Skip to main content

விடை 3618



இன்றைய வெடி:
ஐந்தையடக்கிய நெற்றியில்  காணப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது (4)

 ஐம்புலன்களையும் அடக்காத சராசரி மனிதரும் விடையைக் கண்டுபிடிக்கலாம்.
நெற்றியில்  திருநீறையும்  நாமத்தையும் ஒற்றைக் கோடாகவே, மூன்று கோடுகளாகவோ இட்டால் விடை கிடைக்காது.  தமிழ் எண் ஐந்தை இட்ட
நெற்றிப் பொட்டில்தான் சூட்சுமமம் அடங்கியிருக்கிறது.

இன்றைய புதிரை ஒரு பொருட்டாகக் கருதி  விடை தேடி இட்டவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Muthu said…
விடைகள் புள்ளி விவரம் (இது பொருட்டல்ல!): மொத்த விடைகள் 53; பொருட்டு கண்டோர்: 34 மாற்று விடைகள்: 19. பொட்டு எல்லார் நெற்றியிலும் காணப்படாததால் விடை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்திருக்கலாம்!
நான் இன்றும் தேறி விட்டேன்! மகிழ்ச்சி! இதை பொருட்படுத்தாதே, இதன் பொருட்டுத்தான் ஓடோடி வந்தேன் என்று கூறுவதை எல்லாம் கேட்டு இருக்கிறேன்.