தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
இப்பொழுது புரிகிறது:
ச்சீ(2)+ஸ்வரம் அற்ற நிறம்(2)+ அற்ற(3) = அ நியாயம் கண்டு பொங்குதல் (7)
1) 6:12:22 கி மூ சுரேஷ்
2) 6:13:51 திருமூர்த்தி
3) 6:18:35 ஆர்.நாராயணன்
4) 6:40:28 பிரசாத் வேணுகோபால்
5) 6:41:10 கேசவன்
6) 6:56:02 எஸ் பி சுரேஷ்
7) 6:59:59 ராமராவ்
8) 7:06:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 7:38:42 மீனாக்ஷி கணபதி
10) 7:55:54 ரவி சுந்தரம்
11) 7:56:43 சுந்தர் வேதாந்தம்
12) 8:18:24 எஸ்.பார்த்தசாரதி
13) 8:19:34 பினாத்தல் சுரேஷ்
14) 9:48:37 அம்பிகா
15) 10:04:43 உஷா
16) 10:34:05 ஹரி பாலகிருஷ்ணன்
17) 18:41:28 கோவிந்தராஜன்
18) 20:53:39 ரவி சுப்ரமணியன்
**********************