Skip to main content

விடை 3508

இன்றைய வெடி

திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5)

இதற்கான விடை:  கள்வரும் (கள்  வரும்)


வெட்டிய பாளையிலிருந்து சொட்டிடும் கள்ளைச் சேகரிக்கிறார்.

(படம் : tamilwin.com என்ற வலைப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது).

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
🌴🌴🌴🌴🌴🌴
தமிழகத்தில் வீசிய கஜா புயலினால் நாசமடைந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது! இந்த சமயத்தில் போய் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?
நம் தலையை வெட்டி விடுவார்கள்!
பிறகு யோசித்ததில் புரிந்தது , *முனையை வெட்டாமலேயே* விடையைப் பெறலாம் என்று.
🌴🌴🌴🌴🌴🌴🌴

*கள்* குடிப்பதனால் தீராத வலிகள், அழல் நோய்கள், இரத்தப்போக்கு, கரப்பான் ஆகிய நோய்களை தீர்க்க முடியும். குறிப்பாக அத்தி மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளை குடித்து வந்தால் இறுதி வாழ்நாள் வரை இளைமையாகவே வாழ முடியும் என குறிப்பு கிடைக்கிறது. தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கள் தமிழர்களின் வரலாற்றில் கற்பக விருட்சம் ஆகும்.
*************************
_திருடரும் தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்?? (5)_

_தென்னம்பாளை முனையை வெட்ட என்ன நடக்கும்??_

= *கள் வரும்*

_திருடரும்_
= *கள்வரும்*

*************************
_பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு_ ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். _ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு._ _ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை -_ _இந்த மூன்றும் நீங்கினால்_
_இறைவனை அடையலாம்_ _என்கிறது ஆன்மிகம்_ . இந்த தத்துவத்தை தேங்காயும் உணர்த்துகிறது.

அதாவது, தேங்காயின் மேலே உள்ள பச்சை மட்டை மாயை ஆகும். நார் பகுதி கன்மம். தேங்காய் ஓடு ஆணவம். தேங்காயை உடைக்கும்போது ஆணவம் என்னும் ஓடு உடைந்து வெண்மையான பருப்பு வெளிப்படுகிறது. அதுபோல், இறைவன் திருவடியை அடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அகற்ற வேண்டும். இதனால்தான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறோம்.

இளம் *தென்னம்பாளையை* வெட்டி, மடல் நீக்கி இடித்து சாறு பிழிந்து 100 மில்லி அளவு எடுத்து, அதனுடன் தயிர் 100 மில்லி சேர்த்து, எலுமிச்சை பழ ரசம் 50 மில்லியும் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு, நீர்சுருக்கு, ரத்தம் அல்லது சீழ் கலந்து வரும் கழிச்சல் குணமாகும்.
*************************
_நீயோ..._

_வெண்முத்துப் பதிந்த  வெள்ளைச் சிரிப்பை_ 

_இதழ் ஏட்டில் ஏந்திய  *தென்னம்பாளை* ..!_

🌴🌴🌴🌴🌴🌴
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:01:46 சதீஷ்பாலமுருகன்
2) 6:02:19 அம்பிகா
3) 6:03:35 முத்துசுப்ரமண்யம்
4) 6:04:13 Siddhan Subramanian
5) 6:05:01 பா நடராஜன்
6) 6:05:06 ரவி சுப்ரமணியன்
7) 6:05:27 எஸ்.பார்த்தசாரதி
8) 6:06:20 லதா
9) 6:06:25 இரா.செகு
10) 6:06:29 சங்கரசுப்பிரமணியன்
11) 6:10:15 K.R.Santhanam
12) 6:18:20 மடிப்பாக்கம் தயானந்தன்
13) 6:19:35 மீ கண்ணன்
14) 6:19:42 லக்ஷ்மி ஷங்கர்
15) 6:22:46 ரவி சுந்தரம்
16) 6:34:54 ராஜா ரங்கராஜன்
17) 6:40:41 ஆர்.நாராயணன்.
18) 6:41:02 KB
19) 6:48:11 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 6:51:51 பாலு மீ
21) 6:52:02 உஷா
22) 6:58:02 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 7:09:32 ஸௌதாமினி
24) 7:09:34 கோவிந்தராஜன்
25) 7:14:43 தி. பொ. இராமநாதன்
26) 7:47:18 சுந்தர் வேதாந்தம்
27) 7:52:51 மீனாக்ஷி
28) 7:53:46 வானதி
29) 7:59:38 ரமணி பாலகிருஷ்ணன்
30) 8:00:55 மு க பாரதி
31) 8:04:59 மீனாக்ஷி கணபதி
32) 8:17:58 பாலா
33) 8:21:25 ஶ்ரீவிநா
34) 9:03:32 பினாத்தல்
35) 9:07:12 ஆர். பத்மா
36) 9:26:38 மாலதி
37) 10:14:46 சந்திரசேகரன்
38) 10:55:52 ருக்மணி கோபாலன்
39) 11:29:50 விஜயா ரவிஷங்கர்
40) 11:47:30 மாதவ்
41) 11:51:21 ராமராவ்
42) 12:00:50 புவனா சிவராமன்
43) 12:35:16 மு.க.இராகவன்.
44) 14:41:22 தேன்மொழி
45) 16:30:48 பிரசாத் வேணுகோபால்
46) 18:58:35 பானுபாலு
47) 19:18:52 ஏ.டி.வேதாந்தம்
48) 19:19:13 பத்மாசனி
**********************
Ambika said…
பழங்கால விடுகதை வடிவம், "வீரர்கள் மடிவதேன்? சாம்பார் மணப்பதேன்?" இன்றைய புதிர் நினைவூட்டியது!

இந்த பாரம்பர வடிவத்திலேயே புதிராசிரியர் அமைத்த ஒரு விடுகதை "உருளைச் செடியை பறிப்பதேன்? ஊரெல்லாம் தாத்தா ஓடுவதேன்?
Guess... ;)
Ambika said…
பாரம்பரிய‌* வடிவத்திலேயே
Chittanandam said…
கள்வரும் என்கிற விடையை நானும் அனுப்பினேன். பட்டியலில் என் பெயர் இல்லை. பரவாயில்லை.

நல்ல புதிர்.
Senthil said…
This comment has been removed by the author.
Senthil said…
பூவேலி படப்பாடல் கேளுங்க.
Vanchinathan said…
பார்த்தேன். "கள்ளரும்" என்று உங்கள் விடை பதிவாகியிருந்தது.
நான் 20.45 அளவில் கள்வரும்! என்று கூறியிருந்தேன்
தென்னையப் பெத்தாலும் கண்ணீர் தான்...அதாவது
கள் + நீர்.
Vanchinathan said…
ரங்குடு, தினம் தென்னையப் பெத்தெடுத்தாலும் ஆனந்தமாகக் கண்ணீரை ஏற்பீர்கள் போலிருக்கிறதி!
Vanchinathan said…
ஆமாம் உங்கள் பெயர் விடுபட்டுப் போய்விட்டது. 8.52க்கு சரியான விடையை அளித்துள்ளீர்கள். இன்றிரவு விடையளிக்கும்போது திருத்திய அறிவிஅப்பை எல்லோரும் பார்க்கும்படி வெளியிடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.
M k Bharathi said…

👆வீரர்கள் மடிவதேன்
சாம்பார்மணப்பதேன்

காரணம்=பெருங்காயம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்