Skip to main content

விடை 3442

இன்று காலை வெளியான வெடி:
மெதுவாக அடி  போட்டு  இடை  சுமந்து  அணை (3)
மெதுவாக அடி | போட்டு  இடை | சுமந்து,  அணை (3)

இதற்கான விடை:  தட்டு = தடு (அணை)  + ட்  (இடை போட்டு)
தட்டு, மெதுவாக அடி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:06:49 எஸ்.பார்த்தசாரதி
2) 6:07:46 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
3) 6:07:54 லட்சுமி சங்கர்
4) 6:08:04 சுந்தர் வேதாந்தம்
5) 6:09:54 நாதன் நா தோ
6) 6:10:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:22 மீனாக்ஷி கணபதி
8) 6:12:35 மாயா வேதாந்தம்
9) 6:17:17 KB
10) 6:17:24 V.R. Balakrishnan
11) 6:17:46 ஆர்.நாராயணன்
12) 6:18:30 சங்கரசுப்பிரமணியன்
13) 6:19:45 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:20:22 முத்துசுப்ரமண்யம்
15) 6:20:37 இரா.செகு
16) 6:28:41 மு.க.இராகவன்.
17) 6:30:21 ராமராவ்
18) 6:31:00 சதீஷ்பாலமுருகன்
19) 6:33:30 கேசவன்
20) 6:38:33 பிரசாத் வேணுகோபால்
21) 6:40:07 வானதி
22) 6:40:26 செந்தில் சௌரிராஜன்
23) 6:42:41 கி மூ சுரேஷ்
24) 6:42:49 ரவி சுப்ரமணியன்
25) 6:43:07 மீ.பாலு
26) 6:45:08 உஷா
27) 6:50:15 வின் கிருஷ்ணன்
28) 6:51:30 மீ கண்ணன்
29) 6:54:45 மீனாக்ஷி
30) 6:57:01 ராஜா ரங்கராஜன்
31) 6:59:46 லதா
32) 7:16:41 ராஜி ஹரிஹரன்
33) 7:18:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
34) 7:27:23 அம்பிகா
35) 7:34:50 மாதவ்
36) 7:36:35 மாலதி
37) 8:02:51 மு க பாரதி
38) 8:49:02 ஆர். பத்மா
39) 8:55:14 Siddhan Subramanian
40) 9:16:01 பா நிரஞ்சன்
41) 9:25:32 தேன்மொழி
42) 10:37:57 கோவிந்தராஜன்
43) 11:57:27 பானுமதி
44) 12:06:23 ரா. ரவிஷங்கர்..
45) 13:01:12 மயிலை வெங்கு
46) 16:30:26 மடிப்பாக்கம் தயானந்தன்
47) 16:48:48 ரமணி பாலகிருஷ்ணன்
48) 17:51:15 பானுபாலு
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_அடிக்கிற கைதான் அணைக்கும்_
_அணைக்கிற கைதான் அடிக்கும்_
_இனிக்கிற வாழ்வே கசக்கும்_
_கசக்கிற வாழ்வே இனிக்கும்_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*தடு* :
ஓடும் வாகனம், ஓடி வரும் ஆற்று நீர் முதலியவற்றை மேற்செல்லாதபடி செய்தல்.
‘ _ஆற்று நீரைத் *தடுத்து* நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது’_
_*அணை*_
= *தடு*
(ஒன்றைப் பலப்படுத்துவதற்காக அதை) ஒட்டி (மண்ணை) போடுதல்.
ஆற்றின் குறுக்கே நீரைத் *தடுத்து* தேக்கிவைக்கும் அமைப்பு.
*************************
_மெதுவாக அடி போட்டு இடை சுமந்து அணை (3)_
_போட்டு இடை_ = *ட்*

_அணை_ = *தடு*

_சுமந்து_ = *தடு+ட்*
= *தட்டு*

_மெதுவாக அடி_
= *தட்டு*
*************************இரண்டு அடியில் அதிரவைத்த புலவர்!

அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.

முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை *நான்கு அடி* கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?
ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.
பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.
கூட்டம் அயர்ந்து போனது.

பாடலைப் பாடினார் காளமேகம்

_*மெச்சுபுகழ்* *வேங்கடவா* ! *பாதியிலென்*_

_*இச்சையிலென்* *சென்ம மெடுக்கவா* *மச்சாகூர்*_

_*மாகோலா சிங்காவா* *மாராமா*_ *ராமாரா*_

_*மாகோபா லாமாவா வாய்*_*
கூட்டம் திகைத்தது. _“மாகோலாசிங்காவா_ _மாராமா ராமாரா மாகோபா லாமாவா_ _வாய்”!_ என்ன இது?

காளமேகமே விளக்கினார்:
 
_*மெச்சு புகழ்*_ – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

*_வேங்கடவா_* – திருவேங்கடம் உடையானே!
*_வெண்பாவில் பாதியில்_* – ஒரு வெண்பாவில் பாதியில்
*_என் இச்சையில்_* – எனது விருப்பப்படி
*_உன் சென்மம் எடுக்க_* – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற
*_வா_* – வந்து அருள்வாயாக!
*_மச்சா_* – மச்சாவதாரத்தைச் செய்தவனே
*_கோலா_* – வராஹாவதாரத்தைச் செய்தவனே
*_கூர்மா_* – கூர்மாவதாரத்தைச் செய்தவவே
*_சிங்கா_* – நரசிங்கனே
*_வாமா_* – வாமனனே
*_ராமா_* – பரசுராமா!
*_ராமா_* – தசரத ராமா!
*_ராமா_* – பலராமா!
*_கோபாலா_* – கிருஷ்ணா
*_மா ஆவாய்_* – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)
சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்