தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's tamil riddle! ....
*************************
உத்தரவின்றி *உள்ளே* வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி *உள்ளே* வா
🌸🌸🌸
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது *காலை* எடுத்து *வைத்து* வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
*************************
_சிறு பகுதி உள்ளே காலை வைத்து வாடி (4)_
_சிறு பகுதி_ = *துண்டு*
_காலை_ = _கால்_ (1/4) _ஐ_ = *வ* _வை_
(தமிழ் எண் 1/4 =வ)
_சிறு பகுதி உள்ளே காலை வைத்து_
= *துண்டு* _உள்ளே_ *வ* _வை வைத்து_
= *துண்டு* + *வ*
= *துவண்டு*
_வாடி_ = *துவண்டு*
*************************
தோல்வி கண்டு *துவண்டு* விடாதே ...என் தோழா ....
தோற்றவரெல்லாம் *துவண்டு* போயிருந்தால்....
இவ்வுலகில் மாற்றங்களும் ....
ஏற்றங்களும் இல்லாமலே போயிருக்கும்.....
ஆதலால் தோல்வி கண்டு
*துவண்டு* விடாதே ...என் தோழா ....
துணிந்து நின்று சரித்திரம் படைப்போம்
என் தோழா ...............
(கலைச்சரண்)
*************************
_வாடி வாடி என்றழைத்தும் வாராமல் போனவளே_
_தேடித் தேடி யுன்னை நித்தமும் அலைகிறேனே_
_கூடிக் கூடிப் பேசிய மொழிகளை மறந்தனையோ_
_நாடி நாடி யுன் நினைவால் நலிந்தேனே_
_ஓடி ஓடி என் கால்களிரண்டும் *துவண்டனவே*_
_பாடிப் பாடி இன்று_
_திரிந்திடுவோம்_ _நிலவொளியில்_
_வாடி வாடி உயிர்த்தோழியே இனி பாராமுகம் வேண்டாம்_
💐🙏🏼💐-----எம்கேயார்.
Its okay! Need not worry!
Thanks for infn
காலை மடக்கி உட்கார்ந்திருப்போரும் உண்டு!
1) 6:03:50 முத்துசுப்ரமண்யம்
2) 6:11:14 ரவி சுப்ரமணியன்
3) 6:12:30 ரவி சுந்தரம்
4) 6:13:10 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:13:13 எஸ்.பார்த்தசாரதி
6) 6:14:43 கேசவன்
7) 6:15:21 KB
8) 6:15:45 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:17:23 ஆர்.நாராயணன்.
10) 6:21:44 V.R. Balakrishnan
11) 6:23:16 ராஜா ரங்கராஜன்
12) 6:24:04 மீனாக்ஷி கணபதி
13) 6:32:58 சுந்தர் வேதாந்தம்
14) 6:46:39 பீ.பாலு
15) 6:53:01 சங்கரசுப்பிரமணியன்
16) 6:59:06 மீனாக்ஷி
17) 7:35:18 கு.கனகசபாபதி, மும்பை
18) 8:43:35 ராஜி ஹரிஹரன்
19) 8:54:50 தி. பொ. இராமநாதன்
20) 10:16:17 கோவிந்தராஜன்
21) 10:42:14 மாலதி
22) 11:01:20 மீ கண்ணன்
23) 12:35:40 வி சீ சந்திரமௌலி
24) 12:35:48 மு.க.இராகவன்.
25) 12:37:05 ஶ்ரீவிநா
26) 13:07:58 பூமா பார்த்த சாரதி
27) 15:28:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
28) 15:52:10 மு க பாரதி
29) 17:22:32 மாயா
30) 20:19:12 எஸ் பி சுரேஷ்
விடை கிடைக்காமல் துவண்டுதான் போனேன். வெகு அருமையாகப் புனையப்பட்ட புதிர்