Skip to main content

Posts

Showing posts from April, 2018

விடை 3293

இன்று (30/04/2018) காலை வெளியான வெடி: மு மு ? லொக் லொக் (3) இதற்கான விடை: இருமு = இரு மு,  இரண்டு மு . விடைகளைப் பற்றிய கருத்துகளை இட இங்கே செல்லவும் .

Solution to Krypton 26

This Sunday, 29th April 2018, the clue was: Confused male in a condition where progress is not possible (9) Its solution: STALEMATE = Male inside State. solved by the folllowing 27 persons.   6:02:40    S.Parthasarathy        6:03:28    Ramarao          6:05:12    Ravi Subramanian         6:05:35    Kesavan        6:06:10    Meenakshi Ganapathi        6:06:32    NT NATHAN        6:09:30    S.R.BALASUBRAMANIAN         6:10:24    Dr.B. Chandramouli        6:22:11    Siddhan        6:25:07    R.Narayanan        6:28:46    Senthil Sowrirajan  ...

விடை 3292

இன்று (27/04/2018) காலை வெளியான வெடி காவியப்  படைப்பில்  மூழ்கித் திகை (5) இதற்கான விடை: வியப்படை = கா வியப்  படை ப்பில்

உதிரிவெடி 3292

உதிரிவெடி  3292:  (29/04/2018) வாஞ்சிநாதன் ************   To see the English clue for this Sunday, click here.   காவியப்  படைப்பில்  மூழ்கித் திகை (5) Loading...

Solution to Krypton 25

Today's clue: Deny the existence of an entrance at Assam? (6) Its solution: NEGATE = Ne(northeast)  Gate Solved by these 32 persons:  6:06:33    Ramarao  6:07:28    Nanganallur Chittanandam  6:08:57    S.Parthasarathy  6:18:48    NT NATHAN  6:20:53    Ravi Subramanian  6:22:47    S.R.BALASUBRAMANIAN  6:25:10    R. Ravishankar.  6:26:05    K.Balasubramanian  6:35:16    Kalyani Desikan  6:37:27    Meenakshi Ganapathi  6:57:28    R.Narayanan.  7:06:12    Suba Srinivasan  7:07:13    Kesavan  7:32:28    Siddhan  7:38:04    Maithreyi  7:43:44    Ambika Shankar  8:12:51    Ravi Sundaram  9:12:32    Radha Desikan ...

விடை 3291

இன்று (27/04/2018) காலை வெளியான வெடி  ஜ‌னமேஜெயனின் மூதாதையன் கண்ட ஐந்தாம் பாண்டவன் (5) இதற்கான விடை:  பார்த்தன் = (கண்ட) பார்த்த + பாண்டவ‌ ன்

உதிரிவெடி 3291

உதிரிவெடி  3291:  (28/04/2018) வாஞ்சிநாதன்   ************ To see Saturday's English clue click here . ஜ‌னமேஜெயனின் மூதாதையன் கண்ட ஐந்தாம் பாண்டவன் (5) Loading...

விடை 3290

இன்று (27/04/2018) காலை வெளியான வெடி விரும்பி மெய்மறந்து அத்தி உண்டதில் முன்னேற்றம் (6) இதற்கான விடை:  அபிவிருத்தி = விருபி + அத்தி இப்புதிரையோ, பழம்புதிர்களைப் பற்றியோ பேச விவாதத்திற்கான இழை இங்கே இருக்கிறது . அங்கே தாவிச் சென்று கருத்தை அளியுங்கள். அப்படிச் செய்தால் கருத்துகள் பலரது கண்ணிலும் படும். சரியான விடையளித்த 52 பேர்: 1)  6:01:58    ரவி சுப்ரமணியன் 2)  6:02:01    ராமராவ் 3)  6:02:24    எஸ்.பார்த்தசாரதி 4)  6:03:20    ரங்கராஜன் யமுனாச்சாரி 5)  6:04:01    இரா.செகு 6)  6:04:01    மைத்ரேயி சிவகுமார் 7)  6:04:49    முத்துசுப்ரமண்யம் 8)  6:04:57    மைத்ரேயி சிவகுமார் 9)  6:05:02    ரவி சுந்தரம் 10)  6:05:32    வித்யா ஹரி 11)  6:06:13    ஆர்.நாராயணன். 12)  6:06:26    கல்பனா 13)  6:07:38    ராதா தேசிகன்...

விடை 3289

இன்று (26/04/2018) காலை வெளியான வெடி புதிராசிரியர் முன் ரத்தத்தால் வருவ‌து  புற்றில் வாழ்வது (4) இதற்கான விடை: கறையான் = கறை (ரத்தம் காய்ந்து தோன்றும் கறை)  + யான்  கரையான் என்று கூறினால் புதிருடன் ரத்த உறவு இருக்காது! அவ்விடைகளை ஒரு மாற்றுக் குறைவாகக் கொண்டு அவர்கள் பெயர்களைப் பின்னால் தனியே அளித்திருக்கிறோம். கருத்துகளை எழுத இங்கே சொடுக்கவும். 

உதிரிவெடி 3289

உதிரிவெடி  3289:  (26/04/2018) வாஞ்சிநாதன் ************ புதிராசிரியர் முன் ரத்தத்தால் வருவ‌து  புற்றில் வாழ்வது (4)  Loading...

விடை 3288

இன்று (25/4/2018) காலை வெளியான வெடி அன்போடு போஷாக்கு கலந்து பாட அவன் முடிவு (6) இதற்கான விடை: பாசத்துடன் = பாட + சத்து + (அவ)ன் இப்புதிரையோ, பழம்புதிர்களைப் பற்றியோ பேச விவாதத்திற்கான இழை இங்கே இருக்கிறது . அங்கே தாவிச் சென்று கருத்தை அளியுங்கள். அப்படிச் செய்தால் கருத்துகள் பலரது கண்ணிலும் படும்.

