தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
******
காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் பலர், எனக்கு பிடித்த பொருள் ஒன்றை நான் கங்கையில் *_விட்டுவிட்டேன்_* ஆகையால் இனி எனக்கு அதன் மீது பற்று இருக்காது என்று கூறுவர். ஆனால் உண்மை யாதெனில், கங்கா ஸ்நானம் செய்கையில் நமது ஆசை, செருக்கு, பொறாமை போன்ற தீய குணங்கள் அனைத்தையும் *விட்டுவிட்டு* வரவேண்டும். இதை தவறாக புரிந்துகொண்டு பலர் கங்கையில் எதையாவது *_விட்டுவிட்டு_* வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
🙏
_மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி_ _மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி_ _கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன்_ _*கணவர்* என்றார் தோழி_
*_கணவர்_* _என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி_
*************************
_மேலிடம் சூழ விட்டுவிட்டு கணவர் மனதில் தோன்றுவது (5)_
_மேலிடம்_ = *உச்சி*
_விட்டுவிட்டு கணவர்_
= (alternate letters) _( ~க~ )ண( ~வ~ )ர்_
= *ணர்*
_சூழ_
= _உச்சி சூழ ணர்_
= *உச்சி+ணர்*
= *உணர்ச்சி*
_மனதில் தோன்றுவது_ = *உணர்ச்சி*
*************************
*_உச்சி_* என்றதும் *_மனதில் தோன்றுவது_* உச்சிப் பிள்ளையார்! 🙏🏼
இராமாயணப் போருக்குப்பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராக
திகழ்கிறார்.!
💐🙏🏼💐
_*உச்சி* வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி_
_பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க_
_மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1) 6:08:44 ராமராவ்
2) 6:16:10 ரவி சுந்தரம்
3) 6:23:39 கி மூ சுரேஷ்
4) 6:24:10 சுந்தர் வேதாந்தம்
5) 6:26:47 மீனாக்ஷி கணபதி
6) 6:30:44 ராஜா ரங்கராஜன்
7) 6:36:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8) 6:42:54 ஆர்.நாராயணன்
9) 6:50:16 கேசவன்
10) 6:52:54 நாதன் நா தோ
11) 7:03:16 சுபா ஸ்ரீநிவாசன்
12) 7:13:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 7:13:53 ரவி சுப்ரமணியன்
14) 7:18:04 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 7:21:14 Siddhan Subramanian
16) 8:24:24 மைத்ரேயி
17) 8:38:51 கு.கனகசபாபதி, மும்பை
18) 9:10:26 மாதவ்
19) 11:14:55 ஆர். பத்மா
20) 12:09:57 சதீஷ்பாலமுருகன்
21) 12:42:16 மு.க.இராகவன்.
22) 12:43:49 அம்பிகா
23) 13:04:17 KB
24) 14:22:23 மு க பாரதி
25) 14:27:10 வானதி
26) 14:27:56 ஆர்.லதா
27) 14:28:01 லதா
28) 14:28:32 ஆர்.லதா
29) 15:20:07 கோவிந்தராஜன்
30) 17:42:38 ரமணி பாலகிருஷ்ணன்
31) 18:15:56 முத்துசுப்ரமண்யம்
32) 18:21:32 மீ பாலு
33) 18:21:46 மாலதி
34) 18:47:57 மீனாக்ஷி
35) 18:53:45 மீ கண்ணன்
36) 19:02:58 எஸ்.பார்த்தசாரதி
37) 20:55:49 சாந்திநாராயணன்
**********************
I also got the clue from கணவர்! When it was mentioned கணவர் instead of கணவன் I got a hint!