Skip to main content

விடை 3440

இன்று (24 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
கஷ்டம் இல்லாத் தொழுகை அளவை மீறியதால் வெளியே வா (2)

இதற்கான விடை: வழி = வழிபாடு (தொழுகை) - பாடு (கஷ்டம்)

வழி = (நிரம்பி) வழி

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:13:03 தி. பொ. இராமநாதன்
2) 6:18:57 மீ கண்ணன்
3) 6:21:44 ராஜா ரங்கராஜன்
4) 6:25:21 முத்துசுப்ரமண்யம்
5) 6:25:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:28:39 மு.க.இராகவன்.
7) 6:31:07 Siddhan Subramanian
8) 6:42:16 ரவி சுப்ரமணியன்
9) 6:54:27 நாதன் நா தோ
10) 6:59:25 ஸௌதாமினி
11) 7:02:52 லக்ஷ்மி ஷங்கர்
12) 7:07:39 எஸ்.பார்த்தசாரதி
13) 7:19:19 ரவி சுந்தரம்
14) 7:20:15 மீ.பாலு
15) 7:22:24 மீனாக்ஷி
16) 7:22:40 V.R. Balakrishnan
17) 7:40:12 மு க பாரதி
18) 7:41:25 தேன்மொழி
19) 8:18:38 பினாத்தல் சுரேஷ்
20) 8:26:06 கு. கனகசபாபதி, மும்பை
21) 8:51:59 கேசவன்
22) 9:16:14 அனுராதா ஜெயந்த்
23) 9:16:39 ஏ.டி.வேதாந்தம்
24) 9:16:45 மாலதி
25) 9:17:02 பத்மாசனி
26) 9:56:02 ருக்மணி கோபாலன்
27) 10:46:49 சங்கரசுப்பிரமணியன்
28) 11:02:16 மடிப்பசுக்கம் தயானந்தன்
29) 11:05:56 ராமராவ்
30) 11:13:04 கி மூ சுரேஷ்
31) 11:24:18 வி ன் கிருஷ்ணன்
32) 11:51:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 13:15:02 மீனாக்ஷி கணபதி
34) 16:25:54 அம்பிகா
35) 16:26:11 KB
36) 16:37:49 லதா
37) 16:40:54 வானதி
38) 17:24:50 பாலா
39) 18:01:54 கோவிந்தராஜன்
40) 19:24:11 பானுமதி
41) 19:25:49 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
*************************
_காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்_
_பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்_
.............
_உறங்கும் மானுடனே உடனே வா வா_
_போர்வை சிறையை விட்டு *வெளியே வா* வா_
_அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்!_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆதி காலத்தில் இடி, மின்னல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் மீது ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே *வழிபாடு* என்ற ஒன்றே தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் பயத்தினால் இறை/இயற்கை *வழிபாடு* தோன்றியது என்றாலும், காலப்போக்கில் அது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியிருந்தது.
*************************
_என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்_
_ஏன் கையை ஏந்த வேண்டும்_ _வெளிநாட்டில்_
_ஒழுங்காய் *பாடு படு* வயல் காட்டில்_
_உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்_
_விவசாயி ....!_ _விவசாயி ....!_
*************************
_கஷ்டம் இல்லாத் தொழுகை அளவை மீறியதால் வெளியே வா (2)_

_தொழுகை_
= *வழிபாடு*

_கஷ்டம்_ = *பாடு* ( _பாடுபடு=கஷ்டப்படு_ )

_கஷ்டம் இல்லாத் தொழுகை_
= _பாடு இல்லாத வழிபாடு_
= *வழி* ( ~பாடு~ )

_அளவை மீறியதால் வெளியே வா_ = *வழி*
_(‘ அணையில் நீர் வழிந்தது’)_
*************************
*வழி*
வினைச்சொல்
_வழிய, வழிந்து, வழிக்க, வழித்து_

(அணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலையில் அல்லது ஒரு கொள்கலனில் நீர் போன்ற திரவம்)
_*நிரம்பி வழிதல்;*_
(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல்.

‘மழை அதிகமானதால் முற்றத்தில் தண்ணீர் தேங்கி *வழிந்தது* ’
‘அடுப்பிலிருந்த பால் பொங்கி *வழிந்தது* ’
*************************
_*ஆடல் வல்லான்* *ஆதிரை வழிபாடு* (ஆருத்ரா தரிசனம்)_

ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்க முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.

_தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும்._
*************************
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…
நான் பட்ட *கஷ்டம்* என்னோட போகட்டும்…
*************************
_உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்_ _மற்றெல்லாம்_
_*தொழுதுண்டு*_ _பின்செல் பவர்_
💐🙏🏼💐
Chittanandam said…
ஒவ்வொரு புதிருக்கும் ஒவ்வொரு முறையில் யோசிக்க வேண்டியுள்ளது. That's the problem. Congratulations to Dr.Vanchi.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்