பொங்கலுக்குப் பிறகு தமிழ் வருஷப் பிறப்புக்கு ஒரு சரவெடி என்று திட்டமிட்டிருந்தேன். ஊரடங்கு உத்தரவால் நேரம் கிடைத்து திடீரென இது சாத்தியமானது.
ஆனால் இந்த வைரசால் நேரம் கிடைக்காமற் போனவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மேலே தொடர்கிறேன்:
நள்ளிர வென்றாலும் நாட்டிற் குழைத்திடுவார்
தள்ளி விலகாத தன்னார்வத் தொண்டர்கள்
அஞ்சிநாம் வீட்டில் அடங்கி இருக்கையில்
நெஞ்சில் நினைத்திடு நீ.
(இது கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் உந்துதலால் எழுதப்பட்டது).
இப்போது விடைகளுக்கு வருவோம்.
குறுக்காக
5. வாலில்லாக் காளை சாணி? (2) எரு [ எருது-து]
6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)
வைராக்கியம் = (கூ) ராக்கி + வையம்
7. அழகான காட்டுப்புற மார்வாடி பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)
வடிவான = வன (காட்டுப்புற) + டிவா (மார்வாடி - மார்)
8. ஒரு நாய் விளையாட்டில் வெல்வது சிம்ம இடை பரிமாற்றம் (3)
கோம்பை = கோப்பை - ப் + ம் (கோம்பை, ஒரு நாய் இனம்).
9. கரோனா தொற்றியதும் முகத்தை மறைத்துச் செய் (3) தும்மு!
11. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் முனை வைத்தாள் (3)
அபலை = அலை(திரி, வினைச்சொல்) + ப (ஞ்சு)
13. முன்னாள் மீன் முட்டையில் இருப்பதா மாட்டு வால்? (4) கருவாடு = கருவா + (மாட்) டு
16. மாதவி ஆசிரியரின் ஆயுதம்? (7) குருக்கத்தி (மாதவி என்றும் இத்தாவரத்திற்குப் பெயர். "அவன்தான் மனிதன்" படத்தில் இடம் பெற்ற, "அன்பு நடமாடும் கலைக் கூடமே" என்ற பாடலில் "மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே" என்ற வரிகளைக் கேட்கலாம். ங்கப்பாடல்களில் குருக்கத்தியை வலையில் தேடிக் கண்டுபிடிக்கலாம்.)
17. சொல் வாத்தியம் (2) பறை
நெடுக்காக
1. மரியாதையாகக் கால் கால் வைத்தாள் கள்ளி (4) திருவடி = திருடி + வ (= 1/4)
2. துவை, மனம் காயாதே, காமம் இல்லாத மாற்றம் அவசியம் (5) தேவையானது
3. நடத்தை இல்லாமல் செய் (3) போக்கு ("கொஞ்ச நாளாக அவன் போக்கே சரியில்லை", "கரோனா கிருமியைப் போக்க இன்னமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை")
4. அச்சத்துடன் நாணம் இடை தழுவ ஊரடங்கு உத்தரவின் போது
செய்யக் கூடாதது (4) பயணம் = பயம் + (நா) ண (ம்)
10. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம் இஸ்லாமியப்
பெண்ணுக்கு அடையாளம் (5) முகத்திரை = முத்திரை (அடையாளம்) + க (ன்னம்)
12. நிறைய பேரும் ஓரளவில் ஒரு பாதி விழுங்கினர் (4) பலரும் = பலம் (35 கிராம்) + (ஒ) ரு
14. ராகவனால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர் நண்பர்
பாதி முதுமையடையாதவர் (4) வாலிபர் = வாலி + (நண்) பர்
15. மத்யம நிலையுடன் இருக்கும் ராகம் (3) மகதி = ம + கதி
("அவன் கதியைப் பாருங்க, நடுத்தெருவுக்கு வந்துட்டான்")
இப்புதிரை ரசித்ததாகக் கருத்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி.
அருமை, சூப்பர், எக்ஸலன்ட், என்ற ஒற்றைச் சொல் கருத்திலிருந்து எஸ்பி சுரேஷின் விவரமான கருத்து வரை எல்லாவற்றுக்கும் நன்றி. "இரண்டைத் தவிர மற்ற எல்லாமும் எளிதாக இருந்தன" என்று கருத்து கூறிய ஒருவர் எந்த இரண்டு என்று கூறியிருந்தால் புதிரமைக்க எனக்குப் பயனளிக்கும்.
மார்ச் சரவெடி விடை கண்டுபிடித்தவர்கள்
1. லக்ஷ்மி ஷங்கர்
2. நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர்
3. முத்து சுப்ரமண்யம்
4. எஸ் பார்த்த சாரதி
5. திருமூர்த்தி
6. சதீஷ்பாலமுருகன்
7. கதிர்மதி
8. ஆர். நாராயணன்
9. கேசவன்
10. அம்பிகா
11. ராமராவ்
12. ராஜா ரங்கராஜன்
13. எஸ் பி சுரேஷ்
14 கனக சபாபதி
15 லக்ஷ்மி மீனாட்சி
16 அகிலா
17 உஷா
18 பிரசாத் வேணுகோபால்
19 பாலு
20 ஜோசப்அமிர்தராஜ்
21 ஆர் பத்மா
22 வானதி
23 ஶ்ரீகிருபா
24 லதா
25 மீனாக்ஷி கணபதி
26 மு க ராகவன்
27 நா தோ நாதன்
28 ஸந்த்யா
ஒரு தவறுடன் விடை அனுப்பியவர்கள்:
(பெரும்பாலானவர்கள் "நடத்தை இல்லாமல்" என்பதற்கு "போக்கு" என்ற விடையை அளிக்காமல் "நீக்கு" என்ற விடையை அளித்திருந்தனர்.)
