இன்று காலை வெளியான வெடி:
காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5)
அதற்கான விடை: பண்டிதர் = பண் + டித + ர்
பண் = பண்ணை - ணை (பண்ணை = கோழி வளர்க்குமிடம்)
டித = சுழற்றிய தடி
ர் = கடைசியாக, சண்டியர்
தடி சுழற்றிய சண்டியரைக் கண்டு பயப்படாமல் புதிரில் இறங்கி 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளைக் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுகள்.
யாரந்த 50 பேர்? இங்கே சென்று பார்க்கவும்.
சண்டியர் கையில் தடியெடுத்து வந்தாலும்
உண்டில்லை யென்றிவ் வுதிரி வெடியதில்
அஞ்சாது நாள்தோறும் பங்கேற்போர் ஆர்வம்
பஞ்சிலே பற்றிய தீ.
Comments
*************************
*_கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்--_*
_பழமொழி_
***********************
"கண்டதை கற்பவன் *பண்டிதன்* ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் *பண்டிதன்* ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
*************************
_காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5)_
_காலில்லா_
= _அடிப்பகுதி இல்லாத_
= _*கடைசியெழுத்து* இல்லாத_
_கோழி வளர்க்குமிடம்_
= *பண்ணை*
_காலில்லாக் கோழி வளர்க்குமிடம்_
= *பண்ணை-ணை*
= *பண்*
_தடி சுழற்ற_ = *டித*
_சண்டியர் கடைசியாக_ = *ர்*
_படித்தவர்_
= *பண்+டித+ர்*
= *பண்டிதர்*
*************************
If possible please give us a crossword during this lockdown period. We will have something interesting to keep ourselves busy!