இன்று (10 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
தேவையான கொடிய நாட்டின் அடையாளத்தை அகற்ற முன்வந்தது அரசு (3)
இதற்கான விடை: போதிய = போதி + ய; (போதி மரம் = அரச மரம்)
ய = கொடிய - கொடி (நாட்டின் அடையாளம்)
தேவையான கொடிய நாட்டின் அடையாளத்தை அகற்ற முன்வந்தது அரசு (3)
இதற்கான விடை: போதிய = போதி + ய; (போதி மரம் = அரச மரம்)
ய = கொடிய - கொடி (நாட்டின் அடையாளம்)
Comments
*******👇🏽********
கம்பர் காலத்துப் பாண்டிய மன்னன் ஒருவன் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.
பொருள் கொடுத்தால் பாவலர்கள் போற்றுவார்கள். பொருள் கொடுக்காவிட்டால் தூற்றுவார்கள். சொன்ன சொல்லை மாற்றியும் பொருள் கூறுவர். ஆகவே பாவலர்கள் கூற்றுவனைக் காட்டிலும் *கொடியவர்கள்* என்று அவன் பாடியிருக்கிறான்.
_போற்றினும் போற்றுவர்_
_பொருள் கொடாவிடில்_
_தூற்றினுந் தூற்றுவர்_ _சொன்ன சொற்களை_
_மாற்றினு மாற்றுவர்_ _வன்கணாளர்கள்_
_கூற்றினும் பாவலர்_ _*கொடிய* ராவரே._
😟
*************************
_தேவையான கொடிய நாட்டின் அடையாளத்தை அகற்ற முன்வந்தது அரசு (3)_
_அரசு_ = *போதி* (அரச மரம்)
_நாட்டின்_ _அடையாளத்தை_ = *_கொடி_*
_அடையாளத்தை அகற்ற_
= _கொடிய-கொடி_ = *ய*
_முன்வந்தது (அரசு)_
*போதி* + *ய*
_தேவையான_
= *போதி+ய*
= *போதிய*
*************************
*போதி* மரம் ஒரு சமஸ்கிருத சொல் , தமிழில் அரசமரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் உள்ள போதி மரத்தை பௌத்தர்களால் மகாபோதி என அழைக்கப்படுகிறது. புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி (அரசமரம்) மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதி கோயில் பாதுகாப்பாக காக்கப்பட்டு, அனைத்துலக பௌத்தர்களால் புனித மரமாக வணங்கப்படுகிறது.🙏🏼
************************
*கொடியது* :
_கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!_
_கொடிது கொடிது வறுமை கொடிது_
_அதனினும் கொடிது இளமையில் வறுமை_
_அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்_
_அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்_
_அதனினும் கொடிது_
_இன்புற அவர்கையில்_ _உண்பது தானே__
(ஔவையார் தனிப்பாடல்கள் )
***********************
1) 6:04:04 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:32 ரவி சுந்தரம்
3) 6:07:24 முத்துசுப்ரமண்யம்
4) 6:13:44 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:15:21 சங்கரசுப்பிரமணியன்
6) 6:21:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:47:21 மீனாக்ஷி
8) 7:28:31 ஆர்.நாராயணன்.
9) 7:38:13 மாதவ்
10) 8:01:21 Siddhan Subramanian
11) 8:08:36 மு க பாரதி
12) 8:13:25 கேசவன்
13) 8:51:27 ராஜி ஹரிஹரன்
14) 8:53:58 மாலதி
15) 9:00:11 சதீஷ்பாலமுருகன்
16) 9:02:56 தேன்மொழி
17) 9:39:46 தி. பொ. இராமநாதன்
18) 10:00:42 அம்பிகா
19) 12:27:20 மீ கண்ணன்
20) 13:06:23 கோவிந்தராஜன்
21) 13:08:45 KB
22) 13:45:43 மீனாக்ஷி கணபதி
23) 15:42:51 ஆர். பத்மா
24) 15:59:33 மு.க.இராகவன்.
25) 16:15:14 ராதா தேசிகன்
26) 16:43:17 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 17:13:09 உஷா
28) 17:46:29 வானதி
29) 18:03:32 பானுமதி
30) 20:00:10 எல்வீ
**********************