Skip to main content

விடை 3417

விடை 3417
இன்று காலை வெளியான வெடி:
தூங்காமல் கண்மணி நல்வழிக்கு வா (7)

இதற்கான விடை: விழித்திருந்து

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
Tamil .......👇🏽
*************************
*_கண்மணி_*
_கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே_
_பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா_ _நான் இங்கு சௌக்கியமே_
_உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது_
_அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது_
***********************
_தூங்காமல் கண்மணி நல்வழிக்கு வா (7)_

_கண்மணி_
= *விழி*
_நல்வழிக்கு வா_
= *திருந்து*
_தூங்காமல்_
= *விழி+திருந்து*
= *விழித்திருந்து*
************************ *_விழித்திருந்து_*
_பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்_
_பகலிரவாய் *விழித்திருந்து*_ _வளர்த்தாள்_
_வித்தகனாய் கல்விபெற வைத்தாள்_
_மேதினியில் நாம் வாழச் செய்தாள்_
_அன்னையைப் போலொரு தெய்வமில்லை அவள்_
_அடிதொழ மறப்பவர் மனிதரில்லை_ _மண்ணில் மனிதரில்லை_
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:02:44 லட்சுமி சங்கர்
2) 6:03:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:04:48 சங்கரசுப்பிரமணியன்
4) 6:05:38 ஆர்.நாராயணன்.
5) 6:05:49 அம்பிகா
6) 6:07:01 மீனாக்ஷி கணபதி
7) 6:11:37 திருமூர்த்தி
8) 6:12:56 வி ன் கிருஷ்ணன்
9) 6:13:28 ஹரி பாலகிருஷ்ணன்
10) 6:14:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:17:27 ராஜா ரங்கராஜன்
12) 6:18:03 மும்பை ஹரிஹரன்
13) 6:26:02 முத்துசுப்ரமண்யம்
14) 6:27:25 மு.க.இராகவன்.
15) 6:33:57 நாதன் நா தோ
16) 6:34:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17) 6:34:40 மீனாக்ஷி
18) 6:37:13 மாலதி
19) 6:37:44 பூமா பார்த்த சாரதி
20) 6:43:26 கேசவன்
21) 6:44:43 சாந்தி நாராயணன்
22) 6:46:34 ஶ்ரீதரன்
23) 6:54:55 சதீஷ்பாலமுருகன்
24) 6:59:07 கலாராணி
25) 7:01:27 Sandhya
26) 7:05:37 எஸ் பி சுரேஷ்
27) 7:15:01 சுந்தர் வேதாந்தம்
28) 7:22:14 கு.கனகசபாபதி, மும்பை
29) 7:26:30 எஸ்.பார்த்தசாரதி
30) 7:38:19 ரமணி பாலகிருஷ்ணன்
31) 7:44:45 மீ கண்ணன்
32) 7:49:22 திருக்குமரன் தங்கராஜ்
33) 8:20:54 மு க பாரதி
34) 8:43:56 ரங்கராஜன் யமுனாச்சாரி
35) 9:24:39 கி மூ சுரேஷ்
36) 9:40:31 ரவி சுப்ரமணியன்
37) 9:44:40 மடிப்பாக்கம் தயானந்தன்
38) 10:03:38 பாலா
39) 10:04:51 KB
40) 10:09:11 சுபா ஸ்ரீநிவாசன்
41) 10:09:54 மீ.பாலு
42) 10:52:50 ஶ்ரீவிநா
43) 10:56:17 வி சீ சந்திரமௌலி
44) 11:55:59 தி பொ இராமநாதன்
45) 12:02:42 சுப்பிரமணியம் வேங்கடராமன்
46) 12:38:39 ரவி சுந்தரம்
47) 13:30:58 V.R. Balakrishnan
48) 17:51:32 ராதா தேசிகன்
**********************
Sridharan said…
விழித்திருந்ததற்கு பலன் கிடைத்தது.
விளக்கம் அருமை.
Chittanandam said…
ஒரு சிறு ஐயம். கண்மணி எனுஞ்சொல் விழியைக் குறிக்குமா?
கண்ணிலுள்ள பாப்பா(Pupil)வைக் குறிக்குமா?
உஷா said…
விழி ok திருத்து ok நடுவில் வரும் த் க்கு விளக்கம்?
உஷா said…
விழி ok திருந்துok இடையில் வரும் த் க்கு விளக்கம்?
Raghavan MK said…
மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர்.

விகாரப்புணர்ச்சி புணர்ச்சி விகாரம்
**திரிபு -* *தோன்றல்*
பார்த்து +படி=
*பார்த்துப் படி**
திரிபு - குன்றல்
மர(ம்) வேர்
திரிபு - திரிதல்
பால் சோறு = பாற்சோறு
Vanchinathan said…
ஆமாம். 'த்' என்ற எழுத்துக்குத் தனியாக விளக்கமில்லை. ஆனாலும் இவை இயல்பாக இரு சொற்கள் சேரும்போது தோன்றுவதால் விட்டுவிடலாம் என்பது ஒரு நம்பிக்கை. This imperfection in the clue is caused by an error of omission. There are also some imperfections caused by error of commissions. To make the clue read smoothly like a normal sentence we bring in words like "for", "by" etc. For example the clue "Technical word used by American for end point? (8)" has solution TERM-IN-US , and "by" is simply a connective there. Definitely a clue would be more elegant if these imperfections are avoided.
Vanchinathan said…
சரிதான். முதலில் "தூங்காமல் கண்ணே" என்று எழுதினேன். ஆனால் "விழியே" என்று கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்று அதை விட்டேன்.
உஷா said…
Thank you for the explanation. Your clues are generally perfect to the last detail hence the question.
உஷா said…
நன்றி
என் கேள்வி தவறுதலாக இரண்டு முறை பதிவாகி விட்டது. மன்னிக்கவும். விளக்கத்திற்கு நன்றி

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்