Skip to main content

விடை 3621

இன்று காலை வெளியான வெடி
திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5)
இதற்கான விடை:  களேபரம்

இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்:

I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line
சுத்த களேபரம் சோம 
கலாதரம்
appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about!
For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body).




இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.


Comments

Raghavan MK said…



கடந்த சில தினங்களாக புதிர்களின் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டு, வழக்கமான பாதையிலிருந்து
விலகி, புதியபாதையில் பயணிப்பது போன்றுள்ளது.

வரவேற்க தக்க மாற்றமிது.

களேபரமான உதிரிவெடிகள் எங்களுக்கு ஒரு சவால்!

சில சமயம் பள்ளத்தில் வீழ்ந்தாலும் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்து விட்டு களம் காண காத்திருக்கிறோம்.

வாஞ்சியாரே
வீசுங்கள் வெடிகளை இத்தரமே!
அயரமாட்டோம் விடை காணும்வரை!!
***************
இன்றைய களேபரமான புதிர்!

*களேபரம்*
பெயர்ச்சொல்
(ஒரு நிகழ்ச்சியால், ஒன்றிற்கான ஆயத்தங்களால் கூட்டம் நிறைந்த இடத்தில் நிலவும்) *பரபரப்புடன்* கூடிய குழப்பம்.

களேபரத்திற்கு வேறு பொருளும் உண்டென்று இன்று அறிந்தேன்.
👇🏽
குழப்பம்,
உடம்பு
எலும்பு
பிணம்😳
*************************
_திருமகளே பரம்பரையில் வாய்த்திருப்பதால் ஏற்பாடுகளில் ஒரு பரபரப்பு (5)_

_திருமகளே பரம்பரையில் வாய்த்திருப்பதால்_
=திரும *களே பரம்* பரையில்
= *களேபரம்*

_ஏற்பாடுகளில் ஒரு பரபரப்பு_
= *களேபரம்*
*************************
Raghavan MK said…
_மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை_ _யோம்பும்_
_சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்_
_கொப்புளே போலத் தோன்றி யதனுளே_ _மறையக் கண்டும்_
_*இக்களே பரத்தை* யோம்ப_ _வென்செய்வான் றோன்றி னேனே_ .

*பொழிப்புரை* :
மனைவி , மக்கள் , அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற *இவ்வுடம்பைப்* பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் . யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

- *_தேவாரம்_* ;
_உடம்பு என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப் பட்டுள்ளது_
*************************
மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே
- தேவாரம்; உடம்பு என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப்பட்டுள்ளது

சோரமங் கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில் சூதகப் பெண்கள் நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடுபுகையில் நீசர்நிழலில்
- குமரேச சதகம், பிணம் என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப்பட்டுள்ளது

But, generally we understand kalebaram as chaos or kuzhappam. Therefore, the puzzle did not cause any kuzhappam and it was revealing itself in the puzzle within a second.
Muthu said…
கலைமகளே பரம்பொருளாய் வந்து எனக்கு விடை தெரிவித்தார்!

களேபரம் என்னும் ஸ்ம்ஸ்க்ருதச் சொல் உடல் என்று பொருள் தரும்; சென்னை பல்கலை அகராதி மற்றும் சிக்காகோ அகராதிகளில் இந்த (சரியான) பொருள் காணலாம்):
சொல்
அருஞ்சொற்பொருள்
களேபரம் உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் .
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=களேபரம்

*களேபரம், (p. 267) [ *kaḷēparam, ] s. A corpse, பிணம். 2. Bones, எலும்பு. 3. Body, உடல். Wils. p. 22. KALEVARA. (p.)
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=winslow&query=களேபரம்

மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே
- தேவாரம்; உடம்பு என்ற பொருளில் களேபரம் பயன்படுத்தப்பட்டுள்ளது

நம் பேச்சு வழக்கில் வடவர் அயோக்கியன் (யோக்கியதை அற்றவன்) தமிழ்
கெட்ட குணத்தோன் ஆனது போல் களேபரமும் வேறு அவதாரம் எடுத்து விட்டது.
Muthu said…
<> உண்மை. நானோ "இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலை"ந்தேன்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்