Skip to main content

விடை 3436

விடை 3436
இன்று காலை வெளியான வெடி:

மேலிடம் சூழ விட்டுவிட்டு கணவர் மனதில் தோன்றுவது (5)

இதற்கான விடை:  உணர்ச்சி

 மேலிடம் =உச்சி
 விட்டு விட்டு கணவர்,   க ர் = ணர் 
உச்சி சூழ,      ணர் ச்சி 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
******
காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் பலர், எனக்கு பிடித்த பொருள் ஒன்றை நான் கங்கையில் *_விட்டுவிட்டேன்_* ஆகையால் இனி எனக்கு அதன் மீது பற்று இருக்காது என்று கூறுவர். ஆனால் உண்மை யாதெனில், கங்கா ஸ்நானம் செய்கையில் நமது ஆசை, செருக்கு, பொறாமை போன்ற தீய குணங்கள் அனைத்தையும் *விட்டுவிட்டு* வரவேண்டும். இதை தவறாக புரிந்துகொண்டு பலர் கங்கையில் எதையாவது *_விட்டுவிட்டு_* வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
🙏
_மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி_ _மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி_ _கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன்_ _*கணவர்* என்றார் தோழி_
*_கணவர்_* _என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி_
*************************
_மேலிடம் சூழ விட்டுவிட்டு கணவர் மனதில் தோன்றுவது (5)_

_மேலிடம்_ = *உச்சி*
_விட்டுவிட்டு கணவர்_
= (alternate letters) _( ~க~ )ண( ~வ~ )ர்_
= *ணர்*
_சூழ_
= _உச்சி சூழ ணர்_
= *உச்சி+ணர்*
= *உணர்ச்சி*
_மனதில் தோன்றுவது_ = *உணர்ச்சி*
*************************
*_உச்சி_* என்றதும் *_மனதில் தோன்றுவது_* உச்சிப் பிள்ளையார்! 🙏🏼

இராமாயணப் போருக்குப்பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராக
திகழ்கிறார்.!
💐🙏🏼💐
_*உச்சி* வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி_
_பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க_
_மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (37):

1) 6:08:44 ராமராவ்
2) 6:16:10 ரவி சுந்தரம்
3) 6:23:39 கி மூ சுரேஷ்
4) 6:24:10 சுந்தர் வேதாந்தம்
5) 6:26:47 மீனாக்ஷி கணபதி
6) 6:30:44 ராஜா ரங்கராஜன்
7) 6:36:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8) 6:42:54 ஆர்.நாராயணன்
9) 6:50:16 கேசவன்
10) 6:52:54 நாதன் நா தோ
11) 7:03:16 சுபா ஸ்ரீநிவாசன்
12) 7:13:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 7:13:53 ரவி சுப்ரமணியன்
14) 7:18:04 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 7:21:14 Siddhan Subramanian
16) 8:24:24 மைத்ரேயி
17) 8:38:51 கு.கனகசபாபதி, மும்பை
18) 9:10:26 மாதவ்
19) 11:14:55 ஆர். பத்மா
20) 12:09:57 சதீஷ்பாலமுருகன்
21) 12:42:16 மு.க.இராகவன்.
22) 12:43:49 அம்பிகா
23) 13:04:17 KB
24) 14:22:23 மு க பாரதி
25) 14:27:10 வானதி
26) 14:27:56 ஆர்.லதா
27) 14:28:01 லதா
28) 14:28:32 ஆர்.லதா
29) 15:20:07 கோவிந்தராஜன்
30) 17:42:38 ரமணி பாலகிருஷ்ணன்
31) 18:15:56 முத்துசுப்ரமண்யம்
32) 18:21:32 மீ பாலு
33) 18:21:46 மாலதி
34) 18:47:57 மீனாக்ஷி
35) 18:53:45 மீ கண்ணன்
36) 19:02:58 எஸ்.பார்த்தசாரதி
37) 20:55:49 சாந்திநாராயணன்
**********************
Chittanandam said…
முதலில் க வ வுடன் திண்டாடினேன். நல்ல காலம், ண ர் ராக ஏன் இருக்கக்கூடாது என யோசித்தேன்.
Muthu said…
மேலிடம் தேடி அரசாங்கம், சொர்க்கம், வைகுண்டம் எல்லாம் போய் வந்தேன்! விட்டுவிட்டு என்பது எழுத்துக்களை விட்டு விட்டு எடுக்கவேண்டும் என்று புரிந்தது. கணவ*ர்* என்று (கணவன் இல்லாமல்) சொன்னதும் உதவியது. ஆன்னலும் விடை உச்சிக்கு எட்ட வெகு நேரமாகிவிட்டது!
Raghavan MK said…



I also got the clue from கணவர்! When it was mentioned கணவர் instead of கணவன் I got a hint!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்