Skip to main content

விடை 3439

இன்று காலை வெளியான வெடி:
சிறு பகுதி உள்ளே காலை வைத்து வாடி (4)
இதற்கான விடை:  துவண்டு = துண்டு +  வா

(விடையளித்தோர் பட்டியல் அரை மணி தாமதமாக வெளியிடப்படும்).

Comments

Raghavan MK said…

A peek into today's tamil riddle! ....
*************************
உத்தரவின்றி *உள்ளே* வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்

உத்தரவின்றி *உள்ளே* வா
🌸🌸🌸
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது *காலை* எடுத்து *வைத்து* வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
*************************
_சிறு பகுதி உள்ளே காலை வைத்து வாடி (4)_

_சிறு பகுதி_ = *துண்டு*

_காலை_ = _கால்_ (1/4) _ஐ_ = *வ* _வை_
(தமிழ் எண் 1/4 =வ)

_சிறு பகுதி உள்ளே காலை வைத்து_
= *துண்டு* _உள்ளே_ *வ* _வை வைத்து_
= *துண்டு* + *வ*
= *துவண்டு*
_வாடி_ = *துவண்டு*

*************************
தோல்வி கண்டு *துவண்டு* விடாதே ...என் தோழா ....
தோற்றவரெல்லாம் *துவண்டு* போயிருந்தால்....
இவ்வுலகில் மாற்றங்களும் ....
ஏற்றங்களும் இல்லாமலே போயிருக்கும்.....
ஆதலால் தோல்வி கண்டு
*துவண்டு* விடாதே ...என் தோழா ....
துணிந்து நின்று சரித்திரம் படைப்போம்
என் தோழா ...............
(கலைச்சரண்)
*************************
_வாடி வாடி என்றழைத்தும் வாராமல் போனவளே_

_தேடித் தேடி யுன்னை நித்தமும் அலைகிறேனே_

_கூடிக் கூடிப் பேசிய மொழிகளை மறந்தனையோ_

_நாடி நாடி யுன் நினைவால் நலிந்தேனே_

_ஓடி ஓடி என் கால்களிரண்டும் *துவண்டனவே*_

_பாடிப் பாடி இன்று_
_திரிந்திடுவோம்_ _நிலவொளியில்_

_வாடி வாடி உயிர்த்தோழியே இனி பாராமுகம் வேண்டாம்_

💐🙏🏼💐-----எம்கேயார்.
Vanchinathan said…
விடையளித்தோர் பட்டியல் 10.30 மணிக்குதான் வெளியிட முடியும். பொறுத்துக் கொள்ளுங்கள்.
Raghavan MK said…


Its okay! Need not worry!
Thanks for infn
Chittanandam said…
ஆண்டவனின் கருணைக்கு எல்லையேயில்லை. இன்று புதிரைப் படித்தவுடனேயே விடை பளிச்சிட்டுவிட்டது.
Muthu said…
விடை தெரியாமல் துவண்டு போய் தலையில் துண்டு போட்டுக் கொண்டு,
காலை மடக்கி உட்கார்ந்திருப்போரும் உண்டு!
Chittanandam said…
எனக்கு இந்த நிலைமை பல முறை ஏற்பட்டுள்ளது.
Chittanandam said…
நீங்கள் ஒரு ஜாம்பவான். உங்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.
Vanchinathan said…
விடையளித்தவர்கள் (30 பேர்)விபரம்:

1) 6:03:50 முத்துசுப்ரமண்யம்
2) 6:11:14 ரவி சுப்ரமணியன்
3) 6:12:30 ரவி சுந்தரம்
4) 6:13:10 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:13:13 எஸ்.பார்த்தசாரதி
6) 6:14:43 கேசவன்
7) 6:15:21 KB
8) 6:15:45 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:17:23 ஆர்.நாராயணன்.
10) 6:21:44 V.R. Balakrishnan
11) 6:23:16 ராஜா ரங்கராஜன்
12) 6:24:04 மீனாக்ஷி கணபதி
13) 6:32:58 சுந்தர் வேதாந்தம்
14) 6:46:39 பீ.பாலு
15) 6:53:01 சங்கரசுப்பிரமணியன்
16) 6:59:06 மீனாக்ஷி
17) 7:35:18 கு.கனகசபாபதி, மும்பை
18) 8:43:35 ராஜி ஹரிஹரன்
19) 8:54:50 தி. பொ. இராமநாதன்
20) 10:16:17 கோவிந்தராஜன்
21) 10:42:14 மாலதி
22) 11:01:20 மீ கண்ணன்
23) 12:35:40 வி சீ சந்திரமௌலி
24) 12:35:48 மு.க.இராகவன்.
25) 12:37:05 ஶ்ரீவிநா
26) 13:07:58 பூமா பார்த்த சாரதி
27) 15:28:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
28) 15:52:10 மு க பாரதி
29) 17:22:32 மாயா
30) 20:19:12 எஸ் பி சுரேஷ்
உஷா said…


விடை கிடைக்காமல் துவண்டுதான் போனேன். வெகு அருமையாகப் புனையப்பட்ட புதிர்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்