கருத்துரைகள், விவாதங்கள்

கருத்துரைகள், விவாதங்கள்   இதன் நோக்கம் வாட்சப் போல் ஓரளவு கருத்துகளைப் பரிமாற, பேச.  இதே இழையைப் (ஒரு மாதத்திற்காவது) பயன்படுத்தினால் எங்கேயும் புதியதாய் கருத்துகள் இட வேண்டாம். இந்த இழைக்கான தொடுப்பை  நான் இரவில் விடையளிக்கும்போது கொடுத்துவிடுகிறேன். விடைப் பட்டியல் பார்த்த பின்னர்  ஆர்வமுள்ள‌ர்கள்  அங்கேயிருந்து இங்கே தாவி வந்து பேசலாம். கருத்துரையில் ஆடியோ, வீடியோ எல்லாம் அனுப்பமுடியாது.  இந்த ஆலோசனை கூறிய ரவி சுந்தரத்துக்கு நன்றி.

விடை 3287

இன்று (24/04/2018) காலை வெளியான வெடி: இறவாத ஏசுவைப் பெற்றெடுத்தாள் இத்தாலியில் (3) இதற்கான விடை: மரியா (மரி = இறந்து போ). மேரி அன்னையை இத்தாலியரும் ஸ்பெயின் நாட்டினரும் மரியா என்று குறிப்பிடுகிறார்கள்.

உதிரிவெடி 3287

உதிரிவெடி 3287 (24/04/2018) வாஞ்சிநாதன் ******************* இறவாத ஏசுவைப் பெற்றெடுத்தாள் இத்தாலியில்  (3) Loading...

விடை 3286

இன்று (23/4/2018) காலை வெளியான வெடி: தோண்டுபவர் அவர்  கால் வெட்டிப் புதைத்தார் சிதைத்தார் வாழ்க (5) இதற்கான விடை: அகழ்வார்  = அர் (அவர் - வ) + வாழ்க உள்ளே சிதைந்து புதைந்துள்ள‌து. அகழுதல் என்றால் தோண்டுதல். கோட்டை மதிற்சுவரையொட்டி மேலும் பாதுகாப்புக்காக சுற்றிலும் நீர்நிலையிருக்கும். பள்ளம் தோண்டி உருவாக்கப்பட்ட அதை அகழி என்பார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்வதை அகழ்வாராய்ச்சி என்றே கூறப்படுகிறது. கொலைக் கதை ஆசிரியை அகதா கிறிஸ்டி ஒரு தொல்பொருள் நிபுணரை மணந்து அதனால் உண்டான நன்மை என்று கூறியது: "பழமையானதை என் கணவர் விரும்புவதால் ஒரு வசதி, எனக்கு வயது ஏற ஏற என்மேல் அவருக்கு ஆசை அதிகமாகிறது." திருக்குறள்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை இகழ்வார்ப் பொறுத்த‌ல் தலை --------- இரண்டாமாண்டு அடியெடுத்து வைத்த உதிரிவெடிக்கு வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி. இங்கே பங்கேற்பதற்குக் காசு பணமில்லை.  ஆர்வமுள்ள நண்பர்களை, உறவினர்களைப் புதிருக்கு அறிமுகப்படுத்துங்கள்.  

உதிரிவெடி 3286

உதிரிவெடி 3286 (23/04/2018) வாஞ்சிநாதன் ******************* உதிரிவெடியின் பிறந்த நாளான இன்று முதல் நாள் வீசப்பட்ட வெடியை மீண்டும் கொளுத்திப் போடுகிறேன். அன்று 20 உறுப்பினர்கள்தான் இருந்ததால் புதியவர்களுக்காக  இது: சுழி தொடர்ந்த சுடர் படர்ந்த கொடி எதனோடும் சேராத் தனி (3) சரி இன்றைய வெடி தோண்டுபவர் அவர்  கால் வெட்டிப் புதைத்தார் சிதைத்தார் வாழ்க (5) Loading...

Solution to Krypton 24

The clue for today: A person who has formally agreed that scattering gains with an account has no beginning   (9) Its solution: SIGNATORY =  gains + (s)tory Solved by the following 18 persons:       6:05:16    R.Narayanan       6:07:00    Ramarao       6:17:38    S.Parthasarathy       6:20:23    Ravi Sundaram       6:34:10    Lakshmi Shankar       6:38:51    Kesavan       6:45:27    K.BALASUBRAMANIAN       6:53:59    Chittanandam       7:24:25    S P Suresh       7:29:16    Maithreyi       7:49:47    S.R.BALASUBRAMANIAN ...

விடை 3285

இன்று காலை வெளியான வெடி: வதங்கி, கலங்கிக் களம் புகுந்த பார்த்தசாரதியின் கையில் இருப்பது (5)  இதற்கான விடை:   கடிவாளம் =  களம் + வாடி (வதங்கி)  பாரதப்போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியானதால் கிருஷ்ணன் கையில் கடிவாளம். இன்று விடையளித்த 38 பேரில் பத்து பேர் பார்த்தசாரதியுடன் தொடர்பு எப்படி என்று விளக்காததல் அவர்களுக்கு ஒற்றை நட்சத்திரமும் முழு விளக்கத்தை அளித்தோர்க்கு இரட்டை நட்சத்திரங்களும்  அளிக்கப்படுகிறது.            6:04:07    ராமராவ் **          6:06:29    லதா**          6:08:52    எஸ்.பார்த்தசாரதி *          6:09:04    ஆர்.நாராயணன்.**          6:17:47     ரவி சுந்தரம் **          6:17:58    சுந்தர் வேதாந்தம்**        ...

