இன்று காலை வெளியான வெடி
இரண்டாம் தாரம் வெளியே இல்லாமல் புலம்பு (4)
இதற்கான விடை: அரற்று = ர + அற்று
"வெளியே இல்லாமல்" என்பதை இங்கு எனக் கொண்டு இதற்கு "இரங்கு" என்ற விடையும் அளிக்கப்பட்டுள்ளது. புலம்புதல் தன்னுடைய துன்பத்தை வெளிப்படுத்தச் சொல்வது. இரங்குதல் என்பது மற்றொருவருக்கு நேரிட்ட துன்பத்தைக் கண்டு தோன்றும் உணர்வு.
இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

Comments
**********************
_இரண்டாம் தாரம் வெளியே இல்லாமல் புலம்பு (4)_
_இரண்டாம் தாரம் வெளியே_
= *ர*
_இல்லாமல்_
= *அற்று*
_இரண்டாம் தாரம் வெளியே இல்லாமல்_
= *ர-->அற்று*
= *அரற்று*
= _புலம்பு_
**********************
கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல்!
_வாரணம் *அரற்ற* வந்து கரா உயிர் மாற்றும் நேமி_
_நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை என்பார்_
_ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,_
_காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்_
யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார்.
நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.