Skip to main content

விடை 3619

இன்று காலை வெளியான வெடி

கொழு உண்டாக்கிய பள்ளத்தில் விழுந்த முதல் யவனனை ஒத்திருக்கும் தன்மை (3)

ஏரோட்டும்போது கலப்பையில் மாட்டியிருக்கும் கொழு மண்ணைக் கிழித்து உருவாக்கும் பள்ளத்தை  உழவர்கள் சால் என்று சொல்வார்கள். (ஏற்றத்தில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் பெரிய பாத்திரத்தையும் சால் என்பர்).
இதெல்லாம் நான் முப்பது வருடம் முன்பு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும்போது   எங்கள் சித்தப்பா வீட்டில் கேட்டது. அதே கிராமத்து வீட்டில் பிறந்து வளர்ந்த  அந்த சித்தப்பாவின் பேர‌க் குழந்தைகள் இப்போது கல்லூரி படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வார்த்தை காதில் விழாமலே அந்த கிராமத்தில் வளர்ந்திருப்பார்கள்.
உழுவதற்கு மாடும் கலப்பையும் கிடையாது, டிராக்டர்தான். ஏற்றம்  கிடையாது, மின்சாரத்தில் இயங்கும் பம்புகள்தான்.
எனக்கு தெரிந்த கிராமமெல்லாம் 1980க்கு முறப்பட்ட கிராமங்கள்தான்.

இன்றைய விடை: சாயல் (அவருடைய பாடல்களில் அதிகம் நாட்டுப்புற இசையின் சாயல் இருக்கும்)
இன்றைய விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…


புதிரின் விடையை பள்ளத்திலிருந்து எடுப்பதற்குள் போதுமென்றாகி விட்டது!

அருமையான புதிர்.

************************
*கொழு உண்டாக்கிய பள்ளத்தில் விழுந்த முதல் யவனனை ஒத்திருக்கும் தன்மை (3)*
_கொழு_
= _பெயர்ச்சொல்_
_கலப்பையில் (மண்ணைக் கிளறும் பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும்) கூரான இரும்புப் பட்டை_ .

_கொழு உண்டாக்கிய பள்ளத்தில்_
= *சால்*
_சால்_
_பெயர்ச்சொல்_
_உழும்போது நிலத்தில் கொழு ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம்._

_(நிலத்தை ஒரு முறை கலப்பைகொண்டு செய்யும்) உழவு._
*எ.கா:*
_‘இன்னும் இரண்டு சால் ஓட்டினால் நிலம் விதைப்பதற்குத் தயாராகிவிடும்’_

_முதல் யவனனை_
= *ய*
_பள்ளத்தில் விழுந்த முதல் யவனனை_
= *ய-->சால்*
= *சாயல்*
= _ஒத்திருக்கும் தன்மை_ 😌😌
************************
Muthu said…
"சால்" - இன் இன்னொரு பொருள் தெரிந்து கொண்ட புத்தி"சாலி" ஆனேன்.முதல் யவனன் விழுந்த போதே, நடுவில் இருக்கும் எழுத்து "ய" என்று தெரிந்தது. ஒத்திருக்கும் தன்மை "சாயல்" கொடுத்தது. அகராதி புரட்டி, க்ரியா மூலம் "சால்" என்றால் கொழு தோண்டும் பள்ளம் என்று ஊர்ஜிதமாயிற்று. முழுத் திருப்தியுடன்
விடை "சாயல்" என்று கணித்துவிட்டேன்!
கொழு உண்டாக்கிய பள்ள (=2) த்தில் விழுந்த முதல் யவனனை (1) = ஒத்திருக்கும் தன்மை (3)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்