உதிரிவெடி 3285

வாட்சப் குழு மூலமாகத் தொடங்கி  எட்டு மாதங்களுக்குப் பின் வலைப்பதிவாக ஜனவரி 2018இல் உருவெடுத்த உதிரிவெடி  இன்று ஓராண்டு பயணத்தை  நிறைவு செய்கிறது. இப்பயணத்தில் தாமதமாகச் சேர்ந்தவர்களுக்கு சில பழைய வெடிகள்: *************************** ஊசி தைத்துக் கொண்டிருக்கும் உடலோ அங்கே வெந்து கொண்டிருக்கும் (2) மத்யமம் இல்லாமல் கணினியால் சீரமைக்கப்பட்ட ஒரு ராகம் (4)  மேலிருந்து கொட்டு கீழிருந்து குபுகுபு (3) நூலை வெளியிட்டு மனைவி வெளிப்படுத்தும் அதீதக் காதல் ? (6) ********************** ஞாயிற்றுக்கிழமைக்கான ஆங்கிலப் புதிர் இங்கே: இன்றைய சவால் புதிருக்கு சரியான  விளக்கத்தோடு விடையளித்தால் பாராட்டுக்குரியோர் பட்டியலில் இடம் பெறுவீர்கள். வதங்கி, கலங்கிக் களம் புகுந்த பார்த்தசாரதியின் கையில் இருப்பது (5) Loading...

Krypton 24

Krypton 24 (22/04/2018) Vanchinathan *****************    A person who has formally agreed that scattering gains with an account has no beginning   (9) . . . .

Solution to Krypton 23

Krypton 23 clue: Unassuming style  with  straight edges (6) Its solution: MODEST = mode + st  This was solved by 18 persons:      6:15:22    Srivina             6:20:58    Kesavan             6:26:09    S.R.BALASUBRAMANIAN             6:45:22    R. Ravishankar..             6:50:24    Siddhan             6:58:04    M.K.RAGHAVAN.             6:58:18    V N Krishnan             7:27:08    அன்பன்              7:38:29  ...

விடை 3284

இன்று காலை வெளியான வெடி: கோபமுற்று வெந்தயத்தை முதலில்  ரவையோடு சேர் (4) இதற்கான விடை:  வெகுண்டு   = வெ + குண்டு (ரவை, துப்பாக்கியில் போடுவது)

விடை 3283

இன்று (20/04/2018) காலை வெளியான வெடி: விரலில் இருப்பது இடித்து நடு விரல் நுனி வலிக்கும் (4) இதற்கான விடை:  மோதிரம் = மோதி (இடித்து)  + ர  + ம் நகம் + ர என்று அமைத்து பலர் விடை நரகம் என்று அனுப்பியிருக்கிறாற்கள். இதில் ஏதோ ஒன்று இடிக்கிறது. இடித்து என்பதை எப்படி இவ்விடையுடன் பொருத்துவது? சில நாட்கள் முன்பு புதிரில் பூண்டு வந்தது, நேற்று மஞ்சள் வந்தது அடுத்தது, இஞ்சி, மசாலா எல்லாம்  வருமோ என்று நேற்று கருத்துரையில்  கேட்டிருந்தார்கள்.   அப்படியே செய்துவிடலாம் என்று மசாலாவை இயற்கை முறையில் உரலில்  தயார் பண்ணப் போய்  விரல் நுனிவலிக்கும் படி இடித்துக் கொண்டதுதான் மிச்சம். நாளைக்கு மசாலா நிச்சயம்  கிடையாது.

உதிரிவெடி 3283

உதிரிவெடி 3283 20/04/2018 வாஞ்சிநாதன் ********************* விரலில் இருப்பது இடித்து நடு விரல் நுனி வலிக்கும் (4) Loading...

விடை 3282

இன்றைய வெடி 3282 ஒரு கிழங்கு முனை கிள்ளி ஒரு ஸ்வரம் சேர்ந்த தொகுப்பு (4) இதற்கான விடை:  மஞ்சரி = மஞ்சள் - ள் + ரி

உதிரிவெடி 3282

உதிரிவெடி  3282:  (19/04/2018) வாஞ்சிநாதன் ***************** ஒரு கிழங்கு முனை கிள்ளி ஒரு ஸ்வரம் சேர்ந்த தொகுப்பு (4) Loading...

விடை 3281

இன்று (18/4/2018) காலை வெளியான வெடி கால் பணம் சேர்ந்தால் அங்கே மூக்கும் முழியும் இருக்கும் (4) இதற்கான விடை:  வதனம் ;  கால் = 1/4 = வ;  பணம் = தனம் இன்று நான்கைந்து பேர் "அணங்கு" என்ற‌ விடையையும் இன்னும் சிலர் "லட்சம்" என்ற விடையையும் அனுப்பியிருந்தனர். லட்சம் என்பது லட்சணம் ("மூக்கும் முழியும்") என்பதைக் குறைத்துக் கொணரப்பட்டது என்று நினைக்கிறேன்.  ஆனால் லட்சம் எண்னைக் குறிக்குமே தவிர, பணத்தைக் குறிக்காது. அண‌ங்கு என்றால், தெய்வம், பேய், பெண். தமிழ்த்தாய் வாழ்த்தில் "தமிழண‌ங்கே" என்று வரும். இவ்வெடிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

உதிரிவெடி 3281

இன்றைய  (18/04/2018) வெடி வாஞ்சிநாதன் ******************* கால் பணம் சேர்த்தால் அங்கே மூக்கும் முழியும்  இருக்கும் (4) Loading...

விடை 3280

இன்று (17/04/2018) காலை வெளியான வெடி: மாலையில் மாறிடும்  படம் வீணான பகட்டு (6) இதற்கான விடை: ஆடம்பரம் = ஆரம் + படம்; ஆரம் = மாலை நிலையாமை அதிகாரத்தில் இதுவரை கிட்டாது புதிதாய்க் கிளியனூர் சுவடிகளில் கிடைத்த 11ஆம் குறள்: மாலையில் கோத்த மணியும் பகட்டேகாண் வேளையும் வந்திடுங்கால்  வீண்

