Skip to main content

விடை 3603

இன்றைய வெடி:
பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)
இதற்கான விடை: நியதி = நிதி + சயனி (தூங்கு) - சனி

இன்று அளிக்கப்பட்ட விடைகள் அனைத்தும் (8 மணிவரை) சரியே.
இங்கே சென்று அப்பட்டியலைப் பார்க்கவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************
திருமாலின் *சயனங்கள்*
10 வகைப்படும். அவைகள்:
1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்
🙏🏼
************************
_பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3)_
_பணம்_ = *நிதி*
_வார இறுதி_ = *சனி*
_தூங்கு_ = *சயனி*
_வார இறுதி கழியும் வரை தூங்கு_
= *சயனி-சனி*
= *ய*
_பணத்தில் ய_
= *ய--> நிதி*
= *நியதி*
= _இயற்கையின் சட்டம்_
************************
_இயற்கையின் நியதி?_

தரையில் விழுந்த மீன்
துடி துடிக்குது,
தத்தளிக்குது
அதன் முடிவு நெருங்குது

தரையில் வீசிய மீனவன்
மனமோ...குதூகலித்தது
கும்மாளமிட்டது...!
மீனவனின் அன்றைய
வாழ்விற்கு பதில் அது

விற்று கிடைக்கும் பணத்தில்
என்ன பொருட்கள் கிடைக்கும்
என்றவன் மனம் கணக்கிட்டது,
மீனின் முடிவில் மீனவனுக்கு
அன்று வாழ்வு....!

_இது தானோ_ _இயற்கையின் நியதி?_
_இல்லை இது விதியின் அநீதி_ ?
(நிர்மலா மூர்த்தி)
************************
If interested to read full version of the "peek", whstsapp to 9008746624 💐🙏🏼💐
**********************
Raghavan MK said…


Dear Mr. Vanchi!
அழகான கட்டமைப்புடன் கூடிய அருமையான புதிர்!

பாராட்டுக்கள் 💐

காலையில் புதிரை படித்தவுடனே விடை மனதில் பளிச்சிட்டது. ஆனால் விடையை புதிர் சொற்களுடன் இணைக்க முடியவில்லை!

Then l decided to post the answer only if l were able to link it with the clues. And l could succeed only by afternoon
and sent the answer!

Indeed a nice puzzle!

Keep going!
Thank you!
MKR

வெட்டு, கொலை, குத்து போன்ற காட்சிகள் இல்லாமல் ஆபாசமற்ற அருமையான புதிர்.குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய உன்னத புதிர்.இருப்பினும், அனாவசிய ஆலாபனையைத் தவிர்த்திருக்கலாம்.MRK ஐயா அவர்களின் விளக்கம் கன ஜோர்! Deserves a pat on the back. ஒரு கேள்வி ஐயா..ஆள் இல்லாதக் கடையில் யாருக்காக இத்தனை ஸ்ட்ராங்காய் டீ
ஆத்துகிறீர்கள்?
Chittanandam said…
😄😄😄😄
Vanchinathan said…
தொடர்ந்து புதிரை முயன்று சரியான விளக்கத்தை அறியும்வரை பொறுமையுடன் இருந்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி! பாராட்டு!.
உஷா said…
ஆளில்லாத கடையா? நானெல்லாம் கண்விழிப்பதே உதிரிவெடியில்தான்

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்