இன்றைய வெடி:
அம்மனிதரின் சேர கம்பீரம் தலை கவிழ உள்ளே வருக (5)
சேரனைக் கூப்பிட்டு செந்தமிழில் செய்தவெடி
யாரவர் கண்டார் விடையென்(று) அறிந்திடவே
சென்றிடுவீர் இங்கே அவருடைய சிந்தையது
வென்றதினைப் பார்ப்பீர் விரைந்து.
நேற்றைய விடை பற்றி எழுதும்போது பத்தேமுக்கால் மாற்றுப் பொன் என்று புத்திசாலித்தனமாக சொன்னதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ரவி சுந்தரம் கருத்துரையில் அது தவறென்று சொன்னதோடு, பத்தரை மாற்று என்றால் என்ன என்று விளக்கியுள்ளார். அவருக்கு நன்றி.
இவ்வாறு ஏதாவது சொதப்பினால் சுட்டிக் காட்டுங்கள். நல்லாயிருந்தாலும் நல்லாயிருப்பதாகச் சொல்லலாம், எனக்கேதும் ஆட்சேபணையில்லை. அதற்காகத்தான் கருத்துரைப் பெட்டி வைத்திருக்கிறார்கள்!
Comments
*************************
இப்படித்தான் புதிரை அவிழ்த்தேன்! 👇
_அம்மனிதரின் சேர கம்பீரம் தலை கவிழ உள்ளே வருக (5)_
_சேர_ = *அடைய*
_கம்பீரம் தலை_ = *க*
_கவிழ வருக_
= *வருக - க* = *வரு*
_உள்ளே_
= *வரு-> அடைய*
= *அவருடைய*
= _அம்மனிதரின்_
*************************
Compared to yesterday l thought today's riddle is not that much tough one to solve!
But l could see only 17 solvers reaching the finish line! 🏃🏾♂
இன்றைய புதிரின் விடை ஊகிக்க முடியவில்லை. சேர என்றவுடன் வில் யானை ஆதன் என்றெல்லாம் எண்ணினேன். சிறப்பு
யோசித்தேன். சேர என்பது அடைய என்று தோன்றவும், அம்மனிதரின் = அவருடைய பளிச்சிட்டது; கம்பீரம் தலை கவிழ உள்ளே வருக என்பது மூளைக்குள் வந்தது! புதிர் எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும் இரசிக்கும் படி அமைக்கும் திறன் பாராட்டப் படவேண்டியதே!