இன்றைய வெடி
தேவலோகத்துக்காரி நகர் வெளியேறி வாழ் (2)
இதற்கான விடை: வசி = ஊர்வசி - ஊர்
இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகள் யாவற்றையும் காண விரும்புவோர்
இங்கே செல்லவும்.
தேவலோகத்துக்காரி நகர் வெளியேறி வாழ் (2)
இதற்கான விடை: வசி = ஊர்வசி - ஊர்
இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகள் யாவற்றையும் காண விரும்புவோர்
இங்கே செல்லவும்.
Comments
*************************
சிலப்பதிகார
நாட்டிய அழகி மாதவி ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் தேர்ந்தவள் ஆயினாள். அவள் _ஊர்வசி_ மரபில் வந்தவள் என்று பேசப்பட்டது. அதற்கு ஒரு கதையும் கூறப்பட்டது.
இந்திரன் அவையில் சந்திரன் எனத் திகழ்ந்த சயந்தனைக் காதலித்த நடனமாது ஆகிய *ஊர்வசி* நாட்டியம் பிறழ்ந்தாள். அதனால் அவள் மண்ணுலகில் பிறக்கச் சாபம் பெற்றாள். அவள் சாபம் இங்கு இப்புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது; அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது. என்பர். அத்தகைய சிறப்பு மிக்க *ஊர்வசி* புகார் நகரில் பிறந்தாள். அவ்வழி வந்தவள் மாதவி என்று சிறப்பித்துப் பேசப்பட்டது.
*************************
_தேவலோகத்துக்காரி நகர் வெளியேறி வாழ் (2)_
_தேவலோகத்துக்காரி_
= *ஊர்வசி*
_நகர் வெளியேறி_
= *ஊர்வசி-- ஊர்*
= *வசி*
= _வாழ்_
*************************
_வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்_
_தெய்வத்துள் வைக்கப் படும்._
(குறள் 50: இல்வாழ்க்கை அதிகாரம்)
இக்குறள் உணர்த்தும் எளிய உண்மை, நெறியோடு கூடிய இல்லறத்தை வாழுகின்றவர்க்கள், விண்ணுலகின் தேவர்களில் ஒருவரென அவர் வாழும் காலத்திலேயே மதிக்கப்பட்டு வணங்கப்படுவர். இல்லறத்தின் சிறப்பை, அது மற்ற அறத்தோர் அவரவர் வழிநின்று முறையான கடமை ஆற்ற உதவுதலை, அவர்கள் மரபினர் என்றும் மறையாத தன்மையை எல்லாம் எடுத்துக் கூறி, இறுதியாக, அவர்களை தெய்வங்களுள் ஒருவரென வைக்கப்படுதலைக் கூறி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.
இறைநிலையே இறுதி நிலை என்பதால் இதை இறுதிக்குறளாக வைத்தது. இதனால், உலகு நீங்கி வீட்டுப்பேற்றை அடைவதையும் உள்ளுரையாகச் சொல்லியிருக்கிறார்
*************************
💐🙏🏼💐