Skip to main content

விடை 3606


நிறைய‌ விஷயங்களைத் தெரிந்துகொள்ள அதீத ஆவலுடன் சிலர் இருப்பார்கள்.
அப்படி ஒருவரை நேற்று மாலை நான் சந்தித்து, பொழுதுபோவது தெரியாமல் நீண்ட நேரம் அளவளாவிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய விஷயம் தெரியுமாதலால் சுவாரசியமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. அவர் கற்கால, தற்கால இலக்கியமெல்லாம் கற்றவர். எனக்கோ இதெல்லாம் தெரியாது.
ஏதோ எக்ஸ், ஒய் என்று மாணவர்களிடம் பினாத்திக் கொண்டு காலத்தை ஓட்டுபவன்.  இருந்தாலும் எனக்கும் இலக்கியம் கொஞ்சம் தெரியுமாக்கும் என்று சும்மா ஒரு கப்ஸாவிட்டேன் (நமக்குதான் உண்மையிலேயே விஷயம் தெரியாதே!)

அனுமார்  நெருப்பு வைத்த‌ இலங்கைத் தீவு அணைத்த பின் மிச்சமிருந்த வு க்கு முன்னே ராவணனின் துருப்பு பாதி ஓடிவிட்டது என்று அவ‌ரிடம் சொன்னேன். உடனே அவர் என்னை விடவில்லை.  கம்ப‌ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் எந்த படலத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அல்லது வால்மீகி எந்த சுலோகத்தில் சொல்லியிருக்கிறார் என்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். அவருக்கு பதில் சொல் முடியாமல்  நான் "ஐயா, நான் உதிரிவெடி என்று ஒரு வலைப்பதிவில் தினம் புதிர் ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வாசகர்களுக்கு நாளைக்குக் காலை 6 மணிக்குள்ளே நான் புதிரைத் தயாரித்து வெளியிடவேண்டும், ஆனால் எனக்கோ ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிவரை தூங்கவேண்டும் இப்போது என்னை விட்டுவிடுங்கள்" என்று சொல்லி அந்தக் குடைவரின் துருவலிலிருந்து தப்பித்து இப்புதிரைச் செய்தேன்.

இப்புதிரை நேரத்துக் கொண்டு வருவதற்கு எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள்! ஐந்தேகால் மணிக்குக் கொட்டக் கொட்ட விழித்துக் கொள்ளும் நானே என்னைப் பற்றித் தூங்கு மூஞ்சி என்று சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Comments

Muthu said…
கதை ரொம்ப ஸ்வாரஸ்யம்! (புதிரும்தான்).
Chittanandam said…
GREAT, DE.VANCHINATHAN. YOUR PASSION AND DEVOTION.
Raghavan MK said…

A peek into today's riddle!
********************
*_குடை சாயாத கவிதைகள்!_* 😌
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_மழை வரும் நேரம் தலை சுமக்கும் பூக்கள்_ _நனையாமல் குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த மல்லிகைச் செடி நீ!_

அருட்பெருங்கோ (http://blog.arutperungo.com)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*_வானம் பார்த்த பூமியில் ஒரு குடையின் கதை.._*

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எங்கு கிடைக்க போகிறது மழையின் ஸ்பரிசம்..!!

இங்கு கோடை தவிர ஒரு பருவமும் வந்ததில்லை சூட்டை தவிர ஒரு உணர்வும் கண்டதில்லை…!!

குடைகள் தவமிருக்க படைகள் துயர் துடைக்க மழை வந்து கொண்டே இருக்கிறது நூற்றாண்டு காலமாக …!!

குடைக்கெதற்கு மழை..? வெயில் போதாதா..! விவாதங்கள் பல கடந்து.. நைந்து தான் போய் விட்டது அந்த குடை…

தூக்கி எரிய குப்பை தொட்டி தேடும் படலம்…!! வருந்துவதை தவிர செய்வதற்கென்ன இருக்க முடியும் குடை கொண்டானுக்கு….!!

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில் குடைக்கு எதற்கு மழையின் ஸ்பரிசம்??!!!!
Bharathi Rajmadan
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_குடை நெருப்பை அணைத்துத் திட்டு முன் பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது (3)_
திட்டு= தீவு
நெருப்பை அணைத்துத்
= தீவு-தீ=வு
பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது
=துருப்பு-ப்பு
= துரு
குடை=துரு+வு!=துருவு
*************************
_எட்டும் தொலைவில் வானம், விண்மீனும்_ _கண் சிமிட்டும், வானவில் வந்து குடை_ _பிடிக்கும், நீ என் அருகில் இருந்தால்!_

கனவுசிற்பி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*எதையும் தாங்குவோம்.* 

பட்டுப் பட்டு 
பழகிப் போனோம் .. 
திட்டு வாங்கி.. 
திகட்டிப் போனோம். 
சிட்டுக் குருவி 
வாழ்க்கை தேடி 
சிறுது சிறுதாய் 
அழிந்து போனோம்.. 
இடுக்கண் இனிமேல் 
எப்படி வரினும் 
எல்லாம் தாங்குவோம்  

நாச்சியாதீவு பர்வீன். 
இலங்கை
******&&&&*******&&&&
💐🙏🏼💐

புதிருக்கான சரடு ரொம்ப ஸ்ட்ராங் . எம்கே
ஆரின் விளக்கத்திற்கு வழக்கம் போல ஒரு ஷொட்டு
பலே!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.