கே பி.
ராம்கி கிருஷ்ணன்
மீ கண்ணன்
மீனாக்ஷி
எஸ் ஆர் பாலசுப்ரமணியம்
கே ஆர் சந்தானம்

Comments
*************************
கடினமானதும் ரசித்ததுமான புதிர்
*_4020. மாதவி ஆசிரியரின் ஆயுதம்? (6)_*
அடுத்து வருவது அருமையான கட்டமைப்புடன் கூடிய புதிர்கள்!
_4025. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம் இஸ்லாமியப் பெண்ணுக்கு அடையாளம் (5)_
_4029. ஒரு நாய் விளையாட்டில் வெல்வது சிம்ம இடை பரிமாற்றம் (3)_
*************************
4014. நிறைய பேரும் ஓரளவில் ஒரு பாதி விழுங்கினர் (4)
= *பலரும்*
4015. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)
வையம்+(கூ)ராக்கி
= *வைராக்கியம்*
4016. மத்யம நிலையுடன் இருக்கும் ராகம் (3)
மத்யம=ம
நிலை =கதி
ராகம்= *மகதி*
4017. சொல் வாத்தியம் (2)
சொல் = *பறை* =வாத்தியம்
4018. துவை, மனம் காயாதே, காமம் இல்லாத மாற்றம் அவசியம் (5)
காமம் இல்லாத
[ம]ன[ம் கா]யாதே,
=ன +யாதே
மாற்றம்indicator for
துவை+ ன +யாதே
= *தேவையானது*
4019. கரோனா தொற்றியதும் முகத்தை மறைத்துச் செய் (3)
தொற்றிய ( தும் மு) கத்தை
= *தும்மு*
4020. மாதவி ஆசிரியரின் ஆயுதம்? (6)
ஆசிரியரின்= குரு
ஆயுதம்= கத்தி
மாதவி = *குருக்கத்தி*
[ _குருக்கத்தி_ என்பது ஒரு மலர்க்கொடி. இது *மாதவி* ,குருகு, கத்திகை என்றும் குறிப்பிடப் பெறும். 'வசந்தமல்லி' என மக்கள் வழங்குகின்றனர். இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.]
4021. வாலில்லாக் காளை சாணி? (2)
எருது-து =எரு= *சாணி*
4022. அச்சத்துடன் நாணம் இடை தழுவ ஊரடங்கு உத்தரவின் போது செய்யக் கூடாதது (4)
பயம்+(நா)ண(ம்)
= *பயணம்*
4023. ராகவனால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர் நண்பர் பாதி முதுமையடையாதவர் (4)
ராகவனால் [ *நான் அவனில்லை* ]😧
=ராமனால்
வாலி+(நண்)பர்
*வாலிபர்*
4024. நடத்தை இல்லாமல் செய் (3)
நடத்தை
= *போக்கு* =இல்லாமல் செய்
4025. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம் இஸ்லாமியப் பெண்ணுக்கு அடையாளம் (5)
கன்னத்தில் ஒரு துளி
=க(ன்னம்)= க
இட்ட அடையாளம்
= முத்திரை
இஸ்லாமியப் பெண்ணுக்கு அடையாளம்
= *முகத்திரை*
4026. அழகான காட்டுப்புற மார்வாடி பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)
காட்டுப்புற= வன
மார்(வாடி) பாதியாய் எதிர்த்துப்
= டிவா
அழகான= வன+டிவா
= *வடிவான*
4027. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் முனை வைத்தாள் (3)
திரி = அலை
பஞ்சின் முனை=ப
ஆதரவற்றவள்
=அலை+ப
= *அபலை*
4028. முன்னாள் மீன் முட்டையில் இருப்பதா மாட்டு வால்? (4)
முட்டையில் இருப்பதா = கரு
மாட்[டு வா[ல்? = டுவா
முன்னாள் மீன் = *கருவாடு*
4029. ஒரு நாய் விளையாட்டில் வெல்வது சிம்ம இடை பரிமாற்றம் (3)
விளையாட்டில் வெல்வது
= கோப்பை
சிம்ம இடை = ம்
இடை பரிமாற்றம்
= கோப்பை-ப்+ம்
= *கோம்பை*
= ஒரு நாய்
4030. மரியாதையாகக் கால் கால் வைத்தாள் கள்ளி (4)
கள்ளி=திருடி
கால்= வ
மரியாதையாகக் கால்
= *திருவடி*
*************************
இருக்க வேண்டிஇருப்பதால்
இந்த மாதிரி புதிர்
கட்டங்களாக அனுப்புங்களேன்
ப்ளீஸ் வாஞ்சி சார்.
ரொம்ப இன்டரெஸ்டிங்காக
இருக்கு கண்டு பிடிக்க
மாதவி புதிரும் கோம்பை புதிரும் கடினமாக இருந்தது!
வாழ்க வளமுடன் என்றும் அன்பன்
மாதவி, புதிய விஷயம். உங்களின் விடையை படித்த பின், நான் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாமோ என்று தோன்றியது. அவ்வளவு தெளிவாக இருந்தது. மிக்க நன்றி. மேலும் இப்புதிர் போல நிறைய எதிர்பார்க்கிறேன்.