இன்று (07 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
நீக்க இல்லாத கோடு இல்லாத கவரி நுழையும் (4)
இதற்கான விடை: அகற்ற = அற்ற + க (வரி)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (50):
1) 6:02:56 எஸ் பி சுரேஷ்
2) 6:02:59 ராமராவ்
3) 6:03:51 ரவி சுப்ரமணியன்
4) 6:08:04 மீனாக்ஷி கணபதி
5) 6:08:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:10:26 எஸ்.பார்த்தசாரதி
7) 6:12:01 ஆர்.நாராயணன்.
8) 6:15:51 சங்கரசுப்பிரமணியன்
9) 6:19:39 கி மூ சுரேஷ்
10) 6:21:09 ராஜா ரங்கராஜன்
11) 6:23:01 மடிப்பாக்கம் தயானந்தன்
12) 6:25:12 முத்துசுப்ரமண்யம்
13) 6:28:44 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:35:13 KB
15) 6:36:12 வானதி
16) 6:38:11 Siddhan Subramanian
17) 6:39:29 சாந்தி நாராயணன்
18) 6:42:22 தி. பொ. இராமநாதன்
19) 6:51:47 லதா
20) 6:55:46 மீ.பாலு
21) 7:02:18 ராதா தேசிகன்
22) 7:05:26 கார்த்திக்
23) 7:11:24 லக்ஷ்மி ஷங்கர்
24) 7:11:37 மீனாக்ஷி
25) 7:35:02 மீ கண்ணன்
26) 7:40:24 ரமணி பாலகிருஷ்ணன்
27) 7:54:18 மு க பாரதி
28) 8:02:26 கோவிந்தராஜன்
29) 8:22:47 சதீஷ்பாலமுருகன்
30) 8:29:45 கு.கனகசபாபதி, மும்பை
31) 9:30:26 Sandhya
32) 9:48:33 மாதவ்
33) 10:02:47 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 10:15:02 கேசவன்
35) 10:19:26 ஶ்ரீவிநா
36) 10:20:21 வி.சீ. சந்திரமௌலி
37) 10:22:04 மாலதி
38) 10:23:36 சுபா ஸ்ரீநிவாசன்
39) 10:35:03 மைத்ரேயி
40) 10:34:47 மைத்ரேயி
41) 10:50:07 மு.க.இராகவன்.
42) 11:02:44 Sucharithra
43) 11:09:46 பிரசாத் வேணுகோபால்
44) 11:12:05 பிரசாத் வேணுகோபால்
45) 12:24:29 ராஜி ஹரிஹரன்
46) 12:59:29 ஆர். பத்மா
47) 18:28:09 அம்பிகா
48) 18:37:15 பாலா
49) 20:23:02 வீ ஆர். பாலகிருஷ்ணன்
50) 20:57:37 சுந்தர் வேதாந்தம்
**********************
***********👇🏽**********
_பனி இல்லாத மார்கழியா_
_படை இல்லாத மன்னவனா_
_இனிப்பில்லாத முக்கனியா_
_இசையில்லாத முத்தமிழா_
_மழையில்லாத மானிலமா_
_மலர் இல்லாத பூங்கொடியா_
_கலை இல்லாத நாடகமா_
_காதல் இல்லாத வாலிபமா_
_*உதிரிவெடி இல்லாத*_
_*காலைப் பொழுதா*_
************************
_நீக்க இல்லாத கோடு இல்லாத கவரி நுழையும் (4)_
_இல்லாத_ = *அற்ற*
_கோடு_ = *வரி*
_கோடு இல்லாத கவரி_
= *க( ~வரி~ ) = க*
_நுழையும்_
= *க* *அற்ற* வில் நுழையும்
= *அகற்ற*
_நீக்க_ = *அகற்ற*
*************************
*கவரி* இந்தச் சொல்லின் பொருள் தேடி, தமிழ் அகராதிகள் ஒவ்வொன்றையும் புரட்டினேன். ‘ *_கவரி_* ’ என்றால் _விசிறி_ , _சாமரம்_ என்றுதான் பொருள் என்று அதுவரை நான் நினைத்திருந்தேன்.
புரட்டிப்புரட்டி படித்தபின்னர் தான் _எருமை, தேர், கவர்த்து, கவர்வது, சாமரை_ போன்ற வேறு பொருள்களும் இருப்பதை அறிந்து வியந்துபோனேன்.
‘ _கவரி_ ’ என்றால் எருமையையும் குறிக்கும் என்பதை அறிந்த போது வியப்பு இன்னும் அதிகமானது. இதுதான் தமிழின் தேடலில் கிடைத்த வெகுமதி.
அது மட்டுமா?
_கவரி வீசிய காவலன்_
மோசிகீரனார் என்ற புலவர் ஒரு சமயம் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையிடம் பரிசில் பெறுவதற்காக அவனது அரண்மனைக்குச் சென்றார். நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பு. அத்துடன் பசி மயக்கம், கண்கள் சோர்வடைகின்றன. சுற்று முற்றும் பார்த்தார். அரண்மனைக்குள் ஒரு கட்டில் தெரிந்தது. சட்டென்று சென்றவர், கட்டிலில் படுத்தார். தூக்கம் அவரது கண்களைத் தழுவியது.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை
நீராடி வரும் முரசை வெளிமண்டபத்தில் வைக்கும்படி கட்டளையிட்டுவிட்டு பக்கத்திலிருந்த கவரியை எடுத்துப் புலவர்பெருமானுக்கு வீச ஆரம்பித்துவிட்டான். மக்களின் காவலன் அல்லவா மன்னன். இந்தப் புலவனைக் காக்காமல் இருப்பானா? காவல் வேந்தன் கவரிவீசி தூக்கத்திலிருந்த புலவரையும் காத்தான்.
அப்போது நிகழ்ந்ததுதான் *_காவலன் கவரி வீசிய_* இந்த வியப்பூட்டும் நிகழ்வு. 💐🙏🏼💐
************************
_*கோடு* போட்டா கொன்னு போடு_
_வேலி போட்டா வெட்டி போடு_
_நேத்துவரைக்கும் உங்க சட்டம்_ _இன்னைக்கிருந்து எங்க சட்டம்_
_கோடு போட்டா கொன்னு போடு_
_வேலி போட்டா வெட்டி போடு_
இதனால்தான் *கவரி* யில் *கோடு* *அகற்ற* ப்பட்டதோ?! 😃
************************