் இடத்தில் சனி(பூசனி)
சனிப்பெயர்ச்சி நாளையும் தொடருமா?😌
************************

இன்றையப் புதிரைப் பாராட்டும் பொருட்டு அதன் தன்மையை
உத்தேசித்து நெடுநல்வாடை எனக் கூறலாம் என்று தட்டச்சினால், தான்திருத்தி அதனை
நெடு நாள் வடை எனக் குறிப்பிடுகிறது..என்னத்த ஜெய்ய?
குரங்காய் முடிந்த கதை தான்! Mr. Saturn விடற மாதிரி இல்லே. ஆரம்பிச்சு வச்சவரும் முடிச்சு வச்சதும் அவர் தான்!
Chittanandam said…
பூசனி என்கிற. சொல்லை நான் கண்டதேயில்லை
Muthu said…
University of Madras Lexicon
பூசனி
pūcaṉi n. perh. பூ³ + சுணை. 1.Pumpkin, Cucurbita pepo; பூசனிவகை. 2.Squash gourd. See சர்க்கரைப்பூசனி. 3. Truemusk melon, Cucurbita moschata; பூசனிவகை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்