விடை 3279

இன்று காலை வெளியான வெடி:  நூலின் தொடக்கத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு (4) முழுமையடையாத நூலின் தொடக்கத்தில் இருப்பது பூண்டு (4) இதற்கான விடை:  அணிந்து . ஒரு நூலின் தொடக்கத்தின் இருப்பது அணிந்துரை, முழுதாக வராத போது அணிந்து அதாவது பூண்டு. இந்த அணிந்துரை என்ற சொல் யாரோ அரைகுறை சென்ற நூற்றாண்டில் செய்ததாக இருக்கவேண்டும். முன்னுரை அல்லது முகவுரை சரி. வேறொருவர் அந்நூலைப் பற்றி எழுதுவதை அணிந்துரை என்கிறார். அது அந்நூலுக்கு அணி போல் என்றால் அணியுரை என்றுதானிருக்க வேண்டும். நானும் எனக்குத் தெரிந்த பகுபத இலக்கணவிதிகளை எல்லாம் கொண்டு அலசினேன் எதற்கும் பொருந்தவில்லை. அணிந்துரை என்பது சரியென்றால், வாழ்த்துரை என்பதை வாழ்த்தியுரை என்று மாற்ற வேண்டும். இதே போல்தான் தூய்மை இந்தியா என்று அரசு விளம்பரத்தில் வருகிற‌து. தூய இந்தியா என்று ஏன் அதைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள்? அவர்கள் இளமைப்பையனாக இருக்கும்போது, வெண்மை நிலவில் நனைந்து  இனிமைப் பண்டத்தை அதிகம் சாப்பிட்டு தனிமை மனிதனாக இருந்திருப்பார்களோ? விடையளித்தவர்கள்:   6:13:11        கி. பாலசுப்ரமணிய...

உதிரிவெடி 3279

இன்றைய (16/04/2018) வெடி வாஞ்சிநாதன் ********************** நூலின் ஆரம்பத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு  (4)  முழுமையடையாத நூலின் ஆரம்பத்தில் இருப்பது பூண்டு  (4)  Loading...

விடை 3278

இன்றைய வெடி: மாற்றி வருடு வெளியே இடையொடிய   குளிர்க்காற்று துளைத்துச் செல்லுதல் (5) இதற்கான விடை: ஊடுருவல் ஊதல் என்பது குளிர்க்காற்று. அதில் இடை (த) நீக்கப்பட்டு, வருடு, டுருவ என்று ஊடுருவியுள்ளது! ஊதக்காத்து வீசும் பாட்டொன்று:  (பார்க்க எதுவுமிருக்காது, சும்மா கேட்டால் போதும்) மொத்தம் 44 பேரில் ஒற்றை நட்சத்திரம் குறிக்கப்பட்ட நான்கைந்து பேர்  மட்டுமே விளக்கமில்லாமல் விடையளித்துள்ளார்கள்.      6:11:26    விஜயா ரவிஷங்கர் ***      6:12:02    இரா.செகு ***      6:12:10    லதா ***      6:12:16    கி. பாலசுப்ரமணியன் ***      6:12:42    மீனாக்ஷி கணபதி ***      6:13:04    ராமராவ்  ***      6:13:32    எஸ்.பார்த்தசாரதி ***      6:13:49    வானதி ***      6:13:5...

Solution to Krypton 22

Today's clue: Transparency act suspended outside is causing pain (7) It's solution: HU RTI NG R ight T o I nformation  act implements transparency; HUNG= suspended Solved by 9 persons:      6:15:03        S.Parthasarathy      6:15:38        Ramarao             6:44:22        NT Nathan             6:45:56        Kesavan             7:40:23        S.R.BALASUBRAMANIAN             8:43:57        S P Suresh             9:38:11        Meenakshi Ganapathi      ...

உதிரிவெடி 3278

இன்றைய (15/04/2018) வெடி வாஞ்சிநாதன் *********************** To see today's English clue go here. மாற்றி வருடு வெளியே இடையொடிய   குளிர்க்காற்று துளைத்துச் செல்லுதல் (5) Loading...

Solution to Krypton 14h April 2018

Today's clue: Narendara Modi's plan to eliminate a French painter. Solution: DeMONETisation Claude Monet  was a famous painter  from France. He was one of the pioneers of a new trend.  For a person used to wearing spectacles,  painting of this style look like we are looking at it without wearing the glasses. They have an unfinished look lacking sharpness and many painters of this school often painted in open air as opposed to painting in a studio. As  this Impressionist painter died long before our Prime Minister was born any hint that Modi ordered a hit on him was purely for the purpose wordplay. Here are the solvers:       6:05:06     R.  Ravishankar.       6:13:34     Ravi  Subramanian        6:17:19     S.Parthasarathy       6:22:56     R.  Rav...

விடை 3277

இன்றைய (14/4/2018) சவால் புதிர்: போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4) இதற்கான விடை: சாரமதி  இச்சவாலைத் திறமையாக ஏற்று சரியான விளக்கத்துடன் 37 பேர் விடையனுப்பியிருக்கிறார்கள்.  இசையில் விஷயமறிந்தவர்கள் தெளிவாக விளக்கத்தை எழுதியுள்ளார்கள். அதனால் நானேதும் எழுத முற்படாமல்  அப்படி இன்று மிக விரிவான  விளக்கத்தை அளித்த  வானதி   எழுதியதை அப்படியே உங்களுக்கு இடுகிறேன்: " போரில் கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக இருந்தார். அத்துடன் ம சேர்த்தால் சாரமதி  என்கிற ராகம்.  இதில் தியாகராஜ கிருதி மோக்ஷமு கலதா, சிந்துபைரவி என்னும் திரைப்படத்தில்  வரும் மரி மரி நின்னே என்னும் பாடலும் சாரமதி யில் அமைந்தது தான். பாடறியேன் படிப்பறியேன் ...."                      விடையளித்தவர்கள்.    6:06:14    எஸ்.பார்த்தசாரதி        6:06:38    லதா       6:08:16    ரா...

உதிரிவெடி 3277

விளம்பி வருடத்தின் முதல் வெடி (14/04/2018) வாஞ்சிநாதன் ************************ நேற்று சொல்லாமல் கொள்ளாமல் ஒரு கதை/கப்சா எழுதிவிட்டேன். இவ்விடம் சென்று படிக்கவும். ஆங்கிலப் புதிர் இல்லாத சனிக்கிழமையா? இதோ: கொஞ்ச நாட்களாக  வெடி எதுவும் மஹாபாரதம், ராமாயணம் பக்கமே போகவில்லை.  அதோடு ச,ரி,க,ம,ப, த, நி பக்கமும் போகவில்லை.  இன்று சனிக்கிழமை, சவால் புதிராச்சே, எதிலிருந்து புதிரை உருவாக்குவது இசையா, இதிகாசமா  என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.  கடைசியாக  ஏன் வம்பு என்று இப்படிச் செய்துவிட்டேன்: போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4) Loading...

