Skip to main content

விடை 4008


இன்று காலை வெளியான வெடி:

படித்தவள் அனுபவித்த ஒரு ஸ்வரத்திற்கு முன்பே கொடு (5)

அதற்கான விடை: பட்டதாரி = பட்ட + தா + ரி

பட்ட = அனுபவித்த
தா  = கொடு
ரி = ஒரு ஸ்வரம்

ரவி சுந்தரம் இலக்கண நூலில் தா, கொடு இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்.  ஒப்போர், உயர்ந்தோர் என்று யார் எச்சொல்லைப் பயன்படுத்தலாம் என விதி இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இக்காலத்தில் இரண்டையும் சமமாகவே பயன்படுத்துகிறோம். சிறுவர்கள், "கொடுடா, தாடா" என்று பேசுகிறார்கள்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

I submitted the answer today but It’s not there in the list.
Vanathy said…
Even my name is not there
Vanathy said…
Even my name is not there
Vanchinathan said…
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.
சுஜாதா எழுதிய விஞ்ஞான சிறுகதைகளில் ஒன்று. கால இயந்திரம் பாவித்து எதிர்கால மனிதன் ஒருவன் பழைய காலத்துக்கு சென்றுவிடுகிறான்.

அங்கே ஒரு ஆற்றின் கரையில் (பஃற்றுளி) ஒரு முனிவரை சந்திக்கிறான்.

"நீவிர் யார்?"

"நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன்."

"ஓ அப்படியா ?"

அவரிடம் ஒரு மாணவன் வந்து, "ஐயா ஈ தா கொடு பற்றிய விவரம் விளக்க வேண்டுகிறேன் !"

"உம் காலத்தில் இந்த சொற்கள் வழக்கில் உள்ளனவா ?"

"ஈ வழக்கொழிந்து விட்டது. தா சாதாரணமாக கேட்பது. கொடு அதிகாரமாக கேட்பது"

மாணவனை நோக்கி "எழுதிக்கொள். ஈ தா என்பதொப்போர் கூற்றே, கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே "

பள்ளிக்கூடத்தில் பரீட்ச்சைக்கு படித்த இலக்கணம் மறந்து விட்டது, இது மட்டும் நினைவில் நிற்கிறது. (நினைவிலிருந்து எழுதுகிறேன். குற்றம் குறைகள் எனக்கே சொந்தம். கற்பனை திறன் அவருக்கு சொந்தம் )
பட்டியல் வெட்டிவிட்டது. முழு வரி:

பட்ட = அனுபவித்த ; ஸ்வரம் = ரி ; கொடு = தா (ஈ தா என்பது ஒப்போர் கூற்றே! கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே! நன்னூல் சூத்திரமோ தொல்காப்பியமோ சுஜாதா கதையில படிச்ச ஞாபகம் ). முன்பே கட்டமைப்பு குறியீடு பட்டதாரி பெண்ணாகவும் இருக்கலாம்
I am surprised by this report about missing names. I do not edit this spreadsheet containing the answers. I simply provide a link to the list created by solvers.

May be those names are in the quarantine due to coronavirus....
கொஞ்சம் கூகிளினேன்.

ஈ தா கொடு என்று கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய

----

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே
தாவென் கிளவி ஓப்போன் கூற்றே
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

-----

ஆனால் இப்போதெல்லாம் இந்த வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை
Vanchinathan said…
தெலுங்கில் "ஈ" பேச்சு வழக்கிலேயே இருக்கிறது, கொடு/தா என்ற பொருளில். பழைய செய்யுள்கலில் "ஈயென இரத்தல்" இழிந்தது என்றே இருக்கிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்