Skip to main content

விடை 3617

இன்று காலை வெளியான வெடி
தென்னை ஓலையாலான தேங்காயின் பகுதி ?! (3)
இதற்கான விடை: கீற்று. உடைத்த தேங்காயைக் கீறிப் பெறப்படும் துண்டு, கூரை வேய்வதற்காக ஓலையில் பின்னப்பட்ட பொருள், இவ்விரண்டின் பெயரும் கீற்று!

இன்று  அனுப்பப்பட்ட விடைகளைக் காணச் செல்ல வேண்டிய பக்கம்.

விதம் விதமான புதிர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய ஒரு தளம், ராமராவ் உருவாக்கிய பல புதிர்களடங்கிய திரைக்கதம்பம் வலைப் பதிவு. அவர் அபாரமாக ஒரு துறையிலுள்ள‌ சொற்களை மட்டுமே கொண்டு 69 வாரங்களாக உருவாக்கி வருகிறார்.




Comments

Muthu said…
சென்னையில் "பத்தை"!
Ambika said…

கீற்றுக்கு பத்தை சரி; ஓலையுடன் எப்படி பின்னி பிணைப்பது? :-)
காணாமல் போன காதலி திரும்ப கிடைத்தது போன்ற மகிழ்ச்சி இன்றைய புதிரை கண்ட போது! நன்றி வாஞ்சி சார்!
Ramarao said…
திரு வாஞ்சிநாதன் அவர்கள் என்னுடைய வலைத்தளம் (திரைக்கதம்பம் - திரை குறுக்கெழுத்துப் புதிர்). https://thiraijaalam.blogspot.com பற்றி, மற்ற புதிர் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

இந்த திரை குறுக்கெழுத்துப் புதிர் கடந்த 6 வருடங்களாக, (மாதம் ஒரு புதிர்) ஒவ்வொரு மாதமும் 20 ந்தேதி வெளியிட்டு வருகிறேன். இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

இதுவரை வெளியிட்ட 69 திரை குறுக்கெழுத்துப் புதிர்களின் தனிக்கூறுகள். (SPECIALITIES)

1. விடைகள் அனைத்தும் தமிழில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களே. .

2. திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட்டவையே. மொழி மாற்றுப் படங்கள் (dubbed films) கிடையாது.

3. புதிர்க் கட்டங்கள் அனைத்தும் 9 x 9 அளவுகளில் சரிசீரமைப்பில் (symmetrically) அமைக்கப் பட்டவை.

4. விடைகளில் எவையும் கட்டங்களில் நிரப்புகையில் மேலிருந்து கீழாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ அமையும்படி அமைக்கவேயில்லை.

5. விடைக்கான தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் முழுமையாக விடைகளில் இருக்கும். எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ, மாற்றியமைக்கவோ இல்லை.

6. விடைகளில் ஆங்கில / வேற்று மொழி சொற்கள் இருப்பினும், அவையெல்லாமே தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டன என்பதை அறியலாம்.

7. விடைகளில் ஒருமுறை பயன்படுத்திய தமிழ் திரைப்படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தவே இல்லை. ( நான் ஒரு database வைத்துள்ளேன்)

8. முடிந்தவரை குறிப்புகள் அனைத்தும் பொருள் உள்ள வாக்கியங்களாகவே அமைக்கப் பட்டுள்ளன.

9. குறிப்புகளில் அதிகமாக பொது அறிவை பயன்படுத்த தேவையில்லாதவாறு அமைக்கப் பட்டுள்ளன. அப்படியிருப்பினும், விடைகள் கொடுத்துள்ள குறிப்புகளிலேயே மறைந்திருக்குமாறு அமைக்கப் பட்டுள்ளன.

​10. விடைகள் (தமிழ் திரைப்படங்களின் தலைப்புக்கள்) சரியானவை தானா என்பதை உறுதி செய்து கொள்ள http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

மேலே கண்ட தனிக் கூறுகளை (Specialities) ஆராய்ந்து பார்த்தால்,

ஒரே கருவை (தமிழ் திரைப்படங்களின் பெயர்கள்) கொண்டு குறுக்கெழுத்துப் புதிர்களை அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும் மேலும், திரைப்படத் தலைப்புகளுக்கு குறிப்புகள் அமைப்பது எவ்வளவு கடினம் என்பதும், புதிர் அமைப்பாளர்களுக்கும், புதிர் ஆர்வலர்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதிக புதிர் ஆர்வலர்கள் பங்கேற்றால் நான் மிகவும் மகிழ்வேன். எனது மின்முகவரி: sathyaapathi@gmail.com

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்