விடை 3276

இன்றைய வெடி: ஐயர் தொடங்கவில்லை கலாமும் முடிக்கவில்லை குழப்பத்தில் டில்லியை ஆண்டவர் (5) இதற்கான விடை :  முகலாயர் = (ஐ) யர் + கலாமு (ம் )   எல்லோருடைய விடைகளும் பதிவான நேரத்துடன் ஒன்று விடாமல் பத்திரமாக இருக்கின்றன. கவனமாக வரிசைப்படுத்தி இரவு 10 மணிக்குமேல் பட்டியல் வெளியிடப்படும். கவனிக்கவும், நாளை காலை சவால் புதிரும் புதியதாக ஒரு விஷயமும் வெளிவர  இருக்கின்றன.

பூங்காவில் புறப்பட்ட புயல்

பத்து வருடங்களுக்கு முன்பு  திடீரென்று ஒரு விபரீத  ஆசை  எனக்கு விளைந்தது.  நாமும் ஒரு கதை எழுதினால் என்ன? இத்தனை கதைகள் படித்திருக்கிறோம், பல விதமான எழுத்தாளர்களின் எழுத்துநடையையும் கவனித்திருக்கிறோம், முடியாதா என்ன?  இருந்தாலும் இதை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்கும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படி. சுஜாதா சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதியுள்ளார். நிறைய பாருங்கள், கேளுங்கள், கவனியுங்கள், கதைக்குக் கரு கிடைக்கும் என்றார். பத்திரிகை, திரைப்படத்தில் எல்லாம் காதல்கதைகள்தான் நிறைய வருகின்றன. அதற்குதான் நிறைய மவுசு இருக்கும் போலிருக்கிறது என்று காதலர்களை கவனிக்க சென்னைக் கடற்கரைக்குச் சென்றேன்.  ஒரு காதல் ஜோடிக்குப் பத்தடி தள்ளி அலைகளைப் பார்த்து ஏதோ தத்துவவாதி போல் உட்கார்ந்து  கொண்டு காதைத் தீட்டிக் கொண்டேன். ஒரு சத்தமும் வரக் காணும். அந்தப் பையன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், பேச்சரவமே இல்லை. விழியாலே பேசி விரலாலே கோதி கழியாதோ இவ்விரவு என்று புதுக்கவிதைக்கும் எதுகை மோனைக் கவிதைக்கும் நடுவில் ஒ...

உதிரிவெடி 3276

உதிரிவெடி 13/04/2018 வாஞ்சிநாதன் ****************** குறிப்பு: நேற்று அறுபதுக்கும் மேற்பட்டோர் விடை கண்டுபிடித்துள்ளனர். இன்று எழுபதைத் தாண்டட்டும் (இருக்கவே இருக்கு, சனிக்கிழமை சவால் புதிர் பார்த்துக் கொள்ளலாம்] [ இன்று காலை 8.40வரை விடையளித்தவர்கள் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. அதனால் மீண்டும் ஒரு முறை வந்து விடையனுப்பவும். தொந்தரவுக்கு வருந்துகிறேன்.]. [ தவறுதலாக நீக்கப்பட்ட பெயர்களை மீட்டுவிட்டேன். அதனால்  காலையில் விடையளித்தவர்கள் மீண்டும் விடையளிக்க வேண்டாம்!] ஐயர் தொடங்கவில்லை கலாமும் முடிக்கவில்லை குழப்பத்தில் டில்லியை ஆண்டவர் (5) Loading...

விடை 3275

இன்று காலை (12/04/2018) வெளியான வெடி: முதல் ராசி தொடக்கத்திலிருந்து ஒரு மாதம் அறிவுள்ளவன் (2) இதற்கான விடை: மேதை = மே(ஷம்)  + தை

உதிரி வெடி 3275

இன்றைய (12/04/2018) வெடி வாஞ்சிநாதன் ************************  முதல் ராசி தொடக்கத்திலிருந்து ஒரு மாதம் அறிவுள்ளவன் (2) Loading...

விடை 3274

இன்று (11/04/2018) காலை வெளியான வெடி: செயல்பட முடியாமல் தடுமாற்றம் திட்ட வேண்டாம் தலைபோனாலும் மாற்றிவிடுகிறேன் (6) இதற்கான விடை: திண்டாட்டம் = திட்ட (வே)ண்டாம். சில நாட்களுக்கு முன் திண்டாட்டம் புதிர்களுடன் நான் நிறையத் திண்டாட வேண்டியிருந்தது. அப்புதிர்கள் எல்லாம் சும்மா வார்த்தை விளையாட்டுகள் அல்ல.   கைதிகளின் திண்டாட்டம் என்று  இரண்டு கைதிகளிடம் விசாரிக்கும் காவலர்கள் இருவரையும் தனித்தனியாக மற்றவர் மீது பழி சுமத்தச் சொல்லி தண்டனையைக் குறைக்க உபாயமாகச் சொல்கின்றனர். காவலரை நம்புவதா, வேண்டாமா? இது பொருளாதாரக் கொள்கையை விளக்கும் புதிர்.   இது போன்ற பல புதிர்கள் மட்டுமின்றி பல ஆழமான அறிவியல் சிந்தனைச் சோதனைகளை சுந்தர் வேதாந்தம் பல கட்டுரைகளாக எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். அதில்  தொலைக்காட்சிப் போட்டிகள், அறிவியல், கணிதம்,  என பலவற்றைத் தெளிவான தமிழில்  சுந்தர் வேதாந்தம் விளக்கியுள்ளார். அவற்றின் மூலம் தமிழும் எனக்கு விரிவடைந்தது bias என்ற  சொல்லுக்குக் கோடல் என்ற அழகான தமிழ்ச் சொல் அதில் கற்றேன். உதிரிவெடி மாதிரி  விளையாட்டைவிட சு...

