Skip to main content

விடை 3438

விடை 3438
இன்று காலை  வெளியான வெடி:
ஒரு நட்சத்திரத்திடம் தன்னை மறந்த மரத் தொழிலாளி சூடத் தந்தது ? (5)

இதற்கான விடை: பூச்சரம்  = பூரம் + ச்ச (தச்சன் - தன்) 

விடை கண்டுபிடித்தவர்கள் 56 பேர்:
1)  6:01:05    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2)  6:02:27    எஸ்.பார்த்தசாரதி
3)  6:02:59    முத்துசுப்ரமண்யம்
4)  6:05:15    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5)  6:05:53    நங்கநல்லூர் சித்தானந்தம்
6)  6:07:19    லட்சுமி சங்கர்
7)  6:08:16    சதீஷ்பாலமுருகன்
8)  6:08:46    மீ கண்ணன்
9)  6:09:03    வி ன் கிருஷ்ணன்
10)  6:10:41    ரவி சுந்தரம்
11)  6:10:53    ராஜா ரங்கராஜன்
12)  6:14:55    கேசவன்
13)  6:15:36    உஷா
14)  6:15:55    மீனாக்ஷி
15)  6:16:12    மு.க.இராகவன்.
16)  6:16:48    மீனாக்ஷி
17)  6:17:46    KB
18)  6:21:55    ரவி சுப்ரமணியன்
19)  6:25:39    சுந்தர் வேதாந்தம்
20)  6:26:36    ராமராவ்
21)  6:34:22    சாந்தி நாராயணன்
22)  6:39:43    மீனாக்ஷி கணபதி
23)  6:40:03    விசீ சந்திரமௌலி
24)  6:40:32    ஶ்ரீவிநா
25)  6:42:31    லதா
26)  6:43:30    கே.ஆர்.சந்தானம்
27)  6:50:11    ஆர். பத்மா
28)  6:54:35    தி. பொ. இராமநாதன்
29)  6:58:07    Siddhan Subramanian
30)  6:59:30    சங்கரசுப்பிரமணியன்
31)  7:05:09    கோவிந்தராஜன்
32)  7:10:45    ஹரி பாலகிருஷ்ணன்
33)  7:16:03    மீ. பாலு
34)  7:16:50    ரமணி பாலகிருஷ்ணன்
35)  7:35:31    வானதி
36)  7:39:54    மாலதி
37)  7:44:38    ஆர்.நாராயணன்.
38)  7:55:04    சுபா ஸ்ரீநிவாசன்
39)  8:25:22    கலாராணி
40)  8:33:00    மு க பாரதி
41)  8:34:48    ரங்கராஜன் யமுனாச்சாரி
42)  8:51:25    தேன்மொழி
43)  9:00:00    பாலா
44)  9:12:12    ராஜி ஹரிஹரன்
45)  9:41:19    மாதவ்
46)  10:07:27    Padmashri
47)  10:18:20    கி மூ சுரேஷ்
48)  11:25:27    கு. கனகசபாபதி, மும்பை
49)  12:00:05    அம்பிகா
50)  12:08:24    மடிப்பாக்கம் தயானந்தன்
51)  12:46:35    புவனா சிவராமன்
52)  12:54:40    நாதன் நா தோ
53)  18:14:31    அனுராதா ஜெயந்த்
54)  18:15:03    ஏ.டி.வேதாந்தம்
55)  18:15:24    பத்மாசனி
56)  20:38:15    V.R.  Balakrishnan

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
தமிழ் - உதிரிவெடி.
*************************
*நட்சத்திரம்!*
நிலவுக்குழந்தை, வானத்தட்டில், மேக உணவை,
உண்ணும் பொழுது, சிதறிய பருக்கைகள்!
***************
விஸ்வகர்மா என்ற இந்த இனத்தை, கருமார், கன்னார், *தச்சர்* , சிற்பி, தட்டார் என்றும், கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கண்னார், மரவேலை - *தச்சர்* , சிற்பவேலை - சிற்பி, தங்கநகை தொழில் - பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் தொழில் இந்த அடிப்படையில்தான் இந்த பெயர் வந்தது என்று சொல்லலாம் . எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.
*************************
_ஒரு நட்சத்திரத்திடம் தன்னை மறந்த மரத் தொழிலாளி சூடத் தந்தது ? (5)_

_மரத் தொழிலாளி_
= _தச்சன்_
_தன்னை மறந்த_ = _தச்சன்_ ல் _தன்_ நீக்க = _தச்சன் -தன்_
= _(த)ச்ச(ன்)_ = *ச்ச*
_ஒரு நட்சத்திரத்திடம்_
= *பூரம்*
சூடத் தந்தது ?
= *பூரம்* + *ச்ச*
= *பூச்சரம்*
🌺🌸🌹🌷🌻🌼🌻🌷
_தான் அமர்ந்திருக்கும் மரத்தைத் தானே வெட்டுகிறான் -_ பழமொழி
_நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்_
_கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி_
_நீடுகல் வெற்ப!_ _நினைப்பின்றித் தாமிருந்த_
_கோடு குறைத்து விடல்_ .
நம்மவர் என்று நம்மை நாடி வந்து பேணிப் பாதுகாத்தவரைக் கெடுக்கப் பிறரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தல்
ஒளிரும் மணி உயர்ந்து தோன்றும் மலையை உடைய நாட்டு வேந்தனே!
*தன்னை மறந்த* நிலையில் மரத்தின் மேல் நுனிக் கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டுவது போல் முடியும்.
முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஓர் திரைப்பாடல்!
_முத்துக்களோ கண்கள்_ _தித்திப்பதோ கன்னம்?_
_சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை_ _தந்துவிட்டேன் என்னை_
_படித்த பாடம் என்ன உன்_ _கண்கள் பார்க்கும்_ _பார்வை என்ன?_
_பாலில் ஊறிய ஜாதிப்_ _**பூவை சூடத்*_* _துடிப்பதென்ன?__
🌺🌺🌺🌺🌺🌺🌺
பால்வெளி வீதியில்
பரிதியின் வரவிற்கு
பனிமழை தந்திட்ட
வரவேற்பு வளைவு!

மலைமகள் கூந்தலில்
பகலவன் சூட்டிய
வண்ணப் *பூச்சரம்* !

இழையேதும் இல்லாது
இயற்கை நெய்திட்ட
விலையில்லாப் பட்டு!

இசைக்கு ஏழு சுரம்!
எழிலுக்கு ஏழு நிறம்! என
இயற்கை நமக்கு
தந்திட்ட வரம்
வானவில்!
🌈🌈🌈🙏🏼🌈🌈🌈
*************************

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்