Skip to main content

விடை 3435

விடை 3435
இன்றைய வெடி:        கால் அளவு அடை (3)
இதற்கான விடை:     எட்டு

மயக்கத்தால் தலை சுற்ற,  அந்த நான்கு எட்டுகளை எடுத்து வைத்து வீட்டு வாசற்படியை எட்டுவது அவனுக்கு ஏதோ செங்குத்தான மலையில் ஏறுவது போல் இருந்தது.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

1) 6:34:14 KB
2) 6:34:49 ஆர்.நாராயணன்.
3) 6:34:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:38:58 புவனா சிவராமன்
5) 6:44:43 ராஜா ரங்கராஜன்
6) 6:54:41 மைத்ரேயி
7) 7:09:33 எஸ்.பார்த்தசாரதி
8) 7:15:48 Siddhan Subramanian
9) 7:32:42 முத்துசுப்ரமண்யம்
10) 8:07:49 வி ன் கிருஷ்ணன்
11) 8:10:58 லட்சுமி சங்கர்
12) 9:19:34 ராஜி ஹரிஹரன்
13) 10:50:08 மு க பாரதி
14) 13:38:31 மு.க.இராகவன்.
15) 13:47:21 அம்பிகா
16) 14:24:56 உஷா
17) 16:04:14 மடிப்பாக்கம் தயானந்தன்
18) 16:23:33 மாதவ்
19) 16:26:53 ஆர். பத்மா
20) 18:00:38 மீ கண்ணன்
21) 18:20:38 மீனாக்ஷி
22) 18:35:42 கி மூ சுரேஷ்
23) 19:29:51 ரா. ரவிஷங்கர்...
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
*************************
*_நீட்டல் அளவு_*
நீட்டல் அளவையும் உடல் வழி வந்ததுதானா? எளிதில் எண்ணவே புலப்படுமே! அடிதானே, அடி அளவு! அடியில் இருப்பதுதான் அடியாகவும் அளவை ஆனது! அவ்வளவு நீளமா காலடி?

"அடியின் சுருங்கிய அளவு விரலம் (அங்குலம்)!
அணு எட்டுக் கொண்டது ஒரு துகள் (தூசி)
துகள் எட்டுக் கொண்டது எள்; எள் எட்டுக் கொண்டது ஒரு நெல்; நெல் எட்டுக் கொண்டது, ஒரு பெருமகன் கைப் பெருவிரல். 24 பெருவிரல் கொண்டது ஒரு கோல்''
இது சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் அடியார்க்கு நல்லார் உரை. (3:100)

அடி எடுத்து வைத்தலை " *எட்டுப் போடுதல்', " எட்டு வைத்தல்* ' என்பர். நின்ற இரண்டு கால்களுள் ஒன்றை வைக்கும் அளவில் வைத்து ஊன்றி, அடுத்த காலை எடுத்து ஊன்றுதல் *_ஓர் எட்டு_* ஆகும்.
ஒரு படைச்சால் ''(பர்லாங்கு) நீளத்தை நாம் காலால் 206 எட்டில் நடந்து கடக்கலாம்;
( உ.ம் : அவர் வீட்டீல் இன்று விசேஷமல்லவா? *ஒரு எட்டு* நடந்து போய் பார்த்துவிட்டு வரலாமா! )🚶🏽‍♂🚶🏽‍♂
*************************
_கால் அளவு அடை (3)_

_கால் அளவு_ = *எட்டு*

_அடை_ = *எட்டு*

( _*அடை*_
பொருள்:-
வினைச்சொல்
1.(ஓர் இடத்திற்குச் சென்று) சேர்தல் *எட்டுதல்.*
‘நீந்திச் சென்று கரையை அடைந்தான்’
2.(குறிப்பிட்ட வயதை, பருவத்தை) *எட்டுதல்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஓர் திரைப்படப் பாடலில் எட்டு அடி வைக்கலாமா? வாருங்கள்! 😌
_சின்ன மனிக் குயிலே_ _மெல்ல வரும் மயிலே_
_எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி_
............ .............
_குக்கூவெனக் கூவுவதேனடி_ _கண்மணி கண்மணி__ _பதில் சொல்லு நீ சொல்லு நீ_
............. .............
_பட்டுத் துணியுடுத்தி_ _உச்சி முடி திருத்தி_
_*எட்டு அடியெடுத்து*_ _எட்டி நடந்துல_
_உன் சேல காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட_
............. ...........
_கண்மணி கண்மணி_
_பதில் சொல்லு நீ_
*************************
💐🙏🏼💐
கொஞ்சம் எட்டாத விஷயமாய்ப்போச்சே! ​

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்