உதிரிவெடி 3274

இன்றைய (11/04/2018) வெடி வாஞ்சிநாதன் ************** செயல்பட முடியாமல் தடுமாற்றம் திட்ட வேண்டாம் தலைபோனாலும் மாற்றிவிடுகிறேன் (6)  Loading...

விடை 3273

இன்று (10/04/2018) காலை வெளியான வெடி: இறுதிக் கட்டு நீக்கிய விடுதலை ஆட்டத்தில் அகத்திணை நாயகி (3) இதற்கான விடை :  தலைவி   = விடுதலை - டு பொருளதிகாரத்தில் அகப்பொருள் பற்றி பேசும்போது, பெயர் குறிப்பிடக் கூடாது என்று சொல்கிறது.   அதனால் தலைவன் தலைவி என்றே உரையாசிரியர்கள் பெயரின்றி எழுதிவார்கள். நல்ல வேளை மார்க் சுக்கர்பர்க் அல்லது  கூகிள் நிறுவத்தினர் போன்ற ஆசாமிகள் அகத்திணை நூல்களுக்கு உரையெழுதவில்லை. எழுதியிருந்தால் கூடவே, இது இவராயிருக்கும் என்று எழுதியிருப்பார்கள்.   தலைவனைப் பற்றிய  வர்ணனையிலிருந்து அவன் இப்படி இருப்பான் காவல் துறையினர் கொலையாளியைக் காண படம் வரைவது போன்று செய்திருப்பார்கள்.  ஓடைக் கரையோரம் வேங்கை மரத்துக்குக் கீழ் பொழுது சாயும் நேரம் தலைவியைச் சந்தித்த  நூறு பேரில் 83 பேர்   அவளுக்கு கொடுக்காப்புளி  வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் வாங்கிக் கொடுக்கிறீர்களா?  வாங்க விருப்பமென்றால்  வாய்க்காலில் ஒரு கல்லை எறியுங்கள்.  காத்திருக்கும் எங்கள் சேவகர்கள் வாய்க்காலின் அக்க...

உதிரிவெடி 3273

இன்றைய (10/04/2018) வெடி வாஞ்சிநாதன் ********** இறுதிக் கட்டு நீக்கிய விடுதலை ஆட்டத்தில் அகத்திணை நாயகி (3) Loading...

விடை 3272

இன்று (09/04/2018) காலை வெளியான வெடி நிதியமைச்சர் பொறுப்பில் இருக்கும்  தொல்காப்பியத்தின் பகுதி (7) (அல்லது ) (3,5) இதற்கான விடை: பொருளதிகாரம் (பொருள் அதிகாரம்) இதைப் பற்றிக்   குறு ம ள்ளுவர் தொல்காப்பியத்தை ஏன் படிக்க வேண்டும் என்று அவருடைய மாணாக்கர்க்குக் கூறிய தனி அறிவுரை கிளியனூர் ஓலைச் சுவடிகளில் கிடைத்துள்ளது. எழுத்ததிகாரம்: எழுத்தென்ப(து) யாதெனில்  ஓலையில் என்றும் அழுத்திட ஆணியாற் கீறு சொல்லதிகாரம்: சொல்லென்பது மாந்தர் சுகமாய்ப் புதிராக்க பல்பொருள் கொண்ட படைப்பு பொருளதிகாரம்: நிதிதனை ஆள நெறிமுறையும் காண்போம் அதிகாரம் மூன்றினில் ஆங்கு

உதிரிவெடி 3272

இன்றைய (09/04/2018) வெடி வாஞ்சிநாதன் ********** நிதியமைச்சர் பொறுப்பில் இருக்கும்  தொல்காப்பியத்தின் பகுதி (7) (அல்லது ) (3,5) Loading...

விடை, 3271

இன்று (8/4/2018) காலை வெளியான வெடி நேராகக் கிழிக்கப்படுவதா அங்கி? தலைப்பு கிழிந்த உடுக்கையுடன் கிராமத்தில் தொழில் செய்பவன் (4) இதற்கான விடை: கோடாங்கி நேராகக் கிழிக்கப்படுவது கோடு. (காகிதத்தில் வரையப்படும். ஆனால் மணலில் விளையாட, கோடு  கிழிக்கப்படும்). கேள்விக்குறியால் கோடா.  தலைப்பு கிழிந்த அங்கி = ங்கி. உடுக்கையுடன் வந்து பல பாட்டுகள் பாடி பயமுறுத்தி பேயை விரட்டச் செய்பவனைக் கோடாங்கி என்கிறார்கள். கோடங்கி என்றும் எழுதுகிறார்கள். புதிருக்கு இது வசதியாக இருப்பதாலும், கருவாச்சிக்குப் பேயோட்டுபவனை வைரமுத்து அப்படிக் குறிப்பிட்டதாலும் கோடாங்கி என்பதைப் பயன்படுத்திக் கொண்டேன். வைரமுத்து ப‌ல விவரங்களை அக்கதையில் (அவரது பார்வையில் காவியம்) வியக்கவைக்கும்படி விவரிக்கிறார். எந்த மரத்தில் உடுக்கை செய்வார்கள் (நான்கு மரங்களைக் குறிப்பிட்டார் அதில் ஒன்றான மஞ்சனத்தி என்பது மட்டும்தான் இப்போது எனக்கு ஞாபகம் இருக்கிரது. மஞ்சனத்தி என்பதை எங்கள் ஊர்பக்கம் நுணா மரம் என்பார்கள்). மாட்டின் தோல் இல்லை வயிற்றிலிருந்து கறியை நீக்கிய‌ பாகம்தான் கட்டுவார்கள். அதை ஒட்ட புளியங்கொட்டையை ஊறவைத்து அரைத்து ...

