தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's riddle!
**********************
_ஆற்றங் கரையின் மரமும் அரசறிய_
_வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - *ஏற்றம்*_
_உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்_
_பழுதுண்டு வேறோர் பணிக்கு.’_
-என ‘நல்வழி’யில் அவ்வைப் பாட்டி அறிவுறுத்துவதும் வள்ளுவர் சொன்ன உழவுத் தொழிலின் *மேன்மை* யைத்தான்.
**********************
_எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பெருத்த இழப்பு தரும் மேன்மை (4)_
_எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில்_
= *ஏமாற்றம்*
_பெருத்த_ = *மா*
_இழப்பு தரும்_
= *ஏமாற்றம் - மா*
= *ஏற்றம்*
_மேன்மை_ = *ஏற்றம்*
*************************
_வெள்ளை நிறத்தொரு பூனை_
_எங்கள் வீட்டில் வளருது கண்டீர்_
_பிள்ளைகள் பெற்றத பூனை_
_அவை பேருக்கொரு நிறம் ஆகும்_
_சாம்பல் நிறமொரு குட்டி_
_கருஞ்சாந்து நிறமொரு குட்டி__
_பாம்பு நிறமொரு குட்டி_
_வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி_
_எந்த நிறமிருந்தாலும்_
_அவை யாவும் ஓர் தரம் என்றோ_
_இந்த நிறம் சிறிதென்றும்_
_இது *ஏற்றம்* என்றும் சொல்லலாமோ?_
_சாதிப் பிரிவுகள் சொல்லி_
_அதில் தாழ்வென்றும் மேலென்றும்_
_கொள்வார்_ .
_நீதிப் பிரிவுகள் செய்வார்_
_அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்._
( *பாரதியார்* )
**************
💐🙏💐
நீங்க ஒருத்தர் தான் அய்யா
மெனக்கெட்டு ரெஸ்பாண்ட் பண்றீங்க; மத்தபடி ஏரியா வெறிச்சோடி தான் கெடக்கு..(விளக்கம் கோடி பெறும்)