தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's riddle!
*************************
வெய்யிற்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றற் காற்றுண்டு கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு, வையந்தருமிவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
*************************
_வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)_
_பாதி_ = *அரை*
_வெயிலிடை_
= _(வெ)யி(ல்)_ = *யி*
_வைத்த_
= *யி -->அரை*
= *அயிரை*
_மீன் ஒன்று_
= *அயிரை* (மீன்)
🐟🐟🐟🐟🐟🐟🐟
*************************
அயிரைக்கு வரவேற்பு
ஆண்டுக்கு ஓரிரு முறை குளம், ஏரிகள் நிரம்பி மறுகால் பாயும்போது மட்டுமே கிடைப்பதால் பொதுமக்களிடையே அயிரை மீனுக்கு தனி வரவேற்புதான். சின்னச் சின்னதாய் சுண்டு விரல் அளவிற்கு காணப்படும் அயிரை மீன்களுக்கு, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் கடும் கிராக்கி ஏற்படும்.
அபூர்வமாக கிடைக்கும் மீன் என்பதால் அயிரை மீன்கள் 1 கிலோ ரூ.1500-க்கு விற்கப்படுகிறது. சளி தொந்தரவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அயிரை மீன் நல்ல மருந்தாக இருப்பதால் மார்க்கெட்டில் அயிரை மீனுக்கு கடும் வரவேற்பு உள்ளது
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
********************
For full version including சங்கப்பாடல்களில் அயிரைமீன் whatsapp +91 90087 46624
💐🙏💐