Solution to Krypton 20

Today's clue: A metal is  a container that is unable to contain a fruit (8) Solution:  PL -A TIN-UM  With the same idea I had two more  formulations. I could not decide which one to use.  Finally I decided by a lottery: A metal is a metal with an overflowing fruit A fruit holding a metal is a metal. The solutions were found by: S.Parthasarathy Ravi Subramanian Kesavan K.BALASUBRAMANIAN Sankarasubramanian Siddhan Ambika M.K.RAGHAVAN (Solution to Udhirivedi 3271  Tamil will be delayed by 10-15 minutes)

உதிரிவெடி 3271

இன்றைய (08/04/2018) வெடி வாஞ்சிநாதன் ******************* For Sunday's English clue click here. நேராகக் கிழிக்கப்படுவதா அங்கி? தலைப்பு கிழிந்த உடுக்கையுடன் கிராமத்தில் தொழில் செய்பவன் (4) Loading...

Solution to Krypton 19

Today's clue: Looks angrily as gravity brings down (7) Solution :  GLOWERS = G  LOWERS I realised a little later that the verb "brings down" being transitive makes the clue a bit awkward. What is being brought down?  I am personally unhappy with this. But, usually there is some licence for puzzles; is this one such situation where this is tolerated? Experts can give their views. Solved by these 17 persons:   6:03:42    K.BALASUBRAMANIAN      6:11:47    Ravi sundaram       6:11:49    S.Parthasarathy      6:12:12    S P Suresh        6:25:35    Ravi Subramanian       6:28:01    Srivina      6:34:05    Sundar Vedantham      6:55:18    Meenakshi Ganapathi      7:03:05 ...

வெண்ணிக்குயத்தியார் பாடிய வாகை (அல்லது) விடை 3270

வெண்ணிக்குயத்தியார் பாடிய வாகை (அல்லது) விடை 3270 கவிஞர்கள்  அரசனைப் புகழ்ந்து பாடி ஏதேனும் பரிசு பெற்றுச் செல்வது வழக்கம். அதுவும் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்த மன்னனை வாகைத்திணையில் பாராட்டிப் பாடுவது வழக்கம். கரிகாலன், சேரன் பெருஞ்சேரலாதனை வென்று வந்த போது வெண்ணிக் குயத்தி(யார்) பாடுகிறார்: களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய். அதோடு நிற்காமல், அப்படியே தோற்ற‌ அரசனையும் சொல்கிறார்:    நின்னினும் நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந்தோனே. ( புறநானூறு 66) சோழன் வீசிய வேல் சேரன் மார்பில் புகுந்து முதுகு வழியாய் வெளிவந்து முதுகிலும் காயமுற்றதை முதுகைக் காட்டி ஓடிய போது பெற்ற புண் என்று உலகோர் இழிவாக நினைக்கக் கூடாது என்று அவன் வடக்கிருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டான். அதனால் தோற்ற அவ்வரசன் உன்னைவிட நல்லவன் என்று சொல்கிறார். இதில் பல விஷயங்கள் இடிக்கின்றன. அப்படி வேல் பாய்ந்து மறுபுறம் வந்தபின் உடனே சாகவில்லையா? பல நாள் வடக்கிருந்துதான் சாகவேண்டுமா? இவ்வளவு தைரியமாக ஒரு பெண், அர...

உதிரிவெடி 3270

இன்றைய (7 ஏப்ரல் 2018) வெடி வாஞ்சிநாதன்  ******************** For today's English clue click here. நினைவிருக்கட்டும். இன்றைய  புதிர் பெரும் சவாலாக இருக்கும். விளக்கத்தோடு விடையளிப்போர்க்குப் பாராட்டுகள். பேசுவது இருக்குமிடம் முன் பேசுவது  மரக்கலம் (3) Loading...

விடை 3269

இன்று (06/04/2018) காலை வெளியான வெடி இவ்விடத்திலிருக்காத பேருந்து பாதி போன நாடு ஒன்று (6) இதற்கான விடை: இங்கிலாந்து = இங்கு + இலா +   (பேரு) ந்து பாரதியார் சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். நம் புதிருலகில் பல படிகள் மேலே சென்று தொலைவிலுள்ள இங்கிலாந்து தீவுக்கு ஒரு, இல்லை, அரைப் பேருந்தையே போக விட்டோம். இப்பேருந்து ஏர்பஸ் வகையென்பதால் பாலமே தேவையில்லை. இதைத்தான் அன்றே சொன்னான் வள்ளுவன்: எண்ணி நடக்காத(து)   ஏதுமிலை பேருந்தில் கண்ணயர்ந்தால் இங்கிலாந்து காண் (அதிகாரம்: 135: பிறன்நாடு விழைதல் ,  குறள்: 1342) நரிமேற்கிழார் உரை:  நம் மனம் தீவிரமாக ஒன்றை விழைந்தால் அதை அடைவதை  எதுவும் தடுக்க முடியாது.  பெரிய உந்து சக்தி (பேருந்து) இருக்கையில் கண்மூடி தியானித்தால்    இங்கிலாத, அதாவது பூவுலகில் இல்லாத, மேலுலகில் உள்ளோரைக் காணலாம்.  கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும்போது காரியம் கைகூடும்.   (குறிப்பு: கண்ணயர்ந்தால் என்பதைத் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்று சில உரையாசிரியர்கள் சொல்வது பொருந்தாது.  வள்ளுவப் பெ...

உதிரிவெடி 3269

இன்றைய (06/04/2018) வெடி வாஞ்சிநாதன் ********************** இவ்விடத்திலிருக்காத பேருந்து பாதி போன நாடு ஒன்று (6) Loading...

விடை 3268

இன்று (05/04/2018) காலை வெளியான வெடி ரஷ்யத் தலைவரை அடியில் விழ வைத்த நாடு (4) இதற்கான  விடை: பாரதம் = ர +  பாதம் டிரம்ப் ஆளும் அமெரிக்காவாலோ,  நச்சுப் பொருளை சாலிஸ்பரியில் வீசிக் கொலை முயற்சி செய்தார் என்று கூறிய இங்கிலாந்தாலோ   விளாதிமிர் புடினை அடி பணிய வைக்க முடியவில்லை. என்னவோ புதிரில் அவரைத் தந்திரமாகக் கவிழ்த்திடலாம். இதைத்தான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனமாக அன்றே கூறினார்: எதிரி ஒருவன் எவர்க்கும் வணங்கான் புதிரில்  புரட்டல் தலை   (அதிகாரம்: 134: பகையடக்கல் , குறள் எண்: 1334) விளாசி அடிப்பினும் வீழாதாம் தென்னை விழாத்திமிர் வேர்வெட்ட போம் (அதிகாரம்: 134: பகையடக்கல் , குறள் எண்: 1339 ) பரிமேலழகர்  உரை : சாட்டையால் பலமுறை விளாசி அடித்தாலும் தென்னை மரம் விழாமல் திமிரோடு நிற்கும். ஆனால் வேரினை வெட்டினால் சாய்ந்துவிடும்.

