Skip to main content

விடை 3521

இன்று காலை வெளியான வெடி:
காப்பு கட்டுவதற்குள் பாடம் கற்பி (4)
இதற்கான விடை: புகட்டு

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (43):

1) 6:01:17 முத்துசுப்ரமண்யம்
2) 6:02:43 இரா.செகு
3) 6:03:35 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:04:35 வானதி
5) 6:04:48 ரவி சுப்ரமணியன்
6) 6:05:07 Suba Srinivasan
7) 6:06:25 எஸ் பார்த்தசாரதி
8) 6:07:51 லட்சுமி சங்கர்
9) 6:08:51 ரவி சுந்தரம்
10) 6:09:38 ராமராவ்
11) 6:13:33 K.R.Santhanam
12) 6:14:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:15:14 உஷா
14) 6:17:38 அம்பிகா
15) 6:18:56 சாந்தி நாராயணன்
16) 6:21:36 சங்கரசுப்பிரமணியன்
17) 6:24:43 KB
18) 6:26:37 சுந்தர் வேதாந்தம்
19) 6:40:53 ஹரி பாலகிருஷ்ணன்
20) 6:41:51 ஆர்.நாராயணன்.
21) 6:43:19 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:54:16 Siddhan
23) 7:00:03 மீனாக்ஷி
24) 7:14:11 எஸ் பி சுரேஷ்
25) 7:14:14 மடிப்பாக்கம் தயானந்தன்
26) 7:21:44 மீ பாலு
27) 7:21:47 விஜயா
28) 7:22:17 வி சீ சந்திரமௌலி
29) 7:27:22 ஶ்ரீவிநா
30) 7:34:25 கேசவன்
31) 7:44:59 ரங்கராஜன் யமுனாச்சாரி
32) 8:00:45 மாலதி
33) 8:13:38 பத்மாசனி
34) 8:14:25 ஏ.டி.வேதாந்தம்
35) 9:14:38 மாதவ்
36) 9:49:40 கோவிந்தராஜன்
37) 9:57:53 கலாராணி
38) 10:35:19 ராதா தேசிகன்
39) 12:44:17 ஆர். பத்மா
40) 14:02:10 மு.க.இராகவன்.
41) 14:10:59 ராஜி ஹரிஹரன்
42) 17:39:48 மு க பாரதி
43) 19:41:39 மீனாக்ஷி கணபதி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*_காப்பு_*
முற்காலத்தில் நூல் இயற்றும்போது அந்தப் பணி சிறப்பாக நிறைவேற வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் வகையில் எழுதப்படும் முதல் பாடல்.
‘விநாயகர் காப்புடன் அபிராமி அந்தாதி தொடங்குகிறது’
🙏🏼🙏🏼🙏🏼
*_காப்பு கட்டுதல்:_*
காப்பு என்பது அரண் போன்றது. மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள உருவாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது, திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .
காப்புக் கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமானஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் காப்பு கட்டுதல். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

காப்பு கட்டுதல் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.
பொங்கலுக்கு முந்தின நாள் போகிப்பண்டிகை கொண்டாடும்போது வேப்பிலை, பூளைப்பூ அல்லது சிறுகண்பீளைப்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டு கூரைகளில் தோரணமாக கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் சொருகி வைப்பார்கள். பொதுவாக இவை மூன்றுமே கிருமிநாசினியாகும். நோய் நொடி வராமல் இருக்கவும், துஷ்ட தேவதைகள் அல்லது காத்து கருப்பு நம்மை தாக்காமல் இருக்கவும் இவற்றை பயன்படுத்துவார்கள். இதைத்தான் _காப்பு கட்டுதல்_ என்று சொல்கிறார்கள்.
****************
_காப்பு கட்டுவதற்குள் பாடம் கற்பி (4)_

_காப்பு கட்டுவதற்குள்_
=காப் *பு கட்டு*
_அதற்குள்_
= *புகட்டு*

_பாடம் கற்பி_
= *புகட்டு*
[கல்வி, நீதி, படிப்பினை முதலியவற்றை (ஒருவருக்கு) கற்பித்தல்.]
*********************
_கையில் காப்பு கயிறு கட்டுவதன் நோக்கம்_

இந்து மதத்தை பின்பற்றுபவர்கள், அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள்.
ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்:-

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றனஅந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம்.இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலர் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் காப்பு செய்து அணிந்து கொள்வார்கள். ஆனால் பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியாக சரியான ஒன்று.

இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெறலாம். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது.
💐🙏🏼💐
**********************
என்ன காப்பு கட்டிப்போமா? 😌

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்