Skip to main content

விடை 3432

இன்று (16/9/2018) காலை வெளியான வெடி:
பரமசிவன்,  பின்னால் அரை,    நிர்வாணமாய் உடைத்த ,  அலங்கோலம் (4)
இதற்கான விடை:  பித்தன்  = பின்(னால்)  + த்த  (உடைத்த - உடை)

Comments

Raghavan MK said…
A peek into today's Riddle -->Tamil!
***********************
_பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது_
_கருடா சௌக்கியமா_
_யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்_
_எல்லாம் சௌக்கியமே.._ _கருடன் சொன்னது.._
_அதில் அர்த்தம் உள்ளது.._

_உயர்ந்த இடத்தில் இருக்கும் போது_
_உலகம் உன்னை மதிக்கும்_
_உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்_
_நிழலும் கூட மிதிக்கும்_

_மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று_
_மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது_
_அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது_
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

_பரமசிவன் பின்னால் அரை நிர்வாணமாய் உடைத்த அலங்கோலம் (4)_

_பின்னால் அரை_
= _பின்(னால்)_ = *பின்*
_நிர்வாணமாய் உடைத்த_
= *_உடைத்த_* வில் *_உடை_* யைக் களைந்து நிர்வாணமாய்
= ( ~உடை~ ) *த்த*
_அலங்கோலம்_
= ஒழுங்கீனம்
= *பின்* + *த்த* வை ஒழுங்குசெய்வோம்
= *பித்தன்*
_பரமசிவன்_
= *பித்தன்*
***********************
*தேவாரம் – திருமுறை 7*

*_பித்தா_* _பிறை சூடி_ _பெருமானே அருளாளா_
_எத்தால் மறாவதே நினைகின்றேன்_ _மனத்து உன்னை வைத்தாய்_
_பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர்_ _அருள் துறையுள்_
_அத்தா ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கிராமத்தில் மழை பெய்தால் ஊரெங்கும் கொண்டாட்டம்_
_நகரத்தில் மழை பெய்தால் தெருவெங்கும் **அலங்கோலம்*_
☔⛈🌧☔⛈🌧☔
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (30):

1) 6:05:50 லட்சுமி சங்கர்
2) 6:08:01 எஸ் .பார்த்தசாரதி
3) 6:11:30 கேசவன்
4) 6:17:25 KB
5) 6:23:10 Siddhan Subramanian
6) 6:33:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:55:20 ராஜா ரங்கராஜன்
8) 7:06:03 சங்கரசுப்பிரமணியன்
9) 7:09:20 முத்து
10) 7:09:47 மீ கண்ணன்
11) 7:11:31 ரமணி பாலகிருஷ்ணன்
12) 7:39:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 7:45:02 அம்பிகா
14) 7:45:41 மீனாக்ஷி
15) 7:56:35 விஜி ஶ்ரீனிவாசன்
16) 8:31:13 ரவி சுந்தரம்
17) 8:35:07 லதா
18) 8:37:38 வானதி
19) 8:40:19 சுந்தர் வேதாந்தம்
20) 8:42:43 வித்யா ஹரி
21) 9:16:16 ஆர். பத்மா
22) 9:35:41 மாலதி
23) 10:30:27 ராஜி ஹரிஹரன்
24) 10:31:09 கு.கனகசபாபதி, மும்பை
25) 10:42:33 மாதவ்
26) 13:46:37 மு.க.இராகவன்.
27) 14:27:48 ரா. ரவிஷங்கர்...
28) 14:46:13 மு க பாரதி
29) 18:57:01 மீ.பாலு
30) 19:07:32 விஜயா ரவிஷங்கர்
**********************
உஷா said…
This comment has been removed by the author.
உஷா said…

ஓ...எவ்வளவு முயன்றும் இன்று புதிரை விடுவிக்க முடியவில்லை. அருமையாகப் புனையப்பட்டிருக்கிறது

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...