Skip to main content

உதிரிவெடி 4000

*************************************
* உதிரிவெடி 4000  (மார்ச் 8, 2020)   *
*************************************
வாஞ்சிநாதன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         
பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5)


Comments

Chittanandam said…
இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று வாஞ்சியாரின் 4000-வது புதிர் வெளிவந்துள்ளது. 4000 புதிர்கள் அமைப்பது என்பது மிகவும் அசாத்தியமானதொன்று.

அனைத்துப் புதிர்களுமே ஒன்றையொன்று சளைத்ததல்ல.
இப்புதிர்களை அமைப்பதற்கு எல்லையற்ற கற்பனை வளமும், தமிழ்ச் சொல்லாற்றலும் வேண்டும். இவை வாஞ்சியாரிடம் பொதிந்துள்ளது.

அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுகள்.
Nathan NT said…
உண்மை, எங்கள் ஒவ்வொரு நாளும் தீபாவளி ஆனது வாஞ்சிநாதன் உதிரி வெடியால் தான்!
Vanchinathan said…
நன்றி சித்தானந்தம் அவர்களே. சொற்களில் அவ்வளவு அழகு ஏற்கனவே ஒளிந்திருப்பதைப்
பலர் கதை கவிதைகளில் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதையே நான் மறு சுழற்சி செய்கிறேன்.
Ambika said…
மிக அருமையான புதிர்! 4000 திவ்ய புதிர்கள்!!!
Anonymous said…
வாஞ்சியாழ்வாரின் நாலாயிர திவ்ய பிரபந்தம்?
RKE said…
Appropriate for International Women's Day today
நாலாயிரம்! பாராட்டுக்கள் !!!
Nagarajan said…
வாவ். 4000... அருமை... பாராட்டுக்கள்-ங்க வாஞ்சி.
Joseph said…
மிகவும் சிறந்த சாதனை. பாராட்டுகள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்