விடை 3267

இன்று (04/04/2018) காலை வெளியான வெடி ரவி எதிர்த்த மாயம் பெருத்த நஷ்டத்தால் வீண் (4) இதற்கான விடை:  விரயம்  விர =  ரவி  எதிர்த்த  யம்  =  மாயம் ('மா' = பெருத்த நஷ்டம்) இன்று சுமார் அறுபது பேர் சரியான விடைகளைக் கண்டனுப்பியுள்ளீர்கள்.  நினைவிருக்கட்டும். முதலாண்டு நிறைவு (22/4/2018)  வரை சனி, ஞாயிறுகளில்  அதிகச் சிக்கலான புதிர்களைத் தரவிருக்கிறேன். நான் விடுவதாயில்லை. தொடர்ந்து புதிர்களால் துளைத்துக் கொண்டிருக்கப் போகிறேன். விழலுக்  கிறைத்தநீர்போல் வீணாகா திங்கு தழலாய்த் தமிழார்வங் கொண்டவர்க்கு நாளும் எழுவேன் அதிகாலை இப்புதிரை யாக்க முழுகிக் கொணர்ந்திடுவீர் முத்து.

விடை 3266

இன்று (03/04/2018) காலை வெளியான வெடி சிதை மூட்டத் தேவையானது குடம் முதலில் உடைக்க ஒரு நதி (5) இதற்கான விடை:  கொள்ளிடம் = கொள்ளி  + (கு) டம்

உதிரிவெடி 3266

இன்றைய (03/04/2018) வெடி வாஞ்சிநாதன் *********************** சிதை மூட்டத் தேவையானது குடம் முதலில் உடைக்க ஒரு நதி (5) Loading...

விடை 3265

இன்று (02/04/2018) காலை வெளியான வெடி மெழுகு உள்ளே வர மஞ்சளாய் மலரும் மரம் (4) இதற்கான விடை:  பூவரசு = பூசு + வர ; பூசு = மெழுகு (வினைச் சொல்லாய்) அரசமரத்தின் இலைகளைபோன்ற அமைப்புடன் ஆனால் அழகான மஞ்சள் நிறப் பூக்கள் கொண்டதால் இம்மரம் பூவரசு என்று சொல்லப்படுகிறது. சிறுவயதில் கிராமத்திற்கு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் கொல்லைப் பக்கத்தில் இதன் இலைகளைப் பறித்து ஊதல் செய்து விளையாடுவோம். விசேஷம் வந்தால் அக்கா, அண்ணி எல்லாம் எங்களையெல்லாம் கூப்பிட்டு  தம்பிகளா நெறைய பூவரச எலை பறிச்சிட்டு வாங்கப்பா கொழுக்கட்டை சுடுவோம் என்று சொல்லுவோர்கள். அதிக உயரமில்லாத மரமாதலால்  எளிதில் பறித்துவிடுவோம். ஒவ்வொரு இலையிலும் எள்ளு பூரணமும் பருப்பு பூரணமும் வைத்து மடித்து இட்லிப்பானையில் வேக வைத்து கொழுக்கட்டையை சுடுவார்கள். பச்சையான இலை வெந்தபின் திட்டுதிட்டாய் சாம்பல் நிறமாகி  அதைப் பிரித்து நாங்களும் ஆவலாய் இலை வாசனை கொண்ட கொழுக்கட்டையைச் சாப்பிடுவோம்.  நான் பணிபுரியும் பல்கலைக் கழக வளாகத்தில் பூவரச மரம். பின்வரும் காணொளியில் முதல் 10-12 வினா...

Solution to Krypton 18

Today's clue: Ridiculous, disgusting, can follow the french (9) Solution: Laughable Solved correctly by the following 7 persons:   6:14:56    S Parthasarathy      6:32:13    Meenakshi Ganapathi      6:54:33    Kesavan      7:08:00    S P Suresh      7:39:29    NT NATHAN      7:55:02    K.BALASUBRAMANIAN     17:06:42   Suba Srinivasan

விடை 3264

இன்று (01/04/2018) காலை வெளியான வெடி அகராதியில் இரண்டாவது எழுத்துக்கு ஈடாக‌ பாதி தியாகம் ஏப்ரலில் தொடங்கும் (5) இதற்கான விடை: நிதியாண்டு = நிக‌ண்டு ‍- க + தியா (இந்தியாவில்) நிதியாண்டு  ஏப்ரல் முதல் நாளில் தொடங்கி அடுத்த மார்ச் 31இல் முடிவடைகிறது  [ நிகண்டு = ஒரு வகை அகராதி; எதுகைக்கேற்ற சொற்களை ஒன்றாகத் தொகுத்து கவிஞர்களுக்கு உதவும் வகையில் தொகுக்கப்பட்டது. நிகண்டுகள் பற்றிய பட்டியலை இங்கே காணலாம். இன்று ஒருவர்  வெறும் விடையையும் மற்றொருவர் பாதி விளக்கத்துடனும்  அளித்துள்ளார். பத்து பேர் சரியான விளக்கத்துடன் விடையளித்துள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுகள்.   6:08:01 எஸ்.பார்த்தசாரதி ***   6:10:58 வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்**      6:11:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்***      6:33:02 கு.கனகசபாபதி***   6:59:26 கி. பாலசுப்ரமணியன்***   7:16:06 எஸ் பி சுரேஷ்***      8:28:50 கேசவன்***      8:44:23 சுபா ஸ்ரீநிவாசன்***      10:41:15 நங்கநல்லூ...